Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts

Monday, November 11, 2013

ஸ்டெர்லைட் வழக்கு; வைகோ மேல்முறையீடு ஏற்பு !

ஸ்டெர்லைட் வழக்கு; #வைகோ மேல்முறையீடு ஏற்பு !

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதற்காக, கடந்த 17 ஆண்டுகளாக, நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வருகின்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஆகஸ் ட் 8 ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில்,ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று வழங்கிய ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீடு, விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பட்நாயக், நீதிபதி நிஜார், நீதிபதி இப்றாஹிம் கலிஃபுல்லா ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பசுமை அமர்வு, இன்று அறிவித்தது.

Monday, October 28, 2013

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோவின் மேல் முறையீடு !

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார். 

வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது. 

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது. 

Tuesday, October 1, 2013

பசுமை அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை சுற்றுச்சூழல் விவகா ரங்களுக்கான "பசுமை அமர்வு' என்ற சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (30.09.13) உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஏ.கே. பட்நாயக், ஜெகதீஷ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "ஸ்டெர்லைட் ஆலை வழக்கை "பசுமை அமர்வு' இனி விசாரிக்கும். நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்' என்று கூறினர்.

Wednesday, September 18, 2013

வைகோவின் மேல்முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் #வைகோ மேல்முறையீடு!

வெளிநாடுவாழ் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா
நிறுவனங்களின் சார்பில், தூத்துக்குடி அருகில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை யை நிறுவிட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை உயிரினவாழ்
மண்டலத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலும், ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அகல பசுமை வளாகமும் இருக்க வேண்டும் என்ற இரு முக் கிய நிபந்தனைகளுடன் மறுப்பின்மைச் சான்று (No Objection Certificate) 01.08.1994 இல் வழங்கியது.

Wednesday, September 11, 2013

Vaiko filed an appeal against sterlite

#MDMK General Secretary Mr. Vaiko filed Appeals Before the Supreme Court of India against M/s Sterlite Industry 

Mr. #Vaiko, General Secretary of Marumalarchi Dravida Munnetra Kazhagam filed Civil Appeal before the Supreme Court of India against the order of the National Green Tribunal. New Delhi. By its Order dared 08-08-2013 the National Green Tribunal, New Delhi allowed the appeals preferred by the Sterlite Industry, Thoothukudi against the directions of the Tamilnadu Pollution Control Board darted 29-02-2013 for the closure of the industry consequent to the emission of Sulphur Di Oxide on 23.03.2013. 

உச்ச நீதிமன்றத்தில் வைகோ

உச்ச நீதிமன்றத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தினை எதிர்த்து ஸ்டெர்லைட் வழக் கில் #வைகோ மேல்முறையீடு

டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல் முறையீடுகளை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஆலையை மூடிடவும், ஆலைக்குச் செல்லும் மின் சாரத்தை நிறுத்தி விடவும் பிறப்பிக்கப்பட்ட உத்திரவுகளை இரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது.

Friday, August 9, 2013

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் வைகோ

பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவித்து உள்ளபடி, 
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் பங்கு ஏற்பேன்!

ஆலையை அகற்றுவதற்கான போராட்டம் தொடரும்!

#வைகோ அறிக்கை

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கி நாசமாக்கி வருகின்ற, ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் இறுதி ஆணையைப் பிறப்பித்து இருக்கின் றது.

Wednesday, July 10, 2013

ஆலையை அகற்றும் வரை அறப்போர் தொடரும்

ஸ்டெர் லைட் நாசகார ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவேன் - 
#வைகோ அறிக்கை

இன்று புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆலை யில் மார்ச் 23 ஆம் தேதி நச்சுப் புகை வெளியேறி தூத்துக்குடி மக்கள் பாதிக்கப் பட்டு, தொடர் போராட்டங்கள் நடைபெற்று, மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு, டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக் கு மாற்றப்பட்டது.

Friday, May 31, 2013

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்! வைகோ

ஸ்டெர்லைட் ஆலை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது!

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்!

வைகோ அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் இன்றைய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம், தமிழகத்தில் உள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த ஆணையத்தின் தீர்ப்பின் மீதுதான், பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் இருக்கின்றன என்று இந்தத் தீர்ப்பாயத்தில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன், அதுகுறித்து தீர்ப்பு ஆயம் தந்துள்ள பதில் விளக்கம் என்ன என்பதை தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தால்தான் தெரியும்.

Thursday, May 30, 2013

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்ததால், ஆலை மூடப்பட் டது. அந்த ஆணையை இரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த வழக்கு மீதான விசாரணை, டெல்லி முதன்மைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்று வருகின்றன. நிறைவுக் கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் வைகோ பின்வருமாறு வாதத்தை எடுத்து வைத்தார்:

Tuesday, May 14, 2013

பொதுமக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காக்க ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகிறேன்-தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இந்த அமர்வில் விசாரிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்ற வாதத்தை வைகோ முன் வைத்தார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அந்தக் கருத்தை வலியுறுத்தியது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர் பசுமைத் தீர்ப்பா யத்தின் முதன்மை அமர்வில்தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

Wednesday, May 8, 2013

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் வழக்கு:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து, ஸ் டெ ர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு சென்னையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசார ணை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்று (08.05.2013) விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறை யீட் டு மனுவை தீர்ப்பாயம் விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் திட்டவட்டமாகக் கூறுவதால், இதை விசா ரிக்கக்கூடாது என்று சென்னை அமர்விலேயே வைகோ ஆட்சேபணை தெரி வித்திருந்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தீர்ப்பாயத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

Sunday, April 28, 2013

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை வைகோ பங்கேற்கிறார்!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு உத்திரவு பிறப்பித்தது. அந்த உத்திரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு நாளை (29.04.2013 திங்கள்கிழமை) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை யில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்க உள்ளார்.

Tuesday, April 23, 2013

ஸ்டெர்லைட் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு - சீராய்வு மனு தமிழாக்கம் – சுருக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொழிற்பேட்டையில் ஸ் டெர்லைட் தாமிர ஆலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த ஸ் டெர்லைட் ஆலை அமைப்பதை
எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு 13 ஆண்டு காலம் நிலுவையில் இருந்தது. 2010-ஆம் ஆண்டு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், பால் வசந்தகுமார் கொண்ட அமர்வு, இந்த ஸ் டெர்லைட் ஆலை இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியான மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இயற்கை உயிரினங்கள் வாழ்பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்று விதித்த நிபந்தனையை மீறிய செயல் என்றும், பசுமை அரண் அளவை 250 மீட்டர் அகலத்தில் இருந்து 25 மீட்டராக குறைத்தது சரியான செயல் அல்ல என்றும், இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி விட்டன என்ற காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தானே நேரில் ஆஜராகி வாதாடினார். இரண்டு வருடங்களாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இறுதியில் கடந்த 02.04.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

Monday, April 22, 2013

தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்தமாதம் (மார்ச்) 23-ந்தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏராளமான மரம், செடி,கொடிகளும் கருகின. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். அதில் அங்கிருந்து விஷவாயுவை திறந்துவிட்து தெரியவந்தது. இதனால் தமிழ்நாடு மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 30-ந்தேதி மூடப்பட்டது.

Monday, April 8, 2013

தூத்துக்குடிமுழு அடைப்பு - மாநரகம் முடங்கியது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று (8.04.2013) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்திருந்தது.
இந்த போரட்டத்திற்கு வைகோ யும் மதிமுகவும் அழைப்பு விடுத்தது , இதை தொடர்ந்து அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைத்து ,இன்று மாநகரமே முடங்கி விட்டது .



Saturday, April 6, 2013

தூத்துக்குடியில் ஏப்ரல் 8 இல் பொது வேலை நிறுத்தம்

ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை அகற்ற,
தூத்துக்குடியில் ஏப்ரல் 8 இல் நடைபெறும்,
பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
வைகோ அறிக்கை

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றுவட்டாரத்திலும் வாழும் மக்களின் உடல் நலனுக் குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார நச்சு ஆலையை நிரந்தர மாக மூடிடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது. ஆலையை அகற்றும் வரை, இந்தப் போர் நடக்கும் என்று பிரகடனம் செய்யும் வகையில், தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு கடை அடைப்பு பொது வேலை நிறுத் தம் நடத்திட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அறிவித்துஉள்ளது.

Thursday, April 4, 2013

வளைக்கப் பார்த்தார் அந்த ஆலையின் அதிபர்! ஸ்டெர்லைட் ரகசியம் சொல்லும் வைகோ!

விகடன் பேட்டி லிருந்து..

ஸ்டெர்லைட் ஆலையைப் பூட்டும் உத்தரவு வந்ததுமே அனைவரும் வாழ்த்து சொன்னது வைகோவுக்குத்தான். 'இது எங்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று, ம.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடு கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அங்கும் சென்று வைகோ வாதாடினார்.

ஏப்ரல் 2-ம் தேதி, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லி செல்வதற்கு வழக்கறிஞர் தேவதாஸு​டன் தயாராகிக்கொண்டு இருந்த வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்தோம்.

Wednesday, April 3, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 10

2012 ஆம் ஆண்டு 

16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.

வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 9

2012 ஆம் ஆண்டு 

9.5.2012 அன்று வழக்கு  உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர் லோதா, நீதி அரசர் கோகலே, நீதி அரசர் கோகோய் ஆகிய மூவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றத்தில், கடந்த மே 4 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்கோ ஜிப்சம், 4,70,000 டன் குவிந்து கிடக்கிறது, அதை விரைந்து அகற்றுவதற்கு ஆலை நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி வைகோ, பின்வருமாறு கூறினார்: