ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?
நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:
மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.
உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.