Showing posts with label கொளத்தூர் மணி. Show all posts
Showing posts with label கொளத்தூர் மணி. Show all posts
Sunday, December 8, 2013
Friday, December 6, 2013
கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை இரத்து செய்ய வேண்டும்
கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் உள்துறைஅமைச்சருக்கு #வைகோ கோரிக்கை
#மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட் டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்த போது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறை யினர் கைது செய்து,பொய் வழக்குப்போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப் புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளை யை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.
Tuesday, November 5, 2013
கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை
கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை - #வைகோ கண்டனம்
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப் பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெய லலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.
Monday, November 4, 2013
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோமாவில் இருந்தாரா ?
#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.
Saturday, November 2, 2013
அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது! அரசின் எதேச்சதிகார அடக்குமுறை வைகோ கண்டனம்
அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது!
அண்ணா திமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை
#வைகோ கண்டனம்
இன்று நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலை வர் கொளத்துர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மேஜிஸ்ரேட் முன்னிலை யில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளா கவே சேலம் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைத்தீவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி, கொலைபாத ராஜபக்சேவை அடுத்த இரண்டு ஆண்டுக ளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக்கும் மன்னிக்க முடியாத அக்கி ரமத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து, தமிழர்கள் மீது படுகொலையை நடத்தியவனை குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக கீரிடம் சூட்டுகிற ஈனத்தனமான வேலையை இந்திய அரசு செய்தது.
Tuesday, July 16, 2013
ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 2
மே 18 ஆம் தேதி, உலகம் முழுமையும் தமிழன் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றான்.ஆனால், தமிழரின் இரத்தக் குளியல் நடத்திய இராஜ பக்சேவோடு இந்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. எதற்காக அதை அனுப்ப வேண்டும்? தமிழர்களுக்குச் சொரணை இல்லை என்று கருதுகிறாயா? உணர் வுகள் மரத்துப் போய்விட்டன என்று கருதுகிறாயா? அந்தக் கொலைகாரனை இங்கே அழைத்து வந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறாய்.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு, அவனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றீர்களே, அவன் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கின்ற நீ, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஒரு கூட்டுக் குற்றவாளி.மன்மோகன் சிங் தலைமையிலான, சோனியா காந்தி இயக்குகின்ற அரசு, நடைபெற்ற இனப் படுகொலையில் ஒரு கூட்டுக்குற்றவாளி. நாம் எப்படி மன்னிக்க முடியும்?
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு, அவனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றீர்களே, அவன் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கின்ற நீ, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஒரு கூட்டுக் குற்றவாளி.மன்மோகன் சிங் தலைமையிலான, சோனியா காந்தி இயக்குகின்ற அரசு, நடைபெற்ற இனப் படுகொலையில் ஒரு கூட்டுக்குற்றவாளி. நாம் எப்படி மன்னிக்க முடியும்?
Monday, July 15, 2013
ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 1
ஈழப்பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறு அணையிலும், தமிழருக்குத் துரோகம் இழைத்த இந்தியா!
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் #வைகோ குற்றச்சாட்டு
“ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக” என ஐ.நா.வையும், இந்திய அரசை யும் வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில், 19.5.2012 அன்று பெரியார் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற உரிமை முழக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில்
இருந்து....
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
Monday, June 24, 2013
நெருப்போடு விளையாடாதே! -பகுதி 2
வன்னிக்காட்டில் நான் தம்பியோடு இருந்தபோது, ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். ஆங்கிலம் படிக்கவில்லை என்று அவருக்கு வருத்தம் இருந்திருக் கலாம். ஆனால், அருமையாகப் புரிந்து கொள்வார்; அதைப்பற்றி விளக்கமும் சொல்வார். மிக்கி மவுஸ் போல ஒரு கார்ட்டூன் படம். அந்த உருவம் ஆங்கிலத் தில் பேசுவது போல ஒரு குரல் வரும். அதை அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்துப் பிரபாகரன் சொல்லிக்கொண்டு இருந்தார் என்று மணி கூறினார்.
விடுதலை வேட்கையைத் தூண்டக்கூடிய படங்களைத்தான் அவர் விரும்பிப் பார்ப்பார். அது மட்டும் அல்ல, தன்னுடைய சகாக்களுக்கும் போட்டுக்காண்பிப் பார். அப்படிப்பட்ட படங்களில், பால் உணர்வைத் தூண்டுகின்ற காட்சிகள் மறைக்கப் பட்டு விடும். வன்னிக் காட்டில் அவரோடு இருந்தபோது, அப்படி இரண்டு மூன்று ஆங்கிலத் திரைப்படங்களையும் அவரோடு நான் பார்த்து இருக்கின்றேன். திரில்லர் படங்களைப் பார்ப்பார். யுத்தத்தை மனதிலே வைத் துக்கொண்டுதான், அதைப்பற்றிய படங்களைத்தான் பார்ப்பார். அவருக்கு நிகராகப் பணி அணிகளை நடத்தியவன் உலக வரலாற்றில் வேறு எவனும் கிடையாது.
Sunday, June 23, 2013
நெருப்போடு விளையாடாதே! -பகுதி 1
‘தந்தையும் தம்பியும்’ என்னும் பொ.தங்கபாண்டியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா 02.12.2011 அன்று சென்னை - தியாகராயர் நகரில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
நான் வயது முதிர்ந்த கிழவன் அதனால் நான் பலாத்காரத்தில் நம்பிக்கை இல் லாதவனாக இருக்கலாம். நாளைய இளைஞர்கள்,இரத்த வெள்ளத்திலே நின்று பிரிவினை கேட்பார்கள். கத்தி முனையிலே நின்று பிரிவினை கேட் பார்கள் என்ற தந்தை பெரியார் அவர்களுடைய காலத்தின் கல்வெட்டாகப் பதிக்கப் பட்ட வாசகங்களையும்,
நான் வயது முதிர்ந்த கிழவன் அதனால் நான் பலாத்காரத்தில் நம்பிக்கை இல் லாதவனாக இருக்கலாம். நாளைய இளைஞர்கள்,இரத்த வெள்ளத்திலே நின்று பிரிவினை கேட்பார்கள். கத்தி முனையிலே நின்று பிரிவினை கேட் பார்கள் என்ற தந்தை பெரியார் அவர்களுடைய காலத்தின் கல்வெட்டாகப் பதிக்கப் பட்ட வாசகங்களையும்,
Saturday, May 18, 2013
முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம்
முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம். தானா தெரு, சென்னை

புகைப்பட தொகுப்பு

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை
மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி.....
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
Monday, May 6, 2013
இளைஞர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் திரண்டு எழட்டும்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘பிரபாகரன்’ என்றே தமிழகம் பெயர் சூட்டும்! பெரியார் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் வைகோ
மே திங்கள் இரண்டாம் நாள் கொங்கு மண்டலத்தில் மாநகர் கோவையை அடுத்து உள்ள நீலம்பூர் சாலையில், ‘ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு இந்திய அரசால் அனுப்பப்படவிருந்த இந்திய ஆயுதங்களை ஏந்திவந்த இராணுவ வாக னங்களைத் தடுக்க வாரீர்’ என்று முழங்கி, உயிருக்கு ஆபத்து நேரும் என் ற போதும் அஞ்சாமல், மரணத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தமிழ் நாட் டின் தன்மான உணர்வை நிலைநாட்டிய வீரர்களான கோவை இராமகிருஷ்ணன், அருமைத் தோழர் மானமிகு இலட்சுமணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தம்பி
சந்திரசேகரன், கழகத்தின் கண்மணி வேலுசாமி, அந்தப் போர்க்களத்துக்குத் துணிந்துசென்ற குட்டிமணி என்கின்ற வீரமணி ஆகிய தோழர்கள் தேசப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அக்கிரமத்தைக்
கண்டித்து, கோவை மாநகரில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களோடு இணைந்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினோம்.
Wednesday, May 1, 2013
மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும்: வைகோ, கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் உரை
மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் சார்பில் மரணதண்டனையை எதிர்த்து சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நேற்று (30.04.13 )மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழின கட்சித் தலை வர்களும், இயக்கத்தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர்.
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க கொளத்தூர் மணி அவர்கள் தொகுத்துவழங்கினார். நிகழ்வில் சிறையில் வாடும் பேரறிவாள னின் தாயார் அற்புதம் அம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக்கட்சித்தோழர் பண்ருட்டி வேல்முருகன், காந்திய மக்கள் இயக் கத்தோழர் தமிழருவி மணியன், தபெதிக தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புலிகள் தோழர் நாகை.திருவள்ளுவன, தோழர் தியாகு, மக்கள் நல்வாழ்வு இயக்க தோழர் கண.குறிஞ்சி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், த.தே.பொ.க தோழர் பெ.மணியரசன், இரா.அதிய மான், மே பதினேழு இயக்கப்பொறுப்பாளர் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க கொளத்தூர் மணி அவர்கள் தொகுத்துவழங்கினார். நிகழ்வில் சிறையில் வாடும் பேரறிவாள னின் தாயார் அற்புதம் அம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக்கட்சித்தோழர் பண்ருட்டி வேல்முருகன், காந்திய மக்கள் இயக் கத்தோழர் தமிழருவி மணியன், தபெதிக தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புலிகள் தோழர் நாகை.திருவள்ளுவன, தோழர் தியாகு, மக்கள் நல்வாழ்வு இயக்க தோழர் கண.குறிஞ்சி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், த.தே.பொ.க தோழர் பெ.மணியரசன், இரா.அதிய மான், மே பதினேழு இயக்கப்பொறுப்பாளர் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
Monday, April 22, 2013
அடுத்த கட்ட நகர்வு என்ன? எனத் திக்குத் தெரியாத நிலையில் திகைத்து நின்றபோது, வழிகாட்டியவர் வைகோ!- கொளத்தூர் மணி
சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில், கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற மாநாட்டிலும், தஞ்சை வழக்குரைஞர் மன்றத்திலும் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பு, இங்கே நூலாகவும், குறுந்தட்டாகவும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்
ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்துகின்ற வகையில், இந்த வெளி யீடு கள் அமைந்து இருக்கின்றன.
தமிழர்களுக்குச் சிக்கல்கள் நேருகின்ற பொழுதெல்லாம் முகம் கொடுக்கின்ற
ஒரு போராளி, மதிப்பிற்கு உரிய அண்ணன் வைகோ அவர்கள், இன்றைய சூழலில், நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருக்கின் றார்.
Subscribe to:
Posts (Atom)

