Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts

Saturday, November 30, 2013

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை வைகோ வரவேற்பது ஏன்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை பாதுகாப்பை உறுதிசெய்திட வும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி
ரங்கன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முற் றிலும் சரியானதாகும்.கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை தலைவர் வைகோ வரவேற்றதின் அடிப்படை என்ன? என்பதை அறியும் முன், மேற்குத் தொடர்ச்சி
மலைப் பகுதி குறித்தும், உயர் பாதுகாப்புப் பகுதியாக இப்பகுதி அறிவிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும்மத்திய அரசு அமைத்த குழுவின் விபரங்
களையும் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாரா ஷ்டிரா, கோவா,கர்நாடகா, கேரளா, தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் சுமார் 1,500 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கிறது.அடர்ந்த வனப்பகுதியாகவும்,தாவரங்கள் நிறைந்த பகுதி யாகவும் பறவைகள் மற்றும் புலி,யானை போன்ற விலங்கு களின் புகலிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கை பாதுகாப்புக்கும்,சுற் றுச் சூழலுக்கும் மிகவும் இன்றியமையாத பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி இருக்கிறது.

Wednesday, November 20, 2013

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி கம்பத்தில் போராட்டம்

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி கம்பத்தில் வருகிற 4–ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று #வைகோ அறிவிப்பு 

மதுரை புதூரில் #மதிமுக  பிரமுகர் திருமண விழா இன்று (20.11.13 ) நடைபெற் றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:–

ம.தி.மு.க.வில் மிக பற்றுள்ள இந்த குடும்பத்தின் திருமண விழாவில் வரலாற் று சிறப்புமிக்க ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் முது கெலும்பாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க மத்திய அரசு நிபுணர் குழு கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.