Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Monday, November 11, 2013

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்! தலைவர் வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்!

தலைவர் #வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு மைய பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 21.10.2013 முதல் எட்டு நாட்களாக உண்ணாநிலை அறப்போராட் டம் நடத்தி வந்தனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக தலை வர் வைகோ அவர்கள் 25.10.2013 அன்று, மத்திய செம்மொழி தமிழாய்வு மையத் தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

(செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை )

அதன் பயனாக செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் வி.கோ.பூமா, பதிவா ளர் மு.முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை (28.10.2013) திங்கள் காலை 11.30க்கு தொடங்கி 2.30 முடிவுற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட பணியாளர்களின் கோரிக்கைகளைஏற்று விரைவில் நடைமுறைப் படுத்துவதற்கு உத்தரவாதம் வழங்கி கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். அதன்பின் பணியாளர்களின் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

Thursday, August 29, 2013

செம்மொழி!

செம்மொழி பற்றி அறிந்து கொள்வதற்கு முன் செம்மை என்ற சொல்லிற்கான
சொற்பொருள் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். சுல் என்னும்
சிவத்தற் கருத்து வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது செம்மை என்னும் சொல். ஒரு வேர்ச் சொல் எவ்வளவு பொருள் குறித்த சொற்களை உருவாக்குகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் அறியுந்தொறும் வியப்பும், சுவையுந்தரும்.

சுல் - சுல்லம் - செம்பு - செம்பு ஒரு உலோகம். மலையாளத்தில் செம்பிற்கு சுல் லம் என்று பெயர். சுல் - சுல்லம் - செம்பு “சுல்லத்தா னமைந்த நெடுங்களத்தின்
(சேது புராணம்)” நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று
சிவத்தற் கருத்து தோன்றிற்று. ஒப்புநோக்கு : எரி - நெருப்பு - சிவப்பு - எரிமலர் - 1.சிவந்த முருக்க மலர், 2. செந்தாமரை.

Wednesday, August 28, 2013

தமிழ் தெரியாத நிர்வாகி ?

செம்மொழிக்கு நிறுவன இயக்குனராகத் தமிழ் தெரியாத 
ஒரு நிர்வாகியை நியமித்திருப்பது தமிழ் இனத்தையே 
அவமதிப்பதாகும் மத்திய மனித வள மேம்பாட்டு 
அமைச்சருக்கு #மதிமுக வை சேர்ந்த 

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மடல் 

கடிதத்தின் விவரம் பின் வருமாறு ...