Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
Saturday, March 1, 2014
Tuesday, December 17, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 36
நாள்:-10.02.2009
சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை
இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.
ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.
இசைப்பிரியா போர்க்குற்றத்தின் சாட்சி -தீபச்செல்வன்
அண்மையில் பிரித்தானியாவில் உள்ள சேனல்-4 என்ற தொலைக்காட்சி, தமி ழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வத்தொலைக்காட்சியான
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப் பிரியாவின் இறுதி நிமிடக் காட்சி ஒன்றை ஒளி பரப்பியது. மாபெரும் இன அழிப்புப் போர் ஒன்றின் முடிவில் அகப்பட்ட பெண் ஒருத்தி மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் போர்க்குற்றங்களின் ஆதாரமாக அந்தக் காட்சி அமைந்துள்து. குறித் த காட்சி ஈழத்தை மாத்திர மின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
சிங்கள அரசு நடத்திய மாபெரும் குற்றங்கள் நிரம்பிய இனப்படு கொலைப் போரின் ஆதாரமாகவும்,அது அமைந்திருந்தமை சிங்கள அரசையும் உலுப்பியி ருக்கின்றது.
ஒரு போரில் குழந்தைகளையும்,பெண்களையும் முதியவர் களையும் கொல் வது மரபல்ல.அவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களை பாதுகாப்பான பிரதே சங்களுக்குச் செல்லுமாறு கோருவது பண்டைய கால போர் மரபு. ஆனால், சிங்கள அரசைப் பொறுத்தவரையில் குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என்று யாவரையும் ஒரு இடத்தில் வருமாறு அழைத்துவிட்டு அந்த இடத்தில் குண்டுகளைப் போட்டு கொலை செய்வதே போர் மரபு.ஈழப் போர் தொடங்கிய காலம் தொட்டு குழந்தைகளும், பெண்களும் தொடர்ச்சியாக அழிக்கப் பட்டிருக் கிறார்கள். ஏனெனில் பெண்கள் ஒரு இனத்தை உருவாக்குகிறார்கள். குழந்தை கள் ஒரு இனத்தின் புதிய சந்ததி.அதன் காரணமாகவே ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற்காக குழந்தைகளையும் பெண் களையும் சிங்கள அரச படைகள்
தேடித் தேடிக் கொலை செய்கின்றன.
Monday, December 16, 2013
மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 12
ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கைக்கு உதவுவதா?
தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்! இதற்குத்தானா இந்தியாவின்
நிதி உதவி? #மதிமுக அ.கணேசமூர்த்தி கண்டனம்
இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப் பினர் அ.கணேசமூர்த்தி 25.8.2010 அன்று ஆற்றிய உரை...
சபாநாயகர் அவர்களே! அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சில விஷயங் களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இலங் கைத் தமிழர்கள் தங்களது பழைய வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார் களா? என்பதை அறிய விரும்புகிறேன்.
Sunday, December 15, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 35
நாள்:-29.4.2009
ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்திய அரசின் துரோகங்களுக்கு, கருணா நிதிதான் கூட்டுப் பங்காளி!
இரண்டாம் உலகப் போரின்போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்க நாஜி கள் திட்டமிட்டுப் படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கரு அறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக் கிறான். இந்தத் தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு,முழுக்க முழுக்க ஆயுத உதவி செய் தது இந்திய அரசுதான்.
1998ஆம் ஆண்டில், அன்றையப் பிரதமர் வாஜ்பாய அவர்கள், டெல்லியில் கூட் டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,‘இலங்கையில் தமிழ் இனக் கொலை நடத் தும் சிங்கள அரசுக்கு, இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது இல்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதைக் கடைப்பிடித்தது.
Thursday, December 12, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 34
நாள்:-27.4.2009
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! ஒபாமாவுக்கு #வைகோ வேண்டு கோள்
அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள், இன்று (17.5.2009) எழுதி உள்ள மின் அஞ்சல்:
அமெரிக்கக் குடியரசுத் தலைவர், மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு
வணக்கம்.
இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ் கின்ற பத்து கோடி தமிழர்கள் சார் பிலும், இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சே இலங்கைத்தீவில் வாழ் கின்ற தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவ தை, இரத்தம் கசியும் இதயத்தோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது டன், இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி இந்த விண்ணப் பத்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
Wednesday, December 11, 2013
முற்றங்களும்... முடிவடையா யுத்தங்களும்!
“சாகப் பயந்தவன் தரித்திரன் ஆகிறான்.சாகப் பிறந்தவன் சரித்திரம் ஆகிறான்!”
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
“இந்த சமூகத்தின் கட்டமைப்பே வீர வழிபாட்டில்தான் அமைந்து கிடக்கிறது” என்றான் இங்கிலாந்து நாட்டின் தாமஸ் கார்லைல். ஆம்! நாட்டினுக்காய் உயி ரை ஈந்தோ ரின் “நடுகல்” வழிபாட்டிலும் - கொற்றம் அமைத்துக் கோலோச்சிய நம் மூதாதை மன்னர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் -முன்னின்று போரா டிகளச் சாவினுக்கும் - கொடுந்தண்டனைக்கும் தன்னுயிர் ஈந்த மாமன்னர்க ளின் வீர வழி பாட்டிலும் தாய்த் தமிழகம் பன்னூறு ஆண்டுக் காலமாய் பற்றி வருகிற வீர வரலாறாகும்.
போரில் வீரம் காட்டி இறந்து நடுகல்லாய் நிற்கும் உண்மை வீரர்களே, தமிழர் களின் தெய்வங்கள் என்று புற நானூறு பேசும்!. அந்த வகையில் - அந்த வழி யில் சாதனைச் சரித்திரம் பேசும் சரித்திர மனிதர்களின் சதுக்கங்களே நினைவு முற்றங்களாக முகிழ்த்து நிற்கின்றன நாடுகள் தோறும். அந்த சதுக்கங்கள் பேசும் சரித்திரம் ஒன்றல்ல - இரண்டல்ல -ஓராயிரம். அந்த ஓராயிரத்தில் ஒரு
சிலவற்றை நினைத்துப் போற்ற -நினைவில் நிறுத்தத் தான் முற்றங்களும்! முடிவடையாயுத்தங்களும்!!.
ஈழத்தில், இனப்படுகொலை தான் ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம்
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறி விப்பு இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது
#வைகோ அறிக்கை
இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர் களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது.
இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படு கொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
Tuesday, December 10, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 33
நாள்:-14.05.2009
இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத்தமிழர் களைக் காப்பாற்றுங்கள்!
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு #வைகோ வேண்டு கோள்
இலங்கையில் சாவின் விளிம்பில் உள்ள மூன்று இலட்சம் தமிழர்களையும்
முழுமையாக அழித்து ஒழிப்பதற்கு, முப்படைகளையும் தீவிரமாகப் பயன் படுத்தி வரும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று (14.05.2009) மின் அஞ்சல் மற்றும் தொலை நகல் (ஃபேக்ஸ்) மூலமாக அவசர வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:
Monday, December 9, 2013
சிதம்பரத்தின் பகல் கனவு பலிக்காது!
சங்கொலி தலையங்கம்
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு சிங்கள கொலைவெறியன் ராஜ பக் சேவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தது மட்டுமின்றி,ராஜபக்சே நடத்திய இனப்படு கொலை குற்றங்களிலிருந்து அவரைக் காப்பாற்றவும்,இந்த நிமிடம் வரை செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை மாற்றிவிட லாம் என்று பகல் கனவு காணு கிறது.
அதனால்தான் நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கருத்தரங்கம் நடத்தி, அதில்.‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை யும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசி இருக்கின் றார்.இந்நிகழ்வில், உரையாற்றிய ப.சிதம்பரம் அப்பட்டமான முறையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
Thursday, December 5, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 32
நாள்:-29.4.2009
உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!
பாரக் ஒபாமாவுக்கு #வைகோ வேண்டுகோள்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று (29.4.2009) அனுப்பி உள்ள மின் அஞ்சல் :
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு,
வணக்கம்.
இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை,
கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகி றேன்.
Sunday, December 1, 2013
மத்திய அரசின் ரகசிய சதி வேலை - வைகோ குற்றச்சாட்டு
இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும்,கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும்,மத்திய அரசின் ரகசிய சதி வேலை - #வைகோ குற்றச் சாட்டு
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படு கொ லையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு தான் நேரடியாகவும், மறை முகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.
2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந் தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் அதிபர் ராஜபக்சேவும், இலங் கை அமைச்சர்களும் கூறினர்.
Thursday, November 28, 2013
மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5
தமிழ் இன அழிப்பில்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நாடாளு மன்றத்தில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அன்று ஆற்றிய உரை:
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும் வாப்பளித்ததற்கு நன்றி. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாறிய மாண்பு
மிகு அத்வானி அவர்கள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி உரைக்கு எனது நறியைத் தெரிவித்துக் கொள்கிற அதேநேரத்தில்,அதில் உள்ள குறை களையும் சுட்டிக்காட்டும் வாய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்படுத் திக் கொள்ள விரும்புகிறேன்.
Wednesday, November 27, 2013
ஈழத்தில் இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கைப் பயணம்
சங்கொலி தலையங்கம்
உலகத் தமிழர்களின் எதிர்ப்பை துச்சமாகக் கருதிய இந்திய அரசு, கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில்,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில்
கலந்துகொண்டார்.
மாநாட்டிற்கு தாம் செல்ல முடியாதது குறித்து ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங்,காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து இருந்தார். மன்மோகன்சிங் பிரதமர் பதவி ஏற்ற ஒன்பதரை ஆண்டு காலத்தில் நடைபெற் ற ஐந்து மாநாடுகளில் இரண்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாட்டில்
எழுந்த எதிர்ப்புதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது அப்பட் டமான பொய் என்பது உலகத்திற்குத் தெரியும். இந்தியாவின் சார்பில், வெளியு றவு அமைச்சர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜபக்சே கூறி இருப் பதில் இருந்தே இந்தியாவும்-இலங்கையும் பேசி வைத்துக்கொண்ட நாடகம் தான் ‘காமன்வெல்த் உச்சி மாநாடு’ என்பது விளங்கும். 53 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே நவம்பர் 15 தொடங்கி, 17 வரை நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மட்டுமே வந்திருந்தனர்.
Sunday, November 24, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 31
நாள்:-12.01.2009
ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்!
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவ னத்துக்கும், நடவடிக்கைக்கும் எழுதி உள்ளேன். இலங்கைத் தீவில்,இரத்த வெறி பிடித்த இனவாத சிங்கள அரசு, தமிழ் இனத்தையே படுகொலைசெய்து பூண்டோடு அழிக்க, முப்படைகளையும் ஏவி ‘இன அழிப்பு’யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில், இந்த இனக்கொலையை நடத் துகிறது.
இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக் கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாமல் பீரங்கித் தாக்கு தலும், விமானக் குண்டு வீச்சும் நடத்துகிறது.பசுமை நிறைந்த ஈழத்து வயல் வெளிகளில், தமிழர்களின் குருதி வெள்ளமாகப் பாய்கிறது.
மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 2
இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனிஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு!
2009 - 2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது #மதிமுக நாடாளுமன்றக் கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் மக்க ள வையில் 13.07.2009 அன்று ஆற்றிய உரையின் விவரம்...
அவைத்தலைவர் அவர்களே, 2009-2010 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை யின்போது எனக்குப் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றி. உலகப் பொருளா தார வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் மந்தம் தட்டியுள்ள நிலையில் சமர்ப் பிக்கப்பட்டு உள்ள இந்த நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத் தை அளிக் கிறது.
மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு - தினக்கூலி பெறும் ஏழை மக்களுக்கு ஒரு சிறிய வரி விலக்கு மட்டுமே அளித்து இருப்பது மிகுந்த ஏமாற் றத்தைத் தருகிறது. ஆகவே,இவர்களுக்கு அரசு முழு உதவி செய்ய வேண்டும்.
Monday, November 18, 2013
வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 30
நாள்:-09.12.2008
தமிழக அரசியல் தலைவர்களை, ‘கோமாளிகள்’ என்ற இலங்கைத் தளபதி யைக் கண்டியுங்கள்!
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சே கா, மிகுந்த ஆணவத்தோடும், திமிரோடும் தெரிவித்து இருக்கின்ற கருத்துகள், இலங்கை அரசின் அதிகாரபூர்வ இதழான ‘சண்டே அப்சர்வர்’, 2008 டிசம்பர் ஏழாம் நாளிட்ட இதழில் வெளியாகி இருப்பதை, மிகுந்த வேதனையோடு தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
‘‘தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகள் சொல்லுகின்ற கருத்துகளை, காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிமடுக்காது; என வே, போர்நிறுத்தம் செய் யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு ஒருபோதும் கேட்டுக்கொள்ளாது’ என்று அவர் கொக்கரித்து உள்ளார்.
Wednesday, November 13, 2013
காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்:வணிகப் பெருமக்களுக்கு நன்றி! வைகோ அறிக்கை
காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்: தமிழகத்தில் மகத்தான வெற்றி! வணிகப் பெருமக்களுக்கு நன்றி! #வைகோ அறிக்கை
மனிதகுல வரலாற்றில் அடால்ப் ஹிட்லரின் நாஜிகள் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல, இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவின் சிங்களப் பேரினவாத அரசின் அநீதி யான அக்கிரமங்கள் நிறைந்த கோரக்கொடுமைகளை எதிர்த்து, தமிழக மக்கள் நேற்று (12.11.2013) நடத்திய முழு அடைப்புப் போராட்டமும், குறிப்பாக கடை அடைப்புப் போராட்டமும், இரயில் மறியல் போராட்டமும் மகத்தான வெற்றி யைப் பெற்றது.
வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட இருபது தன்மானத் தமிழர்கள் தங்கள் உடம்பில் பெட்ரோலை ஊற்றி அணைத்துக்கொண்ட மரணத் தீ, தமிழர்களின் நெஞ்சில் அணையாத நெருப்பாகவே கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை தமிழக மக்கள் நேற்று நிரூபித்துவிட்டனர்.
Sunday, November 10, 2013
வஞ்சினம் உரைப்போம்!
சங்கொலி தலையங்கம்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் சேனல்-4 தொலைக்காட்சி இன்னும் என்னென் ன காணொளி காட்சிப் படங்களை ஒளிபரப்பி தமிழர் இதயத்தில் எரியீட்டியை
பாய்ச்சுமோ என்று கண்ணீர் விடுகிறது தமிழ் இனம். சேனல்-4 தொலைக் காட் சி நவம்பர் 1 ஆம் நாள் ஒளிபரப்பிய காணொளி காட்சியைப் பார்த்தவர்கள் எல் லாம் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். தமிழ்ச் சமுதாயத்திற்கு இத்தகைய துயரம் இனி நேரக்கூடாது. நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தொன்மை மிக்க தமிழ்க்குலத்தின் தாரகை ‘ஷோபா’ எனும் இசைப்பிரியா, சிங்கள காடை யர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ர வதை செய்யப்பட்டு, படுகொலையாகிக் கிடக்கும் காட்சிகள் தமிழர் நெஞ்சில்
மட்டுமல்ல, அதைப் பார்க்கும் மனித சமூகத்தைச் சேர்ந்த அனைவர் நெஞ்சி லும் எரிமலை வெடிக்கும்.
Friday, November 8, 2013
இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும் ,நவம்பர் 12 தமிழகத்தில் முழு அடைப்புக்கும் தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும்
ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும்
நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் கடை அடைப்புக்கும் முழு அடைப்புக்கும்
தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும் #வைகோ அறிக்கை
இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளாலும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
