Showing posts with label விழுப்புரம். Show all posts
Showing posts with label விழுப்புரம். Show all posts

Tuesday, December 3, 2013

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!
பொதுவாக்கெடுப்பில் தமிழ் ஈழம் மலரச் செய்வோம்!!

விருத்தாசலம் இரயில் மறியல் கிளர்ச்சியில் #மதிமுக ஆ.வந்தியத்தேவன் சூளுரை

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந் து கொள்வதைக் கண்டிப்பதற்காக, முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல்
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்த்தெழுந்து போராட அணி திரண்டு வந் துள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகம், வணிகர்சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழுவுரிமைக்கட்சி, தமிழ் தேச பொது உடமைக் கட்சி, மனித நேய மக் கள் கட்சி, ஆகிய அமைப்புகளின் தோழர்களுக் கெல்லாம் கனிவான வாழ்த்து
களையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இப்போது போராடிக் கொண்டு இருக்கி றோம். ஆனால், இது மட்டுமே நமது கோரிக்கை அல்ல! காமன் வெல்த்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் கழுத்தைப் பிடித்து
வெளியேற்ற வேண்டும்.இனப்படுகொலை நடந்த இலங்கைத் தீவில் மாநாட் டை நடத்தக் கூடாது. கொடியவன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பொது வாக் கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போருக் குப்பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் அரச வன் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காகப் போராடி வருகிறோம்.

Monday, November 18, 2013

விழும்புரம் மாவட்டத்தில் ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது-படங்கள்

விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில #மதிமுக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி பொதுக்கூட்டம், விழும்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் நேற்று (17.11.2013) நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு-தெற் கு மாவட்டங்களின் சார்பாக ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதியாக பொதுச்செய லாளர் #வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தொழிலாளர் முன்னணித் தலைவர் புதுவை செ.முத்து, மாவட்டச் செயலாளர்கள் விழுப்புரம் வடக்கு-க.நடராசன், தெற்கு-செஞ்சி ஏ.கே.மணி, புதுச்சேரி ஹேமா பாண்டுரங்கன், கடலூர் என்.இராமலிங்கம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முன்னணி யினர் கலந்துகொண்டடினர்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் நிதியளிப்புக் கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (17.11.13) நடைபெற்றது. இதில் #வைகோ பேசியது:

நவம்பர் 12-ல் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். ஒரு சில இடங்களில் மட்டுமே கடையடைப்பு செய்தனர். முழு கடையடைப்புக்கு அதிமுக, திமுக ஆதரவு தரவில்லை.

இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேரூன் ஈழத்தின் வடபகுதியில் உள்ள யாழ்பாணத்துக்குச் சென்று பார்வையிட்டார். தமிழர்கள் தங்கள் கணவர், மகன் கள் 5,7 ஆண்டுகளாக காணவில்லை. நிலம், வீடுகளை இழந்து விட்டோம் என்று கதறி அழுதனர்.

Monday, October 14, 2013

5 லட்சம் மாணவர்களில் 50 பேரின் தவறு,மாணவ சமுதாயமே ?

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (14.10.13 ) ஒன்றில் கலந்து கொள்வதற்காக #மதிமுக பொது செயலாளர் #வைகோ வந்திருந்தார். 
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வருக்கு கோர முடிவு ஏற்பட்டது. இதை கண் டித்து அடுத்து அரை மணி நேரத்தில் அறிக்கை விட்டவன் நான். லட்சக்கணக் கான மாணவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்றும், தகப்பன், தாய்களின் கனவை நினைவாக்க வேட்கையோடு, சுமக்க முடியாத புத்தக கட்டுகளை துக்கி சுமந்து இரவு பகலாக படிக்கிறார்கள். முதல் மதிப்பெண்கள் பெற வேண் டும் என்று லட்சகணக்கான மாணவர்கள் துடிக்கிறார்கள்.

Wednesday, September 18, 2013

மாணவர் சைக்கிள் பிரச்சாரம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திண்டிவனத் தில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ..


Wednesday, April 24, 2013

ம.தி.மு.க. மாவட்ட செயலரின் தந்தை உடல் தானம்

விழுப்புரம் மாவட்ட ம.தி.மு.க. செயலர் ஏ.கே.மணியின் தந்தை குலசேகரன் (96) செஞ்சியில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நலக் குறைவால் இறந்தார்.

மேலும் அவர், தனது உடலை மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு தானம் வழங்குமாறு எழுதி வைத்துள்ளார். அதன்படி அவரது உடல் அந்த மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.