Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

Thursday, December 5, 2013

இலவச கட்டாய கல்வி, மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடா ?

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு #மதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

ம.தி.மு.க மாநில இளைஞர்அணி செயலாளர் வே.ஈஸ்வரன் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2013–ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் சேர்க்கை விதிகளுக்கு புறம் பாக உள்ளது. ஆகவே இதை மறு ஆய்வு செய்து முறையான சேர்க்கை எண் ணிக்கையை மறு அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் மறு ஆய்வு செய்த மாணவர்களின் சேர்க்கைக்கு மட்டும்தான் கட்டாய கல்வி உரிமை சட்ட நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

Tuesday, November 26, 2013

பொன்னமராவதியில் அரசு கல்லூரி வேண்டும்-மதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் #மதிமுக நிர்வாகிகள் கூட் டம் நடந்தது. 
 
கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச்செய லாளர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித் தார். 

பொதுக்குழுஉறுப்பினர் சதாசிவம் வரவேற்றார். 

கூட்டத்தில் 

Thursday, November 21, 2013

மாதிரிப் பள்ளிகள் எனும் மாயை

சங்கொலி தலையங்கம்

உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நாட்டின் அனைத்து சமூக, அரசியல்
மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீரழிவை கொண்டுவந்தது போலவே, கல் வித்துறையிலும் புகுந்து சிதைத்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவையும் இன்றியமையாதன ஆகும். ஆனால், இவை இன்று அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் கைகளுக்கு போய் விட்டன. அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அடிப்படை உரிமைகள் குறித்து பேசு கிறது. இதில் சட்டப் பிரிவு 21ஏ என்பது அரசியல் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2002 ஆம் ஆண்டில், கல்வியும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.

இதன்படி,நாட்டிலுள்ள 6வயது முதல் 14வயது வரை உள்ள குழந்தைகள் அனை வருக்கும் அடிப்படைக் கல்வி புகட்டுவது என்பது சட்டப்பூர்வமாக்கப் பட்டது. பின்னர் 2009 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2010 ஏப்ரல் 1 ஆம் நாள் நடை முறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம், (Right to Education Act-RTE)  குழந்தை களின் கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு சில வழிகாட்டுதல் களை அளித்தது. இதன் மூலம் தனியார் மய கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்ட துடன், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.

Monday, October 28, 2013

வணிக வளாகங்களாகும் பள்ளி மைதானங்கள்-போராட்டகளத்தில் மதிமுக

கோவையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மைதானங்களில் வணிக வளா கங்கள் கட்டவும், வேறு பிற தனியார் பயன்பாட்டுக்காகவும் பயன் படுத்தப்படு வதற்கும், #மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்பதை சிந்திப்பதை விடுத்து, பள்ளிகளையும், பள்ளி மைதானங்களும் கல்விசாரா நிகழ்ச்சிகளுக்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Thursday, October 3, 2013

கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தாத மத்திய அரசும், மாநில அரசுகள்

கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளி களில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இத னால், எதிர்காலத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி (ஆர்.டி.இ.,), ஒவ்வொரு தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகள், எய்ட்ஸ் பாதிப்பு உள்ள குழந்தைகள் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு,தொடக்க நிலை வகுப் புகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும்.

Saturday, September 21, 2013

சம வாய்ப்பு வழங்குக!

செவிலியர்’ படித்த மாணவிகளுக்கும் கல்லூரியில் பயில சம வாய்ப்பு வழங்குக!

தமிழக அரசுக்கு #வைகோ வேண்டுகோள்

2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேர லாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறி வியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துககொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, September 8, 2013

பள்ளிக்கு வராத ஆசிரியர்

#மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வரதராஜன் மீது பொய் புகார் கூறிய தலைமை ஆசிரியர் , விசாரணையில் உண்மை வெளிப் பட்டு தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து தொடக்க கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.

Sunday, July 14, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்று #மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியருக்கு 12.07.13 அன்று  எழுதிய கடித விவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி 33 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக மெட்ரிக் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 2, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம் விதி மீறல் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தின்கீழ், முறை யான வழி முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மதிமுக வலியுறுத் தியுள்ளது. மதிமுக மாநில இளை ஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

அனைவருக்கும் கட் டாய இலவச கல்வி உரிமை சட்டம் கொண்டுவந்த நோக் கம் முழுமையாக நிறைவேறவில்லை. இச்சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கை யில் சரியான நடை முறையை பள்ளிக்கல்வி துறை பின்பற்றவில்லை.

Saturday, June 29, 2013

மாணவர்களை கல்வித் துறையே தேர்வு செய்க!

கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் சேரும் மாணவர்களைக் கல்வித் துறையே தேர்வு செய்ய வேண்டும் என்று, மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விரும்பாததால் இச் சட்டமே கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் தருவதில்லை என்று புகார் வந்ததால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.