Showing posts with label விவசாயிகள். Show all posts
Showing posts with label விவசாயிகள். Show all posts

Saturday, December 14, 2013

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

Monday, December 9, 2013

புதுடெல்லி செல்லும் கரும்பு விவசாயிகளை வைகோ வழியனுப்பி வைத்தார்

புதுடெல்லி செல்லும் தமிழக கரும்பு விவசாயிகளை #வைகோ வழியனுப்பி வைத்தார்

12.12. 2013 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் கரும்பு விவசாயிகள் சிறப்பு இரயிலில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புது டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரயில் நிலையம் சென்று கரும்பு விவசாயிகளை வழியனுப்பி வைத்தார். அப் போது இரயில் நிலைய நடைமேடையில் அவர்களின் போராட்ட நோக்கம் குறித்து விளக்கி பேசும் காட்சி.....


தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

 #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி தலைமையில் கரும்பு விவசாயிகள்போராட்டம் அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பு ..

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை ...

Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

Thursday, December 5, 2013

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில் கடந்தாண்டு கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ததற்கு காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் தமிழக அரசு மிகவும் காலதாமதம் செய்து வரு வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் கருகியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தனர். 

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு உழுந்து பயிருக்கு ரூ.36 பாசிப்பயறுக்கு ரூ.34ம், கம்பு பயிருக்கு ரூ.65ம், மக்காச்சோளத்திற்கு ரூ.137ம், பருத்திக்கு ரூ.356ம், எண்ணை வித்துக்களுக்கு ரூ.79ம், சோளத்திற்கு ரூ.48ம் என அனைத்து வகை பயிர்களுக்கும் ஏற்ற வகையில் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை செலுத்தினர். ஆனால் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்தற் கான காப்பீட்டு தொகையை வழங்க அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் இதுவரை வழங்கப்படவில்லை. 
 

Tuesday, December 3, 2013

டிச 12 தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் விவசாய சங்க தலைவர்களுடன் #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ...

Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Friday, November 29, 2013

விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! -வைகோ

காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு,பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு!

#வைகோ அறிக்கை

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்ததாலும், காவிரி பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் குறுவை, சம்பா பயிர் சாகுபடி தொடங்க முடியவில்லை. 

6 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களும், 14 இலட்சம் ஏக்கம் சம்பா சாகு படி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் கருகிப் போயின. விவசாயி களுக்கு இழப்பு ஈடு வழங்குவதற்காக, தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரி களை கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட குழுவினரும், பாதிக் கப்பட்ட பயிர்களை நேரில் பார்த்து சேதத்தை மதிப்பிட்டுச் சென்றனர். 

Monday, November 25, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 3

ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கரும்பு விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதா? 

கரும்பு விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஈரோடு தொகுதி #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 10.12.2009அன்று ஆற்றிய உரை: 

கரும்பு விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறவகையில் 22.10.2009 அன்று
இந்திய அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தை சட்டவடிவமாக்க இந்தச் சட்ட
வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.

22.10.2009 அன்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தில்,மாநில அரசுகளுக்கு இந் தக் கூடுதல் விலை (SAP) அறிவிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு இருந்தது. இந் தச் சட்ட வரைவில் மீண்டும் கூடுதல் விலை அறிவிக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளமைக்கு கரும்பு விவசாயிகளின் சார்பில் இந்திய அர சுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, November 23, 2013

கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுக்கக் கோரி- மதிமுக ஆர்ப்பாட்டம்!

கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுக்கக் கோரியும், போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், #மதிமுக ஆர்ப்பாட்டம்! #வைகோ அறிவிப்பு

பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் என்ற மொழி, தமிழ்நாட்டு விவ சாயிகளின் வாழ்வில் உண்மை ஆகி வருகிறது. பருவ மழை பொய்த்ததால், கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மைத் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, வேத னையின் விளிம்பில் இருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றி வந்தது கால் நடைகள்தாம். தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்களில், கால்நடை வளர்ப்பு என்பது, வாழ்வோடு இரண்டறக் கலந்தது ஆகும். விவசாயிகளை வாழ வைத்த கால்நடைகள் இன்று, அவர்களின் கண்ணீருக்கும், ஆற்ற முடியாத பெருந் துய ரத்திற்கும் ஆளாக்கி விட்டன. 

Tuesday, November 19, 2013

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் - வைகோ பங்கேற்பு

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் #வைகோ பங்கேற்பு

அகில இந்திய அளவிலான கரும்பு விவசாயிகள் சங்கப் போராட்டம், மறு மலர்ச்சி தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளரும் ஈரோடு நாடாளும ன்ற உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி தலைமையில் வரும் 12.12.2013 வியாழக்கிழமை அன்று டெல்லியில் மிகப் மிகப்பெரும் அளவில் நடைபெற இருக்கிறது.

Monday, November 4, 2013

வெங்காய அரசியல்!

சங்கொலி தலையங்கம் 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் கூட மக் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக
வெங்காயத்தின் விலை ஆகாயத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதான்
கவலைப்படச் செய்திருக்கிறது. இந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும்
இன்றியமையாத பொருள் ‘வெங்காயம்’.நாடு முழுவதும் இதிலே ‘மட்டும்’ஒரு மைப்பாடு இருக்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய அரசு கூறுவது, வெங் காயம் உற்பத்தி குறைவு என்பதுதான்.வெங்காய உற்பத்தியில்முன்னணி மாநி லங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும்
தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேவையான அளவுக்குஉற்பத்தி செய் யப்படவில்லை; என்று அரசு கூறுவதைப் பார்த்தால் மேலோட்டமாக சரியான
காரணம் போன்று தெரியும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

Wednesday, October 30, 2013

கீழப்பாவூர் ராமநதி திட்டம் ? என்ன ஆனது மதிமுக எழுப்பும் கேள்வி

ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு 

கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

Sunday, October 20, 2013

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குக-மதிமுக

கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை யை  அரசு உடனடியாக வழங்கவேண்டும் என #மதிமுக சார்பில் வலியுறுத்தல்  

இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது,

Tuesday, October 15, 2013

விவசாயக் கடன் அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சி ?

மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவு கடன்முறையின் அடித்தளத்தைத் தகர்க் கும் முயற்சியை முறியடிப்போம்!
#வைகோ அறிக்கை 

இந்தியா எங்கும் கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதோ டு அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்கு உதவ, அரசுக்குள் ஓர் அரசாக (State within a State) ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச் செயல்பட்டு வருபவை கிராமக் கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங் கள் ஆகும். மாவட்ட அளவில் இவற்றுக்குக் கடன் வழங்கி வழிகாட்டக் கூடிய வை மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கிகள் ஆகும். மாநில அளவில் இவற் றுக்குக் கடன் வழங்கி பாதுகாப்பவை மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகும். இதை மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவுக் கடன்முறை என்பர். 

Thursday, October 10, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்-பகுதி 2

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ


ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!


தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


அலைமோதும் நினைவுகள்

முதன் முதலாக என் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை சவேரியார் கல் லூரியில் பயில்வதற்காக வந்தேன்.நான் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே
படித்துவிட்டு, அதிகம் மதிப்பெண் பெற்றதனால் பரிந்துரை இல்லாமல் பாதர் கத்தோலிக்க சாமியார் சூசைஅவர்கள் முதல்வராக இருக்கும்போது நான் சேவியர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு பட்டணமே தெரியாது. எனக்குத் திருநெல்வேலியே சொர்க்கலோகமாகத் தெரிந்தது. மாடுகள் பூட்டப் பட்ட வில்வண்டிதான் எங்களுக்கு கார்.அங்கு நான் சந்தித்த என் உயிர் நண்பன் நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் இந்த ஏரலைச் சேர்ந்த ஆனந்த முதலியாருடைய குடும்பத்துப் பிள்ளை மாரி இராமச்சந்திரன். நாங் கள் உயிருக்கு உயிராகப் பழகினோம்.சித்திரம்போல் எழுதுவார்.சிறந்த கவிஞர் உயர்ந்த ஒழுக்கமான குடும்பத்திலே உள்ளவர்.நானும் அவரும் உயிர் நண்பர் கள்.

Wednesday, October 9, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்.

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ

ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு  எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!

தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை யின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


தூத்துக்குடி மாவட்ட - தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவ சாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டு - செப்டம்பர் 29 அன்று ஏரலில் நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

Tuesday, October 1, 2013

எந்நேரத்திலும் விவசாயிகளுடன் போராட தயாராக உள்ளோம்

தாமிரபரணி பாசன பகுதி விவசாயிகளுக்காக எந்நேரத்திலும் விவசாயிகளு டன் போராட தயாராக உள்ளோம் என ஏரலில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் #வைகோ யும் நல்லகண்ணுயும் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புபேரவை சார்பில் விவசாயி கள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாடு ஏரல் ராசி திருமண மண்டபத்தில் நடந் தது. நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை தாங் கினார். விவசாயி சம்பத் மாநாட்டை தொடங்கி வைத்தார். விவசாயி சிவஞான வேல் வரவேற்றார்.

Friday, September 6, 2013

மஞ்சள் வளர்ச்சி நிறுவனம்

ஆன்லைன் வர்த்தகத்தால் மஞ்சள் விவசாயிகளுக்குப் பாதிப்பு...
மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்துக!

பிரதமரிடம் #மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை

தேசிய பண்டக வகையீடு சந்தையில் (NCDEX) முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.
விசாரணை கோரியும், மஞ்சள் விவசாயிகளுக்கு தனியாக மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்தித் தரவேண்டியும் 26 ஆகஸ்டு 2013 ஆம் நாள் ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி இந்தியப் பிரதமரிடம்
அளித்த கோரிக்கை மனு வருமாறு:

Tuesday, August 27, 2013

மஞ்சள் விவசாயுடன் மதிமுக

மஞ்சள் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த
விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு தொகுதி #மதிமுக மக்களவை உறுப்பினர் ஏ. கணேசமூர்த்தி, தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நாம நாகேஸ்வர ராவ், ரமேஷ் ரத்தோடு ஆகியோருடன் மஞ்சள் விவசாயிகள் சங்க தேசிய தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, ஆந்திர பிரதேச மாநில தலைவர் நரசிம்ம நாயுடு ஆகியோர் நாடாளுமன்ற வளாகத் தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள் கிழமை சந்தித்தனர்.