கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!
பொதுவாக்கெடுப்பில் தமிழ் ஈழம் மலரச் செய்வோம்!!
விருத்தாசலம் இரயில் மறியல் கிளர்ச்சியில் #மதிமுக ஆ.வந்தியத்தேவன் சூளுரை
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந் து கொள்வதைக் கண்டிப்பதற்காக, முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல்
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்த்தெழுந்து போராட அணி திரண்டு வந் துள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகம், வணிகர்சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழுவுரிமைக்கட்சி, தமிழ் தேச பொது உடமைக் கட்சி, மனித நேய மக் கள் கட்சி, ஆகிய அமைப்புகளின் தோழர்களுக் கெல்லாம் கனிவான வாழ்த்து
களையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இப்போது போராடிக் கொண்டு இருக்கி றோம். ஆனால், இது மட்டுமே நமது கோரிக்கை அல்ல! காமன் வெல்த்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் கழுத்தைப் பிடித்து
வெளியேற்ற வேண்டும்.இனப்படுகொலை நடந்த இலங்கைத் தீவில் மாநாட் டை நடத்தக் கூடாது. கொடியவன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பொது வாக் கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போருக் குப்பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் அரச வன் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காகப் போராடி வருகிறோம்.