Monday, July 15, 2013

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 1

ஈழப்பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறு அணையிலும், தமிழருக்குத் துரோகம் இழைத்த இந்தியா!

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் #வைகோ குற்றச்சாட்டு


“ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக” என ஐ.நா.வையும், இந்திய அரசை யும் வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில், 19.5.2012 அன்று பெரியார் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற உரிமை முழக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில்
இருந்து....

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்ற பாட்டு வரிகளை,

கருப்பு உடை தரித்தோர் உண்டு
கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள்

என்பதை நிலைநாட்டுகின்ற விதத்தில், அறிவாசான் தந்தை பெரியார் உரு வாக்கி ஊட்டி வளர்த்த சுயமரியாதையை, தன்மானத்தைத் தமிழர் தரணியில்,
மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து வருகின்ற, அடக்குமுறைகளுக்கு அஞ் சாமல், சிறைவாசத்தை நெஞ்சுறுதியோடு ஏற்று வருகின்ற தீரர்கள் இயக்கி டும் படை அணியாம் பெரியார் திராவிடர் கழகம் நடத்துகின்ற, தமிழ் ஈழ விடு தலை முழக்கப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டமாக நடத்துகின்ற, பல்லா யிரக்கணக்கானவர்கள் திரண்டு இருக்கின்ற இந்த மாபெரும் கூட்டத்தில், உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

காலத்தின் அருமை கருதி நெடுநேரம் உரையாற்ற வேண்டியவர்கள் எல்லாம் சுருக்கமாக, கருத்துச்செறிவு மிக்க சொற்பொழிவுகளை நிகழ்த்தி அமர்ந்து இருக்கின்றார்கள். கடந்த 48 மணி நேரத்துக்குள், இரண்டு சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. ஒன்று, இந்திய அரசு,தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு
ஏற்கனவே விதித்து இருக்கின்ற தடையை, அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து அறிவித்து இருக்கின்றது. மற்றொன்று, மே 17, 18, நம்  நெஞ்சமெல் லாம் வேதனை சூழ்ந்து இருக்கின்ற இந்த இரண்டு நாள்களை, சிங்கள இராணு வத்தினர்,தமிழர்களை வீழ்த்துவதற்கு வெற்றி விழா  கொண்டாடினார்கள்.

அந்த விழாவுக்கு, அழையா விருந்தாளியாக, இந்திய அரசின் தூதரக அதிகாரி ஒருவன், எட்டப்பர்களும் கருணாக்களும், இன்னும் இருக்கின்றார்கள் என் பதை நினைவூட்டுகின்றவகையில், இந்தத் தமிழ்நாட்டில் பிறந்து, இலங்கை யில் உள்ள தூதரகத்தில் வேலை செய்பவன் போய் கலந்து கொண்டான் என் பதை, விடுதலை இராசேந்திரன் அவர்கள், இங்கே குறிப்பிட்டார்கள்.

இரண்டு களங்கள். ஒன்று, ஆயுதங்களை ஏந்துகின்ற யுத்த களம். மற்றொன்று, சதுரங்கக் காய்களை நகர்த்துகின்ற அரசியல் களம். இந்த அரசியல் களத்தின்
மூலமாகக் கேட்கின்றோம். சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப் பை நடத்த, அனைத்து உலக நாடுகள் முன்வர வேண்டும் எனக் குரல் எழுப்பு கின்றோம்.அதற்கான ஆயத்தப் பணிகளை, ஐ.நா. மன்றமே செய்து,அதற்கான நடவடிக்கை எடு. தொடர்ந்து துரோகங்களை இழைத்து வருகின்ற, இந்திய அரசே நீயும், இந்தப் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவுக்குரல் எழுப்பு என்ற குரலை, பெரியார் திராவிடர் கழகத்தின் இந்தப் பொதுக்கூட்ட மேடை எடுத்து வைக்கின்றது.

இராஜபக்சே, இராணுவ வெற்றியைக் கொண்டாடுகிறானாமே? எந்தக் களத் தில் நீ தனியாக புலிகளை எதிர்த்து வெற்றி பெற்றாய்? உன் பின்னங்கால் பிடரி யில் அடிபட ஓட ஒட விரட்டி அடித்தார் பிரபாகரன். அக்னி அலைகளில் ஓடி னாய்; ஓயாத அலைகளில் ஓடினாய், யானை இறவிலே ஓடினாய். உன் முப் படைகளும் பிழைத்தால் போதும் என்று ஓடவில்லையா? நீ வெற்றி பெற்று விட்டாயா?இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான், இஸ்ரேல் என அணு ஆயுத வல்லரசுகள் உனக்கு ஆயுதங்களைத் தந்து, நவீன இராணுவத் தொழில்
நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து, சாட்டிலைட் கேமிராக்களைப் பயன் படுத்தி புலிகளின் பாசறைகளைக் காட்டிக் கொடுத்து, அதைத் தாக்குவதற்கு, உலகம் தடை செய்த குண்டுகளைத் தந்து, எப்பக்கத்தில் இருந்தும் மருந்து, உணவு உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்கு வர விடாமல் தடுத்த போதும் பிரபாகரன் வென்றார்.

எந்தப் பொருளும் கடல் வழியாகப் போகக்கூடாது என, புலிகளுக்கு வந்த கப்பல்களை நடுக்கடலில் சட்டவிரோதமாக இந்தியக் கடற்படை மூழ்கடித் தது. நீ கடந்த காலத்தில் செய்த துரோகங்களை மறந்து விட மாட்டோம்.

இங்கே அமர்ந்து இருக்கின்ற கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் எல்லாம், புலிகளுக்காகக் களங்களை அமைத்துத் தந்து, அதற்காக எத்தனையோ துன்பங்களை ஏற்றவர்கள். நாளை ஈழம் மலரு கின்றபோது, அதற்காக நாங்கள்தான் குரல் கொடுத்தோம் எனப் பல பேர் கிளம்பி வந்து விடுவார்கள்.கொளத்தூர் மணி ஐந்து ஆண்டுகள் சிறையில்
இருந்தாரே, அதை விளம்பரப்படுத்திக் கொள்கின்றாரா? கோவை இராமகிருட் டிணனும், ஆறுச்சாமியும், மூன்றரை ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் பூட்டப் பட்டுக் கிடந்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? விடுதலைப்புலி களுக்கு ஆயுதங்களைச் சேகரித்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். வெடி மருந்துகளை அனுப்பினார்கள் என்பதுதான்.

புலிகள் மீது பழி

என்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்குவதற்காக, என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொன்னார்கள். அதில் முதலாவது குற்றச் சாட்டு  என்ன தெரியுமா? எனது அரசியல் ஆதாயத்துக்காகக் கலைஞர் கருணா நிதியைக் கொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்பதுதான். ஒரு பொய்யான, அபாண்டமான அறிக்கையை, ஒரு உளவுத்துறை அதிகாரி மூலமாகத் தயாரிக்கவைத்து,டெல்லிக்கு அனுப்பச்செய்து, அதை மத்திய அரசு அண்ணா தி.மு.க. அரசுக்கு அனுப்பி வைக்க, அவர்கள், இப்படி ஒரு தகவல்
வந்து இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலை வருக்கு அனுப்பி வைக்க, இதை எதிர்பார்த்துக் காத்து இருந்தவர்கள், இன்னும் பத்து நாள்களில் முரசொலியில் அதிர்ச்சிச் செய்தி வரும் என்று  சொல்லிக் கொண்டு இருந்தவர்கள், என்னைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

ஆனால், அதற்காகாக யார் மீது பழி சொன்னார்கள்? விடுதலைப்புலிகள் இவ ரைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் என்று. அப்போது என் மீது சொன்ன
குற்றச்சாட்டுகளுள் ஒன்று, கோவையில் பொதுக்கூட்டம். பல்லாயிரக் கணக் கில் மக்கள் வெள்ளம். இராமகிருட்டிணனும், ஆறுச்சாமியும் சிறைக்கு உள்ளே
இருக்கின்றார்கள்.நான் பேசுகின்ற இடம்,சிறை மதில்களுக்குச்சற்றுத்தொலை வில். அங்கே என் நெஞ்சு வெடிக்கப் பேசினேன். சிறைக்குள் இருக்கின்ற என்
தோழர்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

உங்கள் முழக்கம், உங்கள் குரல், உங்கள் போராட்டம் தனிமைப் படுத்தப் படாது. என் குரல் உங்கள் செவிகளை எட்டட்டும். ஈழத்துக்காக நீங்கள் துன்பங் களை ஏற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்களோடு தோள் கொடுத்துப் போராட தமிழகத்து வாலிபர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றேன். என்னை நீக்குவதற்கு, இதுவும் ஒரு குற்றச்சாட்டு.

விடுதலைப் புலிகள் கட்சியைத் தொடங்கியது, மே 5.ம. தி.மு.க. உதித்தது மே 6.

அதெல்லாம் போகட்டும். ஏன் இந்திய அரசை நீங்கள் வசைபாடிக்கொண்டு இருக்கின்றீர்கள்? அவர்கள்தான்,ஜெனீவாவில் ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து வாக்கு அளித்து இருக்கின்றார்களே? அப்படி வருகின்ற ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாமே என்று நண்பர்கள் சிலர் நினைக்கலாம். அதுகுறித்து கொளத் தூர் மணி அணி விளக்கங்களை அளித்தார்.

இதே ஜெனீவாவில் இருபதாவது அமர்வில், கடந்த ஆண்டில் இலங்கையைப் பாராட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு வெற்றி பெற வைத்தது.அப்போது அந்த மனித உரிமைகள் கவுன்சிலில், இலங் கை ஒரு உறுப்பு நாடு அல்ல.கியூபாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, 29
நாடுகளின் ஆதரவைத் திரட்டி, இலங்கைக்குப் பாராட்டுத் தீர்மானத்தை நிறை வேற்றப் பாடுபட்டது இந்தியா.

இப்பொழுது, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு விசாரணை நடத்தலாம் என்ற நோக்கத்தில் ஒரு தீர் மானம் வரப்போகிறது என்பது தெரிந்தவுடன், இந்திய அரசாங்கத்தின் பிரநிநிதி, மனித உரிமைகள் கவுன்சிலில் என்ன பேசினார்? பிப்ரவரி 27 ஆம் தேதி என்று
கருதுகிறேன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில், மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று பேசினார்.

இந்திய அரசே, உன்னை நாங்கள் மன்னிக்க மாட்டோம்; எங்கள் தலைமுறை யும் மன்னிக்காது. ஜெனீவாவில் மேலும் துரோகம் செய்யக் காத்து இருக்கின் றாய் என்று, என் நெஞ்சத் தணலைக் கொட்டி, இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இலங்கையின் அனுமதியோடு, ஆலோசனையோடு, இப் போது அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இலங்கை அரசு அறிவித்த ஒரு பித்தலாட்ட ஆணையம் பரிந்து உரைத்த கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக, இவர்கள் தீர்மானம் போடுகிறார் களாம்.

ஆகவே, நண்பர்களே, இந்திய அரசு தன் போக்கை மாற்றிக்கொண்டு விட்ட தாகவோ, செய்த பாவத்துக்குக் கழுவாய் தேட முயற்சிப்பதாகவோ, தவறு களைத் திருத்திக் கொள்வதாகவோ தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.

எங்கள் இரத்த உறவுகள் கொல்லப்பட்டு விட்டார்களேஎன உலகம் முழுமை யும் இருக்கின்ற நம் சகோதரர்கள் எதிரொலிக்கின்ற வேதனைக்குரலை, தீரா நதி இதழின் வெளியீட்டை,இந்த மேடையில் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப் படிக்கின்றபோது, நெஞ்சம் விம்முகிறது,மனம் குமுறு கிறது, இதயம் வெடிக்கின்றது.

இவ்வளவு துயரங்களை எதிர்கொண்டு இருக்கின்றார்களே, அவர்களுக்காகக் கண்ணீர் சிந்த, அவர்களது குறிக்கோளை வென்றெடுக்க, பாரிசிலே,  லண்ட னிலே, கனடாவிலே, ஆஸ்திரேலியாவிலே, தமிழகத்தின் தலைநகரிலே, பல பகுதிகளிலே, உலகில் பல பகுதிகளில் வாழுகின்ற தமிழர்கள் கண்ணீரைக்
கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களே, இந்த நேரத்தில், நேற்றைய தினம், மே 18ஆம் தேதி, இந்திய அரசு என்ன செய்தது தெரியுமா? சிங்களவன் நடத்திய வெற்றி விழாவில், இந்தியத் தூதரக அதிகாரி போய்க் கலந்து கொண்டான்.

நேற்று, இந்திய அரசின் பிரதிநிதியாக, டெல்லியில் இருக்கின்ற நேஷனல் மியூ சியம், தேசிய அருங்காட்சியகத்தின் பொது மேலாளர், பிரவீன் வஸ்தவா
என்பவன், கொழும்பில் இலங்கை அரசாங்கத்தோடு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு இருக்கின்றான்.யாரோடு? இலங்கை அரசின் புத்த சாசனம் மற்றும் சமயத்துறைச் செயலாளரோடு, கேசியஸ் ஹெராத் என்ப வனோடு கையெழுத்துப் போட்டு இருக்கின்றான்.

என்ன ஒப்பந்தம்? இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அன்பைப் போதித்த மனித குலத்தின் அமைதி வாழ்க்கைக்கு வழிசொன்ன புத்தரின்
ஈமச்சாம்பலை, எட்டுப் பகுதிகளாகப் பிரித்து, எட்டு இடங்களில் வைத்தார்கள் என, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய ஒரு எழுத்தாளர் எழுதிய அந்தச்
செய்தியின்படி, கபிலவஸ்துவை ஆண்டு கொண்டு இருந்த சாக்கிய மன்னரி டமும் ஒரு பகுதி தரப்பட்ட தாகவும், அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், தொல் பொருள் துறையின் தலைவராக இருந்த ஒரு வெள்ளைக்காரன், 19 ஆம் நூற் றாண்டு செய்த அகழ்வு ஆராய்ச்சியில் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததாகவும், அதை டெல்லியில் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்து
இருக்கின்றார்கள்.

கொலைகாரக் கொடியவன் இராஜபக்சே, மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினானாம். புத்தருடைய எலும்புத்துகள்களை, ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் இருந்து, செப்டெம்பர் 5 வரை, இலங்கை முழுவதும் கொண்டு போய் நாங்கள் காட்ட வேண்டும். இந்தியாவில் இருந்து அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டானாம்.அதை ஏற்றுக்கொண்டு, மன்மோகன் சிங் அரசு அனுமதி
கொடுத்து இருக்கின்றது.

தொடரும் ....

No comments:

Post a Comment