“சாகப் பயந்தவன் தரித்திரன் ஆகிறான்.சாகப் பிறந்தவன் சரித்திரம் ஆகிறான்!”
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
“இந்த சமூகத்தின் கட்டமைப்பே வீர வழிபாட்டில்தான் அமைந்து கிடக்கிறது” என்றான் இங்கிலாந்து நாட்டின் தாமஸ் கார்லைல். ஆம்! நாட்டினுக்காய் உயி ரை ஈந்தோ ரின் “நடுகல்” வழிபாட்டிலும் - கொற்றம் அமைத்துக் கோலோச்சிய நம் மூதாதை மன்னர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் -முன்னின்று போரா டிகளச் சாவினுக்கும் - கொடுந்தண்டனைக்கும் தன்னுயிர் ஈந்த மாமன்னர்க ளின் வீர வழி பாட்டிலும் தாய்த் தமிழகம் பன்னூறு ஆண்டுக் காலமாய் பற்றி வருகிற வீர வரலாறாகும்.
போரில் வீரம் காட்டி இறந்து நடுகல்லாய் நிற்கும் உண்மை வீரர்களே, தமிழர் களின் தெய்வங்கள் என்று புற நானூறு பேசும்!. அந்த வகையில் - அந்த வழி யில் சாதனைச் சரித்திரம் பேசும் சரித்திர மனிதர்களின் சதுக்கங்களே நினைவு முற்றங்களாக முகிழ்த்து நிற்கின்றன நாடுகள் தோறும். அந்த சதுக்கங்கள் பேசும் சரித்திரம் ஒன்றல்ல - இரண்டல்ல -ஓராயிரம். அந்த ஓராயிரத்தில் ஒரு
சிலவற்றை நினைத்துப் போற்ற -நினைவில் நிறுத்தத் தான் முற்றங்களும்! முடிவடையாயுத்தங்களும்!!.
