Showing posts with label தேனி. Show all posts
Showing posts with label தேனி. Show all posts

Saturday, November 30, 2013

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை வைகோ வரவேற்பது ஏன்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை பாதுகாப்பை உறுதிசெய்திட வும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி
ரங்கன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முற் றிலும் சரியானதாகும்.கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை தலைவர் வைகோ வரவேற்றதின் அடிப்படை என்ன? என்பதை அறியும் முன், மேற்குத் தொடர்ச்சி
மலைப் பகுதி குறித்தும், உயர் பாதுகாப்புப் பகுதியாக இப்பகுதி அறிவிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும்மத்திய அரசு அமைத்த குழுவின் விபரங்
களையும் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாரா ஷ்டிரா, கோவா,கர்நாடகா, கேரளா, தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் சுமார் 1,500 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கிறது.அடர்ந்த வனப்பகுதியாகவும்,தாவரங்கள் நிறைந்த பகுதி யாகவும் பறவைகள் மற்றும் புலி,யானை போன்ற விலங்கு களின் புகலிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கை பாதுகாப்புக்கும்,சுற் றுச் சூழலுக்கும் மிகவும் இன்றியமையாத பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி இருக்கிறது.

Wednesday, November 20, 2013

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி கம்பத்தில் போராட்டம்

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி கம்பத்தில் வருகிற 4–ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று #வைகோ அறிவிப்பு 

மதுரை புதூரில் #மதிமுக  பிரமுகர் திருமண விழா இன்று (20.11.13 ) நடைபெற் றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:–

ம.தி.மு.க.வில் மிக பற்றுள்ள இந்த குடும்பத்தின் திருமண விழாவில் வரலாற் று சிறப்புமிக்க ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் முது கெலும்பாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க மத்திய அரசு நிபுணர் குழு கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Saturday, April 13, 2013

உசிலம்பட்டி-‘ஈகியர் நினைவு நாள் கூட்டத்தில் வைகோ’

பெருங்காமநல்லூரை, சிவகங்கைச் சீமையை,
தமிழ் மண்ணின் வீரத்தைப் பேசுவோம்!-வைகோ 

பெருங்காமநல்லூர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், தமிழ்த்தேசிய விடு தலை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம் சார்பில், 3.4.2013 அன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர்குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் வீர வரிகளுக்கு இலக்கணம் தீட்டிய தியாகபூமியாம் பெருங் காமநல்லூரில், பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் துப்பாக்கிக் குண்டு   களுக்குத் தங்கள் மார்பு காட்டி செங்குருதி சிந்தி மடிந்த,காளப்பன்பட்டி நடையநேரி பெரிய
மாயத்தேவரின் மகள் மாயக்காள் உள்ளிட்ட 16 மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசிய மக்கள் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற இந்தக் கூட்டத்தின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.