Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Saturday, November 9, 2013
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி
தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், #வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர் களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப் பளவில் கட்டப்பட்டு உள்ளது.
அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று (08.11.13) மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.
Sunday, October 6, 2013
ம.பொ.சி. 18–ம் ஆண்டு நினைவு விழா
ம.பொ.சி.யின் 18–ம் ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதி கார விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், #வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை மற்றும் ம.பொ.சி. பதிப்பகம் சார்பில், சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 18–வது ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் சவேராவில் நேற்று (05.10.13 ) நடைபெற்றது. விழாவுக்கு உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.விழாவில், சிலப்பதிகார இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிவைத்தார். வாழ்நாள் சாதனை விருதா ன ம.பொ.சி. விருதுகளை, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் மற்றும் கவிஞர் தாமரைச்செல்வன் ஆகியோருக்கு பழ.நெடுமாறன் வழங்கினார்.
Friday, August 9, 2013
அறநெறி அண்ணல் பழநியப்பனார்!
தமிழுக்கு, தமிழ் இனத்துக்கு அருந்தொண்டு ஆற்றியவர்
அறநெறி அண்ணல் பழநியப்பனார்!
நூற்றாண்டு விழாவில் #வைகோ புகழாரம்
பழ.நெடுமாறன் அவர்களின் தந்தை அறிநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற் றாண்டு விழா 07.07.2013 அன்று மதுரையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில்
இருந்து....
உலகப் பொதுமறைத் தொண்டர்,சைவ சமய சேவாமணி, தமிழுக்குச் செய்த தொண்டால், காலத்தால் அழியாது, மானத் தமிழர் நெஞ்சில் வாழுகின்ற, அற நெறி அண்ணல் பழநியப்பனார் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில்,
உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநகர் மதுரை யில், 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வணிகர் அரங்கத்தில், அறநெறி அண்ணல் புகழ்க்காவியம் படைக்கின்ற விழா என்பதால், இரவு பத்து மணிக்கு
மேலும் அரங்கம் நிரம்பி இருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
Sunday, July 14, 2013
ஈழத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை-பகுதி 2
இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சில், ஒரு நீர்த்துப்போன தீர்மானத்தை, மேலும் நீர்த்துப் போகச்செய்து நிறைவேற்றி இருக்கின்றது. கடந்த இருபதா வது அமர்வில், சிங்கள அரசுக்கு ஒரு பாராட்டுத் தீர்மானத்தை, இந்தியாவும், கியூபாவும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு திரட்டி நிறைவேற்றினார்கள்.
29 நாடுகள் ஆதரித்தன, 8 நாடுகள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவில்லை. 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன. அதைவிட இப்போது முன்னேற்றம் தானே என்கிறார்கள். ஒருவகையில் அது சரிதான். ஐ.நா.பொதுச்செயலாளர், மூவர் குழு விசாரணையை அறிவித்தார். உடனே உலகத்தை ஏமாற்ற, கொடிய வன் ராஜபக்சேவும் ஒரு குழுவை அறிவிக்கின்றான். கற்றுக் கொண்ட படிப் பினைகள், நல்லிணக்க ஆணையக் குழு என்றான். Lessons learned and Reconciliation
Commission-LLRC என்றான். உண்மையில் அது,Lies Launched and Renegade Commission
ஆகும். முழுக்க முழுக்கப் பொய்யான அந்த அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம். இதை அமெரிக்கா முன்வைத்தது.

Wednesday, July 10, 2013
தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 3
யாழ் கோட்டையைப் பிடித்து விட்டோம்; புலிக்கொடி பறக்கிறது; கோட்டை யை உடைத்து நொறுக்குவோம் என்று சொன்னான்.
இப்படிப் போராடக்கூடிய அந்த ஆற்றலில்தான் அங்கே இன்னொரு அதிசயம் நடந்தது. நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?
சிறைக்குள் இருந்து மண்ணை வெட்டிச் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகத் தப்பித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது,
ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களைப் பற்றிய கிரேட் எஸ்கேப் (Great Escape) என்ற ஒரு படம் 1965 ஆம் ஆண்டு, சென்னை குளோப் தியேட்டரில் ஓடியது. ஜேம்ஸ் ஸ்டூவர்ட்தான் கதாநாயகன். நான் நான்கைந்து முறை அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.

Tuesday, July 9, 2013
தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 2
ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை நான் நினைவூட்டுகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை.
சுதுமலையில் பேசுகிறபோது பிரபாகரன் சொன்னார்:
“நமது போராட்டத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு வல் லரசு, நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து, நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள்.

Monday, July 8, 2013
தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 1
‘பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடு மாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர்
வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழி னும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடி வம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோ வியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே,

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க போராடியவர் பழனியப்பனார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை(7/7/13) நடைபெற்ற கி. பழனியப்பனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கத்தில் #வைகோ பேசியது:
தமிழின் பெருமை உலகறியச் செய்யும் வகையில் சமய நூல்களை எழுதியவர் பழனியப்பனார் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.
அறம் ஓங்க வேண்டும். ஆலயங்களில் தமிழ் ஒலிக்கவேண்டும் என்று போராடியவர் பழனியப்பனார்.

Thursday, June 27, 2013
தமிழ் ஈழம் மலரும்-பகுதி 2
கார்த்திகை திங்கள் முடித்து மார்கழியிலே அடியெடுத்து வைத்திருக்கிறோம். பொழுது புலர்வதற்கு முன்னாலே வைகறை வேளையிலே மார்கழி திருப் பா வை, திருவெண்பாவை பாடல்களை உச்சரிக்கக்கூடிய பக்தர்கள் உண்டு. நான் இந்தத் தியாகராயர் நகர் கூட்டத்தில் இருந்து கேட்கிறேன். நல்லூர் கந்தசாமி
கோவில் இங்கே இருக்கக்கூடிய அறுபடை வீடுகளைப் போலப் புகழ்பெற்ற கோவில்தானே? திருச்செந்தூரைப் போல, திருப்பரங்குன்றத்தைப்போல,பழனி யைப்போல, ஆவினன்குடியைப்போல, திருத்தணியைப்போல, புகழ்பெற்ற கோவில்தானே. அந்த நல்லூர் கந்தசாமி கோவில் தமிழர்களின் புராதனமான அந்த முருகன் கோவில் சிங்கள இராணுவ அதிகாரிகளினுடைய ஆளுகைக்கு உள்ளே.
பேராயர் இருதயராஜ் அவர் கிறிஸ்தவர். வேதனையோடு தான் குறிப்பிடுகி றார். எல்லா இடங்களும் பெளத்த மயமாக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு விட்டன.அதைவிடக் கொடுமை பெண்கள் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டு கருவைச் சுமக்க நேரிட்ட அந்த தமிழ் பெண்கள் மானத்தை, கற்பை உயிருக்கு மேலாக போற்றிவந்த அந்தப் பெண்கள் இந்தக் கொடுமையை தாங்கிக் கொள் ளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

Tuesday, June 25, 2013
தமிழ் ஈழம் மலரும்-பகுதி 1
சென்னை - தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 27.12.2011 அன்று நடைபெற்ற தமிழர் சூளுரை நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். அவரது உரை வருமாறு:-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பிலே நடைபெறுகிற தமிழர் சூளு ரை நாள் பொதுக் கூட்டத்தினுடைய தலைவர் அமைப்பினுடைய ஒருங்கி ணைப்பாளர், உலகத் தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ஆருயிர் அண் ணன் பழ.நெடுமாறன் அவர்களே! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன் னணித் தலைவர்களில் ஒருவரும், தியாகத் தழும்புகள் பெற்றவருமான மதிப் பிற்குரிய அண்ணன் நல்லகண்ணு அவர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினு டைய பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் மானமிகு விடுதலை ராஜேந் திரன் அவர்களே! இந்த மாபெரும் கூட்டத்தை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து,
தீ எரிய அதிலே செந்நீர் பொழிகிறோம். தீ எரிக அதிலே தசைதனைப் பொழி கிறோம். தீ எரிக! காலக் கடைத்தீயாக கனன்று எழுக! என்ற முண்டாசுக் கவி யினுடைய வரிகளை நினைவூட்டுகின்ற வகையில் மாவீரர்களுக்கு வீரவ ணக்கம் செலுத்திடவும், தாய்த் தமிழகத்து உரிமைகளைக் காக்க சூளுரை மேற் கொள்ளவும் மிக ஆற்றலோடு இதை வடிவமைத்துத் தந்திருக்கின்ற வரவேற் புரை நிகழ்த்திய ஆருயிர் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களே, பல் லாயிரக்கணக்கிலே திரண்டிருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, தாய்மார்களே
பெரியோர்களே, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்களே, ஊடகவியலாளர்களே,

Monday, June 3, 2013
தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 3
இன்றைக்குச் சொல்கிறேன். பதவிகளுக்காக அல்ல.எந்தத் தமிழ் ஈழத்துக்காக நீங்கள், உன் தம்பிமார்கள்,உன் சகோதரிகள் ரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தத் தமிழ் ஈழத்தைத் தட்டியெழுப்ப இந்தத் தாயகத்திலே தமிழர் தாயகத்தி லே எங்கள் தமிழ்நாட்டிலுள்ள வாலிபர்களை - இளைஞர்களைத் தயார்படுத்து வது என்னுடைய வேலை. அதற்குச் சூளுரைக்கிறேன்.-வைகோ (27.11.10)
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
கண்டிப்பாகப் போடக் கூடாது. இது பேராபத்தில் போய் முடியும் என்று நான்
சொன்னேன். ஐந்து கேபினட் மந்திரிகளைத் தனித்தனியே கூப்பிட்டு மன்மோ கன் சிங் கேட்டார். எனக்குத் தெரிய அந்த ஐந்து பேருமே ஒப்பந்தம் கூடாது என் றுதான் சொன்னார்கள்,”என்றார். அப்படியானால், மன்மோகன் சிங் அவர்களே! இந்த ஒப்பந்தத்தைப் போடாமலேயே இவ்வளவு ஆயுதங்களைக் கொடுக்க லாம் என்கின்ற ஏற்பாட்டைச் செய்ய உங்களைத் தூண்டியது யார்? இராஜபக் சே வுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆயுதம் கொடுக்கச் சொல்லி- ராடார் கொடுக்கச் சொல்லி -உங்களைத் தூண்டியது யார்? இந்தக் கேள்விகள் எல்லாம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டன.
Sunday, June 2, 2013
தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 2
மத்திய அரசுக்குச் சொல்கிறேன்: நீ ஊழல் மட்டும் செய்யவில்லை. ஏ.... மத்திய அரசே! மன்மோகன் சிங் தலைமையிலான அரசே! கேடுகெட்ட அரசே! தமிழ் இனத்தை அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்த அரசே! உனக்கு மன்னிப்பே கிடையாது.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
இது அல்ல என் கேள்வி. சிங்கள இராணுவத்துக்கு தமிழர் தாயகப் பகுதியில் இனி என்ன வேலை? நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து இருக்கிறான். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் தாயகப் பகுதியில், யாழ்ப்பாணத்தில், கிளி நொச்சியில், மன்னாரில், வவுனியாவில், வல்வெட்டித்துறையில், மட்டக்களப் பில் இப்படி எல்லா இடங்களிலும் நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து
இருக்கிறான். இராணுவ முகாம்களை வைத்து இருக்கிறான்.இதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.
Saturday, June 1, 2013
தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 1
சென்னை தியாகராயர் நகரில் 27.11.2010 அன்று, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற் றது. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய எழுச்சி உரை வருமாறு:-
விடுதலைப் போர்க் களத்தில் செங்குருதி சிந்தி தங்கள் நல்லுயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், சூளுரை மேற்கொள்ள வும் தரணியெல்லாம் வாழும் தமிழர்கள் கடமை மேற்கொண்டு இருக்கின்ற இந்த மாவீரர் நாளில் தலைநகர் சென்னையில் முத்துரங்கன் சாலையில் நடை பெறுகின்ற இந்தப்பிரமாண்டமான கூட்டத்துக்குத்தலைமை தாங்கு கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே!

Monday, May 27, 2013
தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 2
நமது நியாயமான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இளை ஞர்களிடம் எடுத்துச்செல்வோம்.கல் லூரி மாணவர்களின் கவனத்தைக் கவரு கின்ற வகையிலே கொண்டு செல் வோம். நம்பிக்கையோடு இந்தப் பணியில் ஈடுபடுவோம்.-வைகோ (25.10.10)
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
பிரபாகரனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் கொன்று பிடிப்பது என்று முடிவெ டுத்தபோது, ஒரு கமாண்டோகூட உயிரோடு திரும்பாமல் அழிக்கப்பட்ட போ து, அந்தச் சண்டையிலே குண்டு பாய்ந்ததனால்.... நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் இருக்க நேர்ந்ததற்குப்பிறகு, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம்
நடந்து முடிந்ததற்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் கூடிய நாடாளுமன்றத்தில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, தொடங்கி வைத்து ஐம்பத்தைந்து நிமிடங்கள் நான் பேசி இருக்கிறேன்.
அந்தப் பேச்சுக்குத்தான் இந்தியப் பிரதமர், ‘இந்திய இராணுவத்தை விமர்சித் தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்றார்.
Sunday, May 26, 2013
தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 1
1987 யில் புலிகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேச கூடாது என தடை போட்ட கருணாநிதி , தடையை மீறி பேசிய வைகோ ...
கவிஞர் காசிஆனந்தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும்’தமிழிசைக்குறு வட்டு வெளியீட்டு விழா, 25.10.2010 அன்று சென்னை இராணி சீதை மன்றத்தில்
நடைபெற்றது. குறுவட்டை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ
ஆற்றிய உரை வருமாறு:-
நாங்கள் கவரிமான் ஜாதி
நாய்போல்எஜமான் அடிகளை நக்கோம்
தீங்கு படைத்தவன் எங்கே
தேடி உதைப்போம் செருக்களம் வாடா
ஓங்கி முழங்குக தானை
உடைந்து நொறுங்கி சிதறுக விலங்கு
தூங்கி வழிந்தது போதும்
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே
Thursday, May 23, 2013
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்!
விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பு ஆயத்தில்,
அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை!
விடுதலைப்புலிகள் மீதான தடை விசாரணைத் தீர்ப்பு ஆயத்தின் விசாரணை 20.10.2010 புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில் நடைபெற்றது.தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதி பதியுமான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக் குத் தொடங்கினார்.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் சு.குருநாதன், சூரி நந்த கோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Saturday, May 18, 2013
முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம்
முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம். தானா தெரு, சென்னை

புகைப்பட தொகுப்பு

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை
மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி.....
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
Tuesday, May 7, 2013
சூழும் இருள் அகலும்! தமிழ் ஈழம் மலரும்!
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், 20.8.2009 அன்று சென்னை புல்லா அவென்யூவில் மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கழகப் பொதுச் செய லாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் ஸ்டாலின் குணசேகரன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், சூர் யதீபன், இராஜேந்திர சோழன், மெல்கியோர், மு.தெய்வநாயகம், ம.நடராசன்
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் வாழ்வு உரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட்டது.இந்தப் பிரகடனத்தை வைகோ உணர்ச் சிப் பொங்க வாசிக்கையில், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்க ளும் , தமிழ் உணர்வாளர்களும், தீப்பந்தங்களை ஏந்தி முழங்கினர். இந்த உணர்ச்சிமிகு நிகழ்வில் வைகோ ஆற்றிய உரை...

Subscribe to:
Posts (Atom)