Showing posts with label மூன்று தமிழர்கள் மரண தண்டனை. Show all posts
Showing posts with label மூன்று தமிழர்கள் மரண தண்டனை. Show all posts

Saturday, March 1, 2014

கடற்கரையில் மக்கள் பெருந்திரள்-வைகோ அறிக்கை

மார்ச் 2-ஆம் தேதி மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
#வைகோ அறிக்கை

1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளி யளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத் தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  , ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடிவதங்கினர்.

7 பேர் விடுதலை குறித்து ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பபு

விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் இதழ் இந்த வாரம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் ..

ஜூனியர் விகடன் இதழில் இருந்து ....

Sunday, December 15, 2013

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன்.அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல் கிறார்.

இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப் பை தவறு என உணர்கிறேன் என்றுசொல்கிறார்.

இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவ ரான ஜெபமணி மோகன்ராஜ் தவறுசெய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 

Monday, December 2, 2013

மூன்று தமிழரை விடுதலை செய்க!

சங்கொலி தலையங்கம் 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பேர றிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களும் அநியாயமாகத் தண் டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். இந்த வழக்கில் அப்பாவி களான மூன்று பேரும் 22 ஆண்டு களாகக் கொட்டடியில் பூட்டப்பட் டும் கிடக்கின்றார்கள்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேண்டு மென்றே இவர் கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்று இதுவரை கூறப்பட்டு வந்தது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம் இப்போது வெளியாகி இருக்கின்றது.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள “உயிர்வலி”
என்ற ஆவணப்படம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடி களை அம்பலப்படுத்தி உள்ளது.மேலும் அரசியல் சக்திகளால் வழக்கு விசார ணை நடத்திய அதிகாரிகள் இயக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிச் சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையின் போது சி.பி.ஐ. எஸ்.பி.பணியில் இருந்த அவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணை வழங்கப் பட்டு இருந்தது. இது குறித்து, “உயிர்வலி” ஆவணப்படத்தில் தியாகராஜன் அப் போது நடந்தவற்றை ஒப்புதல் வாக்கு மூலமாகப் பதிவு செய்து இருக்கிறார்.

Tuesday, November 26, 2013

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது -வைகோ அறிக்கை

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும் #வைகோ அறிக்கை

“குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத் துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளள வும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றி லும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச் சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.

Saturday, October 12, 2013

பேரறிவாளனின் உயிர் வலி ஆவண படம் -பாடல் வெளியீடு

கடந்த வியாழக்கிழமை அன்று (10.10.2013) சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரறிவாளன் அவர்களின் 'உயிர் வலி' ஆவணப்படதின் பாடல் வெளியீடு. இக்சா அரங்கம் எழும்பூர் அருங்காட் சியம் எதிரில். மாலை 5மணிக்கு இந்த கருத்தரங்கம் வெளியீட்டு நிகழ்வு நடை பெற்றது .

இதில் பேரறிவாளன் தயார் அற்புதம்மா,#மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா , திரைப்பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மரணதண்டனை எதிரான தோழர்களும் கலந்து கொண்டனர் .

Friday, September 27, 2013

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,மற்றும் நளினியை சந்தித்த வைகோ

வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன்,முருகன் மற்றும் நளினியை சந்திக்க, #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ இன்று (27.09.13) வேலூர் வந்தார்.

வைகோ செய்தியாளர்களிடம் பேசும் போது

‘‘குற்றம் செய்யாமல் பேரறிவாளன், முருகன் ,சாந்தன்,மற்றும் நளினி ஆகி யோர் சிறையில் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.இவர்களுக்காகசென்னை உயர் நீதிமன்றத்தில் உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதா டினார். ஆனால் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், 'சென்னையில் வழக்கு நடந் தால் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று கூறி மாற்றினார்கள்.

Wednesday, April 24, 2013

தூக்கு தண்டனைக் கொட்டடியில் இருந்து மூன்று தமிழர் உயிரைக் காப்போம்!

ச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு ஒன்று மனித உரிமை ஆர்வலர்களையும், குறிப்பாக -தமிழ் சமுதாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 1993 செப்டம்பர் மாதத்தில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குண்டுவெடித்ததில் 9 பேர் பலி ஆனார்கள். இச்சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்சிங் பிட்டா படுகாயத்துடன்
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது.  பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.

Saturday, April 13, 2013

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்! -மதிமுக தீர்மானம்

உயர்நிலைக்குழு - மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர் கள்,ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (13.04.2013 சனிக்கிழமை)காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் எண். 1

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!
முதலமைச்சருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வேண்டுகோள்

Monday, February 11, 2013

தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள்- வைகோ

திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மறைந்த மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ம.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலையை திறந்து வைத்தும், கட்சி அலுவலகத்துக்கு நடராஜன் பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன் பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

Thursday, March 1, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று தடை விதித்ததற்குப் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோ பாத்தியாய அமர்வில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இன்று இடம் பெற்றிருந்தது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் தூக்குதண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களும் தூக்குத் தண்டனை வழக்குகள், கருணை மனுக்கள் குறித்த அனைத்து விபரங்களையும் மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சிங்வி அறிவித்திருந்தார். ஆனால், ஒருசில மாநிலங்களில் இருந்து மட்டுமே தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Wednesday, February 22, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அந்த வழக்கை அங்கிருந்து மாற்றுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (22.2.2012) உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் சிங்வி, நீதியரசர் முகோபாத்தியாயா அமர்வில் வந்தது.

மாற்றுதல் செய்யக் கோரிய மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மூன்று பேர் மரண தண்டனை வழக்கையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு முறை வேறு அமர்வுகளிலே இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதே நீதிமன்றத்தில் அனுப்பப்பட்டுவிட்டது; அதனால் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.
புல்லர் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்பிறகு முறையாக மற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.