Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts

Wednesday, December 18, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

Thursday, December 12, 2013

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் வைகோ

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் #வைகோ

மதுரை அருளானந்தா கல்லூரியில் நடைபெற்ற துறை சார்பான பண்பாட்டுக் கலாச்சார நிகழ்வில் மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


Wednesday, December 11, 2013

ஆதார் அட்டையின்றி மாணவர்கள் அவதி -மதிமுக புகார்

ஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக #மதிமுக புகார் 

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூர் மதிமுக கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:

சங்கர்நகர் பேரூராட்சிக்குள் பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களில் பெரும் பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். 

Monday, November 11, 2013

நாளை முழு அடைப்புப் போராட்டம்; மாணவர்களுக்கு வைகோ அழைப்பு

நவம்பர் 12 முழு அடைப்புப் போராட்டம்; மாணவச் செல்வங்களே! வெற்றி பெறச் செய்வீர்! #வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, அவர்களின் இரத்தம் கொட்டப்பட்ட பூமியில் கோலாகலமாக கொண்டாட்டம் நடத்தப் போகிறது மகிந்த ராஜபக்சேயின் சிங்கள அரசு. 53 காமன்வெல்த் நாடுகளின் அதிபர்கள் கூட்டம் நவம்பர் 15, கொழும்பில் தொடங்குகிறது.
அதற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம், காமன்வெல்த் இளைஞர் மய்யத் தையும், மக்கள் மய்யத்தையும் ராஜபக்சே தொடங்கி வைத்துள்ளார்.

பிரிவினைவாதிகளால் 30 ஆண்டுகள் அழிவையும், இரத்தக் களறியையும் தன்னுடைய நாடு சந்திக்க நேர்ந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளார்.

Thursday, October 31, 2013

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-மதிமுக மாணவர் அணி

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-#மதிமுக மாணவர் அணி 

திருச்சியில் நடந்த மாணவர் அணி  மாநில துணைச்செயலாளர்கள் கூட்டத் தில்  ம.தி.மு.க. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநில மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் 27.10.13 அன்று நடைபெற்றது.

Wednesday, October 23, 2013

நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் உள்ளிருப்பு போர் – மதிமுக ஆதரவு

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக சஸ் பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 3வது நாளாக பேராசிரியர்கள், மாணவர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு #மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வரலாற்றுத் துறை தலை வர் பீட்டர் பேரின்பராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெய்ஸ் தாசன் ஆகி யோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Sunday, October 20, 2013

மாநிலம் தழுவிய பேச்சு போட்டிகள் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பு

#மதிமுக மாணவர் அணி சார்பாக இன்று (20.10.13 )  தமிழகம் முழுவதும் மாண வர்களுக்கான பேச்சு போட்டிகள் முதல் கட்டமாக ,மாவட்ட அளவில் நடத்த பட்டது.ஒவ்வொரு மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் தமிழக முழு வதும் ஆயிர கணக் கான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்...

இன்றைய போட்டியில் வென்றவர்கள் அடுத்து நிகழும் மண்டல அளவிலான போட்டிகளின் பங்கேற்பார்கள்..


Monday, October 14, 2013

5 லட்சம் மாணவர்களில் 50 பேரின் தவறு,மாணவ சமுதாயமே ?

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (14.10.13 ) ஒன்றில் கலந்து கொள்வதற்காக #மதிமுக பொது செயலாளர் #வைகோ வந்திருந்தார். 
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வருக்கு கோர முடிவு ஏற்பட்டது. இதை கண் டித்து அடுத்து அரை மணி நேரத்தில் அறிக்கை விட்டவன் நான். லட்சக்கணக் கான மாணவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்றும், தகப்பன், தாய்களின் கனவை நினைவாக்க வேட்கையோடு, சுமக்க முடியாத புத்தக கட்டுகளை துக்கி சுமந்து இரவு பகலாக படிக்கிறார்கள். முதல் மதிப்பெண்கள் பெற வேண் டும் என்று லட்சகணக்கான மாணவர்கள் துடிக்கிறார்கள்.

Saturday, October 12, 2013

மாணவர்களுக்கான எழுச்சிமிகு பேச்சுப்போட்டி

 #மதிமுக மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான எழுச்சிமிகு பேச்சுப்போட்டி 

தலைப்பு: நாடாளுமன்றத்தில் வைகோ

நாள்: 20.10.2013 ஞாயிறு காலை 9.30 மணி

மாவட்ட வாரியாக பேச்சுப்போட்டி நடைபெறும் இடங்கள் - நடுவர்கள்

Thursday, October 10, 2013

கல்லூரி முதல்வர் படுகொலை வைகோ வேதனை

கல்லூரி முதல்வர் படுகொலை #வைகோ வேதனை;
வளரும் தலை முறைக்கு வேண்டுகோள்!

இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத் தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ் அவர்கள், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல் லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாண வர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர். 

Saturday, September 21, 2013

சம வாய்ப்பு வழங்குக!

செவிலியர்’ படித்த மாணவிகளுக்கும் கல்லூரியில் பயில சம வாய்ப்பு வழங்குக!

தமிழக அரசுக்கு #வைகோ வேண்டுகோள்

2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேர லாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறி வியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துககொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, September 18, 2013

மாணவர் சைக்கிள் பிரச்சாரம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திண்டிவனத் தில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ..


Friday, September 6, 2013

கல்லூரியை அரசுடமை ஆக்குக

D.D மருத்துவ கல்லூரியை அரசுடமை ஆக்குக - #வைகோ கோரிக்கை

D.D மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடான நடவடிக்கைகளாலும் , முறையற்ற செயல்களாலும் அதன் அங்கீகாரம் ரத்து செய்ய பட்டது எதிர்கால கல்வி கேள்வி குறியான நிலையில் கடந்த 16 நாட்களாக பாதிக்கப்பட்ட 103 மாணவ மாணவிகள் அற வழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர் 

Saturday, April 13, 2013

தமிழீழப் பொது வாக்கெடுப்பு குறித்த புத்தகம் வெளியீடு

ம.தி.மு.க மாணவர் பாசறை சார்பில் தமிழீழப் பொது வாக்கெடுப்பு குறித்த புத்தகம் வெளியீடு

மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இடம் :- சென்னை, தியாகராய நகர். கோபாதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கம்

நாள் & நேரம்  :- 13.04.2013 சனிக்கிழமை- மாலை 6.00 மணி

வரவேற்புரை :- வேளச்சேரி பி.மணிமாறன்

தலைமை :- கொளத்தூர் மணி