Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts

Thursday, December 12, 2013

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் வைகோ

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் #வைகோ என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கவிஞர் தமிழ்வென்றி (எ) ராஜா முகமது புகழாரம் சூட்டி னார். அவரது உரை வருமாறு

எந்த மொழிப்போர் இந்த மண்ணில் என்னை தமிழ் வென்றி யாக ஆக்கியதோ, அரைக்கால் டவுசர் பருவத்தில், எந்த மொழிப் போர் ஏற்றி வைத்த கனல் என்
தலைவன் வைகோவைப் பார்த்து அந்த முதல் நொடியிலேயே காந்தம் இரும் பை ஈர்ப்பதைப்போல, அன்றுதொட்டு இன்று வரை அவரது தம்பி என்கிற தகுதி யோடு நிற்கின்ற அந்த வாழ்க்கையைக் கொண்டிருக்கிற தகுதியைக் கொண்டி ருக்கிற காரணத்தினாலே,மொழிப்போர் தியாகிகளின் படத்தைத் திறந்து வைக் கின்ற ஒப்பற்ற வாய்ப்பை வழங்கியிருக்கிற தலைவருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்தனாக என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

Wednesday, December 11, 2013

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் வைகோ!

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் #வைகோ வோடு நாமும் பாடுபடுவோம் என்று விருதுநகர் மாநாட்டில் ஆர்.ஞானதாஸ்
உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

66ஆண்டுகால இந்தியநாடாளுமன்ற வரலாற்றில் நாட்டின் நதிகளை இணைத் து, நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதிநீர் இணைப்பு என் ப தை தனிநபர் மசோதாவாக முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் து சரித்திரம் படைத்து, தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட்ட மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

செய்தித்தாளிலே ஒரு கவிதைப் படித்தேன். அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

Tuesday, December 10, 2013

வைகோவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோர் #வைகோ வின் கரத்தை வலுப்படுத்து வோம் என்று விருதுநகர் #மதிமுக  மாநாட்டில் வாகை முத்தழகன் உரை
ஆற்றினார். அவரது உரை வருமாறு

மறுமலர்ச்சி திமுகவில் எங்களுக்கு கிடைத்திருக்கிற ஆசைத் தம்பி என் ஆரு யிர் அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,மறுமலர்ச்சி திமுக பொதுச் செய லாளர் இனமானத் தலைவர் அண்ணன் வைகோ அவர்களே,கழகத்தோழர்களே வணக்கம்.

நாட்டிலே சிலருக்கு, அதிகாரத்திலே இருப்பவருக்கும் பிரதமர் பைத்தியம்.அறி வாலயத்திலே இருப்பவருக்கு அதிகாரத்திலே பங்கு கேட்டு ஒரு பைத்தியம்.
கோயம்பேட்டிலே ஒரு குடிகாரப்பைத்தியம். நமக்கோ சமூக நீதியிலே ஏற்பட் டிருக்கிற தாக்கம்.

Monday, December 9, 2013

தேர்தல் வருமுன்னே தெளிவுறுவாய் கண்ணே!

#மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் கட்டிளங்காளை கழககுமார் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆற்றி யுள்ள பணிகள் மாற்றாரைமருளச் செய்திருக்கிறது.

திட்டமிட்டுப் பணியாற்றிடத் தொகுதிமுழுதும் தேர்தல் பணிக்குழு அமைத்து
இருப்பது, பொங்கி வரும் புதுவெள்ளம் போல் எழுச்சியுறச் செய்திருக்கிறது
உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் குறிக்கோளை இளைய சமு தாயத்தினர் ஏந்திச் செல்லும்போது அதற்கு இடையூறாக எந்தச் சக்தியும் குறுக் கிட முடியாது.

Sunday, December 8, 2013

புயலலில் கிராண்ட் தீவில் சிக்கி கொண்ட தமிழர்களை மீட்டெடுத்த வைகோ

திராவிட இயக்கத்தைக் காப்பாற்றும் ஒரே தலைவர் #வைகோ தான்!

விருதுநகர் மாநாட்டில் மயிலாடுதுறை அழகிரி உரை

நமது ஒப்பற்ற ஒரே தலைவர் மதிப்பிற்கும், பாராட்டுதலுக்கும், வணக்கத் திற் கும் உரிய பொதுச் செயலாளர் அவர்களே, இந்த மேடையிலே நிறைந்திருக்கக்
கூடிய சான்றோர் பெருமக்களே,வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை,கடைசி வரை வைகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய
கழகத்தினுடைய வரிப்புலிகளே,உங்கள் அனைவருக்கும் முதற் கண் எனது வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை பார்க்கின்றபோது, உள்ளபடியே நான் இப்போது அதிர்ந்து போயிருக்கிறேன். மொய் வைக்க வந்தவனுக்கு மாப் பிள் ளையாக வாய்ப்பு கிடைத்தது போல, சாமி கும்பிட வந்தவனுக்கு சங்கராச் சாரியாக வாய்ப்பு கிடைத்தது போல, பசியோடு வந்தவனுக்கு நிறைய உணவு
கிடைத்தது போல, இன்றைக்கு கூடியிருக்கக் கூடிய கூட்டத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த கூட்டத்திலே எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது
என்று நினைக்கிற போது, என் வாழ் நாளிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

Saturday, November 30, 2013

தமிழர்களின் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா!

தமிழர் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா என்று விருதுநகர் மாநாட்டில் எழுத்தாளர் மதுரா உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தெள்ளமுதாய், தெள்ளமுதின் மேலான முத்துக் கனியே என் முத்தமிழே வணக்கம். குஞ்சரமில்லை,குடையில்லை, படையில்லை, பதாகையில்லை
ஆயினும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கோ வைகோ.

இனமான தலைவர் வைகோ வின் கண் அசைவில் நடைபெறுகின்ற அண்ணா வின் பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற என் இதயத்திற்கு
இனிய இமயம் ஜெபராஜ் அவர்களே, நெஞ்சிலே பாசம் வைத்து விழிவழி நேசம் காட்டுகிற என் அண்ணன் தாமிரபரணி மைந்தன் வைகோ அவர்களே, என்
இதயத்திற்கு இனியவர்களே வணக்கம்.

Monday, November 25, 2013

காங்கிரஸ் அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது களத்தில் நிற்க ஆயத்தமாவோம்!

காங்கிரசு அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது களத்தில் நிற்க ஆயத்தமாவோம் என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கொள்கை விளக்க அணிச் செயலா ளர் க.அழகுசுந்தரம் எழுச்சி உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

சிவகாசியிடம் இருந்து பிரிக்க முடியாதது தீபாவளியும், பட்டாசும் மட்டுமல்ல
வைகோவும்,நாடாளுமன்றமும்தான் என்று திசைகள் திரும்பிப் பார்க்கிற இந்த
மாநாட்டில் “முன்னேறிச் செல் அதிகாரத்தைக் கைப்பற்று” என்று கரூர் பிரக டனத்திற்கு விருதுநகரில் வெள்ளோட்டமோ என்கிற அளவுக்கு எப்போதும் இல்லாத எழுச்சியோடும்,எதிர்பார்ப்போடும் நடைபெறுகின்ற பேரறிஞர் அண் ணா பிறந்தநாள் விழா மாநாட்டுத் தலைவர் உயர்நிலைக்குழு உறுப்பினர், கழக நிகழ்ச்சிகளை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தொலைக்காட்சி இல்லையே என்று நாம் கவலைப்பட்டபோது, இதோ!நான் இருக்கிறேன் என்று தக்க சமயத்தில் தோள்கொடுத்த அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,

Thursday, November 21, 2013

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம்!

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு தேர்தல் களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம் என்று விருதுநகர் #மதிமுக் மாநாட்டில் கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர் ஈட்டிமுனை இளமாறன் உரை ஆற்றினார். அவரது உரை வரு மாறு:

வெற்றிக்கு கட்டியம் கூறும் விருதுநகர் மாநாட்டில் தலைமைப்பொறுப்பேற்று
இருக்கின்ற தகுதிவாய்ந்த தலைவர்,எட்டுத் திக்கிலேயும் இயக்கத்தின் செய்தி களை கொண்டு சேர்க்கின்ற இமயம் தொலைக்காட்சியின் நிறுவனர் மாநாட் டினுடைய தலைவர் அண்ணன் ஜெபராஜ் அவர்களே, கற்றவர் சபையில் நிறை குடமாய், கன்னித் தமிழ்நாட்டின் வரைபடமாய் நற்றமிழர் நாட்டின் நன்னம்பிக் கை முனையாய், திராவிடர் சமுதாயத்தின் மிச்சமாகவும், எச்சமாகவும்,நாளை ய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எங்கள் இதயக் கோவி லில் எந்நாளும் குடியிருக்கிற எங்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், இந்திய நாடாளுமன்றம் மீண்டும் புதிய மாற்றத்தை காணப் போகிற அரசியல் அத்தியாயத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில் களப்பணி ஆற்ற இருக்கின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணாச்சி அவர்களே, வெள்ளம்
போல் தமிழர் கூட்டம் அவர் வீரம்கொள் கூட்டமென மாற்றாரும் போற்றத் தக்க வகையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிற
கழகத்தினுடைய தோழர்களே, உங்கள் அத்துனைபேருக்கும் பணிவு கலந்த
வணக்கத்தை முன்வைக்கின்றேன்.

Wednesday, November 20, 2013

ஓயாத அலையாய் வைகோ இயக்கத்தை இயக்கி வருகிறார்!

ஓயாத அலையாய் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ இயக்கத்தை இயக்கி வருகிறார் என்று மாநில இளைஞர் அணிச்செயலாளர் வே.ஈஸ்வரன் “மாறும் தமிழகம்” என்ற தலைப்பில் விருதுநகர் மாநாட்டில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மழை சொன்னது நான் பலமானவன் என்னோடு மோதாதே, அலை சொன்னது
நான் பலவீனமானவன்தான், ஆனால் மோதிக்கொண்டே இருப்பேன். ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தது. மழை அங்கே இல்லை. அலை அங்கே இருந்தது.ஓயாத அலையாய் இந்த இயக்கத்தை இயக்கி வருகின்ற கழகத்தின் பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.


Tuesday, November 19, 2013

வைகோ மீண்டும் பிறந்திருக்கிற மீட்பர் அவர் வழி மீனவ சமுதாயம் நடக்கும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக  மாநாட்டில்,“மீனவர் கொடுந்து யர்” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்
பேராசிரியை ஃபாத்திமா பாபு ஆற்றிய உரை...

மாநாட்டுக்கு தலைமை ஏற்றிருக்கிற அருமைச் சகோதரர் இமயம் ஜெபராஜ்,
கழகத்தின் ஒப்பற்றத் தலைவர் பெருமரியாதைக்குரிய அண்ணன் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.மாநாட்டு வாழ்த்துகளும் கூட.

இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே, மக்கள் பார்க் கின்றார்கள். பாராட்டுகின்றார்கள் என்றால், அதற்கு காரணம், எங்கெல்லாம் ஏழை மக்களின் அழுகுரல் கேட்கின்றதோ, எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கத் தின் உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றதோ,அங்கெல்லாம் முதல் ஆளாகக்
களமிறங்கி,அவர்களுக்காக உரிமை கேட்கும் குரலாய்,வலிமை சேர்க்கும் சக் தியாய் அருமைத் தலைவர் வைகோ அவர்கள் செயல்பட்டு வருகின்றார் கள்.

Sunday, November 17, 2013

ஈழம் என்றால் வைகோ வைகோ என்றால் ஈழம்!

ஈழம் என்றால் #வைகோ , வைகோ என்றால் ஈழம்!

விருதுநகர் மாநாட்டில் கவிஞர் மணிவேந்தன் உரை

கருணை சமுத்திரம், காஞ்சி சரித்திரம்,
உலகை வியக்க வைத்த விசித்திரம்
அறிஞர் பெருந்தகை அண்ணா
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கர்மவீரர், ஏழைப் பங்காளர் காமராசர்
கருத்தரித்த பூமியில் நடைபெறுகிற
மாநாட்டின் நாயகன்,

வைகோ ஈழத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் பிரபாகரன்.
பிரபாகரன் தமிழகத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் வைகோ என்று

Saturday, November 16, 2013

அணு உலைகள் நாட்டுக்கு வரமல்ல... சாபம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், “அணு உலை பேர ழிவு” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆற்றிய உரை...

தலைவர் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் கழக முன்னோடிகளுக் கும், மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பு காலை வணக்கம்.

அணு உலை விபத்தால் மனிதர் களுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பு களை பேரழிவுகளை புகைப்படக்கண்காட்சியாக நாம் மாநாட்டில் வைத்தி ருக் கிறோம். அணு உலை விபத்தால் மனிதர்களுக்கு உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படும் பிரச்சினை களை உடனே பார்ப்பவர்கள் மருத்துவர்கள்தான். உடனி ருந்து பார்ப்பவர்களும் மருத்துவர்கள்தான்.ஒரு மருத்துவராக நீ பார்த்த உண் மைக் காட்சிகளை, ஒரு மருத்துவராக உண்மை செய்திகளை உலகத்திற்கு
சொல் என்று விருதுநகருக்கு என்னை அழைத்திருக்கிறார் நமது தலைவர்
வைகோ அவர்கள்.

Friday, November 15, 2013

கொடுங்கோலன் ராஜபக்சே குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவான்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழும் பெரியார், வரலாற்று
அண்ணா, எங்களின் வழிகாட்டி உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் #வைகோ அவர்களே,மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் முன்னோடி களே,கழகத்தின் கண்மணிகளாம் வைகோவின் வரிப்புலிகளே, உங்கள் அனை வருக்கும் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழ விடுதலைக்காக தீக்குளித்த தியாகிகளின் திரு உருவப் படங்களை திறந்து வைக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, ஈழத்தில் நான்காம் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது குழந்தைகள், சிறுவர் கள், பெண்கள்,வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், நிராயுதபாணிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி உலகத்திலே தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு களை வீசி குற்றுயிரும் கொலைஉயிருமாக கொன்று குவிக்கப்பட்ட பொழுது,
தமிழகத்திலே தாய் தமிழகத்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்களே,ஆர்த் தெழ வில்லையே, அரசாங்கங்களும் கேளா காதினராக இருக்கின்றார் களே, உணர்ச்சி வேகத்தில் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் தனது மேனிக்கு தீயிட் டுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவானந்தம், கடலூர் தமிழ்வேந்தன்,அரியலூர் இராஜ சேகரன், சிவகாசி கோகுலகிருஷ்ணன், மாரிமுத்து,பெரம்பலூர் எழில் வள வன்,புதுக்கோட்டை பாலசுந்தரம்,பண்ருட்டி சுப்பிரமணி, சுவிட்ஸர் லாந்து ஜெனிவாவில் முருகதாஸ்,மலேசியாவில் நஞ்சுண்டு இறந்த இராஜா முகமது, காஞ்சியிலே செங்கொடி, சேலத்தில் விஜயராஜ்,கடலூர் மணி போன்ற எண் ணற்ற தமிழ் உள்ளங்கள் தங்களது மேனியை தீக்கு இறையாக்கினர்.

Thursday, November 14, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் #வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம் என்றும் இல்லா எழுச்சி... எங்கும் மக்கள் பெருவெள்ளம் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டு
இருக்கிறது. யார் யாரோடு கூட்டணி;இவர் அவரோடு சேருவாரா? அவர் என்ன
முடிவெடுப்பாரோ! என்று அரசியல் கூட்டணியை ஆளுக்கு ஒரு விதமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், தமிழகத்திலேயே, ஏன்
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு தலைவர்தான் தம் கட்சிச் சின்னத் திற்கு வாக்குக் கேட்டு பிரச்சாரப் பயணத்தை 2013 செப்டம்பர் 30 அன்று தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தொடங்கினார். அவர்தான் எதற்கும்,
எதிரிக்கும் எப்போதும் அஞ்சாத நம் தலைவர் வைகோ.

தூத்துக்குடி, ஈரோடு மாவட்டப் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து,
ஆரூயிர் தலைவர் வைகோ அவர்களை மக்கள் பிரதிநிதியாகக் கொண்டிருந்த
வரலாற்றுப் பெருமைக்குரிய விருதுநகர் தொகுதியில், அக்டோபர் 23 மாலை 4
மணிக்கு அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் பிரச்சாரப்
பயணத்தைத் தொடங்கினார்.

Wednesday, November 6, 2013

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்! விருதுநகர் மாநாட்டில் குமரி விஜயகுமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில்,“ஈழத்தில் இனப்படு கொலை” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிற மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இமயம் ஜெபராஜ் அவர்களே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வைகோ
அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் கழக முன்னோடிகளே, வருகை தந்தி ருக்கும் சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, November 3, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணி!

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு 
இணங்க,விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்ட புதிய வாக் கா ளர் சேர்த்தல் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் குழுக்களை அமைக் கும் பணியினை மேற்கொள்வதற்காக 17.10.2013 அன்று சென்னையிலி ருந்து திருமங்கலம் சென்றோம்.

திருமங்கலத்தில்,தேர்தல் பணித் துணைச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் வீர. தமிழ்செல்வன் அவர்களின் ஆலோசனையின் பேரில், திருமங்கலம் சட்டமன் றத் தொகுதி களப்பணியை முடுக்கிவிட்டோம்.

அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று, கொள்கை விளக்க அணிச் செயலாளர்
க.அழகுசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், தேர்தல் பணித் துணைச் செய லாளர் மு.கார்த்திகேயன் தலைமையிலான குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து,இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்தல் களப்பணிகள் குறித் தும் அறிவுறுத்தினோம்.

Sunday, October 27, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 5

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் (25.10.13) வெம்பக் கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத் தில் பேசினார் .. பேச்சின் சுருக்கம் வருமாறு..

கிராமத்தில் பலசமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறித்து மகிழ்ச் சியடைகிறோன்.ஜாதி,மத பூசல்கள் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடி யாது.இளம் பெண்கள், படிக்கும் மாணவர்கள், புதியவாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.வாக்காளர்களின் இந்தமனநிலை வரவேற்க்கதக்கது.

தமிழக மீனவர்களை இலங் கை அரசு கைது செய்த போது மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. ஊழல் செய்வதிலும், மக்கள் விரோத நடவடிக்கையில் மட் டுமே மத்திய அரசு ஈடுபடுகிறது. காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது விற்பனை கிடையாது. அது போன்று மீண்டும் மது விலக்கு அமுல் படுத்த வேண்டும். இளைய சமுதாயம் காப்பாற்றப்பட வேண்டும்.

Saturday, October 26, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 4

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம்  நாளாக நேற்று (25.10.13) வெம்பக்கோட்டை ஒன் றியத்தில் அம்மாபேட்டையில் துவங்கி துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட் டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் ,நதிக்குடி , ஆத்தூர், திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவுபெற்றது. ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடான்பட்டியில் பொது மக்கள் மத்தி யில் தலைவர் வைகோ.

Friday, October 25, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 3

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ இரண்டாம் நாளாக நேற்று (24.10.13) சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுபயணத்தின் படங்கள் ..

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தத்துபட்டியில் மக்கள் தலைவர் வைகோ பொது மக்களுடன் .

Thursday, October 24, 2013

வைகோ வின் கடின உழைப்பால்

#வைகோ வின் (கழகப் பொதுச்செயலாளரின் ) கடின உழைப்பால் துரோகங் களைத் தூளாக்கி நிமிர்ந்து நிற்கிறது இயக்கம்! விருதுநகர் மாநாட்டில் சதன் திருமலைக்குமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆற்றிய சதன் திருமலைக்குமார்
உரை...

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் தலைவர், நம் பிரியத்திற் கும், பாசத்திற்கும் உரிய உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் அவர் களே,தமிழகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்கின்ற என் அன்புக்குரிய பொதுச்
செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கத்தைத்தெரிவித்துக்கொள் கிறேன்.