நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் 1978 ஆவது ஆண்டிலிருந்து
2002 ஆம் ஆண்டு வரையில் ஆற்றிய பணிகளையும், தமிழ்நாட்டிற்காக எழுப் பிய உரிமைக் குரல்களையும் ஆவணப்படுத்தும் இந்தக்கட்டுரைத் தொடர் நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்ற பொழுது, தலைவர் வைகோவின் மிகமிக முக்கியமான நாடாளுமன்றக்கோரிக்கை குறித்து பதிவு செய்வது இன்றியமை யாததாகும்.
ஆம்! சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றிதான் குறிப்பிடுகிறோம்.தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சேதுக்கால்வாய்த் திட்டம், பேசப்பட்டது மறுமலர்ச்சி தி.மு .க. உருவானதற்கு பின்பு தான் அதிகம்.
தமிழ்நாடு முழுவதும் சேதுக்கால்வாய்த் திட்டம் என்றால் என்ன? அது எவ் வா று தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்று 1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணியில்
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட பொதுக்கூட்டம் மெரினா கடற்கரையில்
நடந்தபோது, தலைவர் வைகோ எடுத்துக்காட்டினார். நான்கே ஆண்டுகளில் அதே கடற்கரையில் 1998 செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களை சேதுக்கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற் றும் என்று பிரகடனம் வெளியிடச் செய்தார்.