Showing posts with label 2009. Show all posts
Showing posts with label 2009. Show all posts

Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

Saturday, May 4, 2013

இந்திய அரசே, துரோகத்தைத் தொடராதே!

சிங்களவனுக்கு அடிமையாக தமிழன் வாழமுடியாது!

ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்தும், தமிழர்களின் துயர் துடைக்கக் கோரியும் இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கத்தின் சார்பில், சென்னையில் 24.7.2009 அன்று பழ.நெடுமாறன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கழகப் பொதுச்
செயலாளர் வைகோ ஆற்றிய உரை...

மனிதகுல வரலாற்றில் பல அவலங்கள் பேரழிவுகள் உலகில் நடைபெற்று இருக்கின்றன.ஆனால், தமிழர்களின் வரலாற்றில் இப்படிப்பட்ட பேரழிவு,தமிழ் இனம் கொடியோரால் படுகொலை செய்யப்படுகின்ற அவலம்,இதுவரை நடந் தது இல்லை.இயற்கையின் சீற்றத்தால், கடல் கோளால் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னால் தமிழனின் நிலம் கடலில் அமிழ்ந்து போனதால், பெருந்துயர் நேர்ந்து இருக்கிறது.

Monday, April 1, 2013

ஈழத்தமிழர் பிரச்சனை முடிந்துவிடவில்லை!


எங்கள் நெஞ்சின்
நெருப்பு அணையாது!-வைகோ 

இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக கருணாநிதியின் பாசிச அரசாங்கத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மறுமலர்ச்சி தி.மு.க., பெரியார்
திராவிடர் கழகத் தோழர்கள் தேசப்பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்யப் பட்டதைக் கண்டித்து,

கோவையில் 8.6.2009 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தில் மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார்.