பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு
நந்தினிக்கும், கரிகாலனுக்கும் வாதம் நடக்கிறது.
‘என்னைக் கொலை செய்யவேண்டும் என்று தானே இங்கு வரவழைத்தாய்? உன் கையில் இருக்கும் மீன் சின்னம் பொறித்த வாள், என்னைக் கொல்வதற் குத்தானே? என்னைக் கொன்று விடு’ என்று சொல்கிறான்.
நந்தினி கூறுகிறாள்: கொலை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன்.ஆனால், எனக்குக் கடைசியாகக் கிடைத்த தகவல், ஊமைராணி மந்தாகினியின் மகள் நான் என்றும், என் தந்தை யார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதை நினைக்கிறபோது, அந்த எண்ணம் எல்லாம் விட்டுவிட்டேன் என்கிறாள்.
கரிகாலனும், ‘நீ காலில் விழுந்து மன்றாடியும், அதைப் புறக்கணித்துவிட்டு நான் வீரபாண்டியன் தலையை வெட்டினேன். அன்றுமுதல் என் மனதில், வாழ் வில், அமைதி இல்லை. எனவே எனக்கு என் உயிரைப் போக்கிக் கொள்வது ஒன்றுதான் பிராயச்சித்தம்’ என்று கரிகாலன் சொல்கிறான்.