Showing posts with label திராவிட இயக்கம். Show all posts
Showing posts with label திராவிட இயக்கம். Show all posts

Tuesday, December 17, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

Thursday, December 12, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 1

வட்ட வடிவமான பரந்தமுகம்; அகலமான நெற்றி; காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்தின் தழும்பு; அன்பினை விளக்கும் அழகுமிகு விழி கள்; அரும்பு மீசை; கனிவு பேசும் இதழ்கள்; குள்ளமான உருவம்; பருமனான உடல்; காலர் இல்லாமல் வட்ட வடிவ கழுத்துப்பட்டியுடன் கூடிய சில்க் ஜிப்பா;
அதன்மேல் தோளின் ஒரு பக்கத்தில் கம்பீரமாகத் தவழும் கருப்புச்சால்வை, இத்தனையும் இணைந்த எழில்மிகு உருவத்திற்கு உரியவர் தான் கொங்குச் சீமை தந்த திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் கே.ஏ.மதியழகன்.

“குறுகியதோர் உருவம்; எனிற் பரந்த உள்ளம்!
குறள்போலும் எனக்கூறின் மிகையாகாது!
அறிவினிலே வளங்கொண்டோன்; அன்பில்வளர்ந்து
அடந்தடந்து நம் உள்ளில் இடம் பிடித்தோன்!
இடக்கையில் புகைமணக்கும் வெண்சுருட்டில்
எரிதீயும் சிந்தனையில் பகைசுருங்கும்!
நடக்கையில் பின்னின்று பார்த்தால் ஆகா!
நம் வீட்டுப் பிள்ளை நடைபோலிருக்கும்
நிதியென்னில் குவையென்னில் குறைவே - அண்ணா
நெஞ்சில் மதியே! நிறைவான தம்பி”

என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் மதியழகனின் தோற்றப் பொலிவை எந்நாளும் பேசிக் கொண்டிருக்கும்.

Tuesday, December 10, 2013

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டா டியிருப்பது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது. இந்த நிலையிலும் கூட, திராவிடம் எங்கே இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி, ஆரிய அடிவருடி களின் நூல்கள் பல வந்துள்ளன.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெல்லும் சொல்வலர் வைகோ அவர்களும் போற்றி வருகின்ற திராவிடத்தை அறிவுப் பூர்வமாக மறுப்பதற்கு இயலாது என்பதனை புவியியல் அறிஞர்கள் பலரும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

எத்தனையோ பிரளயங்கள் தோன்றியும் அழிக்க முடியாத திருவிடம், திராவிட மாக உருப்பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தில் நிலை பெற்றிருப்பதற்கு அணி சேர்க்கும் விதத்தில் புராதன இந்திய வரைபடத்தில் ஒரு “தனித் திராவிட தேசம்” கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை நம் கழகத் தோழர்களின் கவனத்திற் குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Friday, November 15, 2013

அண்ணாவும் வைகோவும் இனியவை நாற்பது

நெல்லை மாவட்டம் கடையம் என்ற ஊரில் பாரதியார் சில காலம் தங்கி இருந் தார். அப்போது அங்கே ஒரு கோயில் திருவிழாவின்போது ஊர்மக்கள் திரளா கக் கூடியிருந்தார்கள். வழக்கம் போல் ஒரு பாகவதர் (வள்ளிதிருமணம்) கதை யைச் சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர் மீது சாமி வந்து ஆவேசமாக ஆடிக் கொண்டே உரத்தகுர லில்...

“அடே... பாக்கு வச்சான், வெத்தலை வச்சான், போயிலை வச்சான், பழமும்
வச்சான் ஒண்ணு வைக்க மறந்துட்டான்...சுண்ணாம்பில்லே... சுண்ணாம் பில்லே...சுண்ணாம்பில்லே... என்று கூவினார்.

இதைக் கேட்ட மக்கள் எல்லாம் ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்கள். இந்தப் பாட் டைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதியார் எழுந்து சிரித்துக் கொண்டே ஒரு எதிர்ப்பாட்டு பாடினார்.

Thursday, October 31, 2013

பொதுவாழ்வில் புகழ் பூத்த சோழவந்தான் ஆவடையப்பன்!

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராய் இருந்த சோழவந்தான் தா.ஆவ டையப்பன், தாயாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ஒருபந்தூரில் 18.09.1913 இல் பிறந்தார்.இவரது குடும்பங்களைச் சார்ந்தவர்களை வளையப் பட்டி ஜமீன் குடும்பத்தினர் எனக் குறிப்பிடுவர்.

சோழவந்தானில் கல்வி பயின்ற பின், பள்ளி இறுதி வகுப்பை மதுரை ஐக்கிய
கிருஸ்தவ பள்ளியில் பயின்றார். தேர்வு பெறாத நிலையில் கல்வி முடிவுக்கு
வந்தது. எனினும் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலைப்
பெற்றிருந்தார்.

1935 இல் அத்தைமகள் இரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். குடும்ப
விளக்காய் வாழ்வதற்கு இல்லத்தில் இனிய துணையாய் விளங்கிய மனைவி
குறுகிய காலத்திலேயே அகால மரணமடைந்தார். இத்துயர நிகழ்ச்சி குடும்பத் தில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.ஆவடையப்பன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் மறுமணம் செய்து கொள்ளாது இருந்தார்.பின்னர் 1939ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் நடை பெற்றது.

Tuesday, September 17, 2013

திராவிடம் காக்க..

திராவிடம் காக்க விருதுநகரில் கூடுவோம்!

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம் வான்தான் என்புகழ்!
முன்னாள் என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் திராவிடன் ஒளி செய்கின்றான்
அன்னோன் கால்வழியாகிய தொடர் கயிற்று
மறுமுனை நான்! என் வாழ்வின் கால் வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்காலத்தின் கடைசியோ டியைந்தது
சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த்திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர்நான்! என் உயிர் இனம் திராவிடம்!”

Thursday, August 15, 2013

விடுதலை நாள் சிந்தனைகள்

நாட்டு விடுதலைக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியா பற்றி கனவு கண்டு, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று” கூத்தாடி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் பாரதியார்!

ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.