அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!
பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:
அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.
அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.
இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.