Showing posts with label மறுமலர்ச்சி பயணம். Show all posts
Showing posts with label மறுமலர்ச்சி பயணம். Show all posts

Tuesday, November 19, 2013

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி பயணம் -2ம் கட்டம் - பாகம் 2

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், "மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பய ணம்' இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில், நேற்று (18.11.13), #மதிமுக பொதுச்செய லாளர் #வைகோ பங்கேற்றார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மழைக்கு இடையே வைகோ பேசியதாவது:

நாடு முழுவதுமாக கரும்பு விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய், வயல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கரும் புக்கான பணத்தை, 15 நாளில் ஆலைகள் வழங்க வேண்டும்.

உள்நாட்டு கரும்பு விவசாயிகள் நலன் கருதி, வெளிநாடுகளின் இருந்து கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இறக்குமதி வரியை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்.

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி பயணம் -2ம் கட்டம் - பாகம் 1

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன் றிய பகுதியில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்’’ நேற்று (18.11.13 ) மேற்கொண்டார்.

கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து வைகோ தனது பயணத் தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள் பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்

Thursday, November 14, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் #வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம் என்றும் இல்லா எழுச்சி... எங்கும் மக்கள் பெருவெள்ளம் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டு
இருக்கிறது. யார் யாரோடு கூட்டணி;இவர் அவரோடு சேருவாரா? அவர் என்ன
முடிவெடுப்பாரோ! என்று அரசியல் கூட்டணியை ஆளுக்கு ஒரு விதமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், தமிழகத்திலேயே, ஏன்
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு தலைவர்தான் தம் கட்சிச் சின்னத் திற்கு வாக்குக் கேட்டு பிரச்சாரப் பயணத்தை 2013 செப்டம்பர் 30 அன்று தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தொடங்கினார். அவர்தான் எதற்கும்,
எதிரிக்கும் எப்போதும் அஞ்சாத நம் தலைவர் வைகோ.

தூத்துக்குடி, ஈரோடு மாவட்டப் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து,
ஆரூயிர் தலைவர் வைகோ அவர்களை மக்கள் பிரதிநிதியாகக் கொண்டிருந்த
வரலாற்றுப் பெருமைக்குரிய விருதுநகர் தொகுதியில், அக்டோபர் 23 மாலை 4
மணிக்கு அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் பிரச்சாரப்
பயணத்தைத் தொடங்கினார்.

Sunday, October 27, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 5

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் (25.10.13) வெம்பக் கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத் தில் பேசினார் .. பேச்சின் சுருக்கம் வருமாறு..

கிராமத்தில் பலசமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறித்து மகிழ்ச் சியடைகிறோன்.ஜாதி,மத பூசல்கள் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடி யாது.இளம் பெண்கள், படிக்கும் மாணவர்கள், புதியவாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.வாக்காளர்களின் இந்தமனநிலை வரவேற்க்கதக்கது.

தமிழக மீனவர்களை இலங் கை அரசு கைது செய்த போது மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. ஊழல் செய்வதிலும், மக்கள் விரோத நடவடிக்கையில் மட் டுமே மத்திய அரசு ஈடுபடுகிறது. காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது விற்பனை கிடையாது. அது போன்று மீண்டும் மது விலக்கு அமுல் படுத்த வேண்டும். இளைய சமுதாயம் காப்பாற்றப்பட வேண்டும்.

Saturday, October 26, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 4

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம்  நாளாக நேற்று (25.10.13) வெம்பக்கோட்டை ஒன் றியத்தில் அம்மாபேட்டையில் துவங்கி துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட் டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் ,நதிக்குடி , ஆத்தூர், திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவுபெற்றது. ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடான்பட்டியில் பொது மக்கள் மத்தி யில் தலைவர் வைகோ.

Friday, October 25, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 3

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ இரண்டாம் நாளாக நேற்று (24.10.13) சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுபயணத்தின் படங்கள் ..

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தத்துபட்டியில் மக்கள் தலைவர் வைகோ பொது மக்களுடன் .

Thursday, October 24, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 2

#வைகோ அவர்களின் மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மறுமலர்ச்சிப் பயணத்தின் மூன்றாம் கட்டமாக விருதுநகர் மாவட்டம்- அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். செட்டிகுறிச்சியில் தொடங்கிய பயணம் 19 கிராமங்கள் வழியாகச் சென்று பந்தல்குடி நிறைவடைந்தது. பந்தல்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டப் படங்கள்.


மறுமலர்ச்சி பயணம் ,விருதுநகர் மாவட்டம் -பாகம் 1

தமிழகம் முழுவதும் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ தலைமையில் கட்சியினர் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடியில் 5 நாள் சுற்றுப்பயணமும்,ஈரோட்டில் 2 நாள் சுற்றுப்பயணமும் மேற்கொண்டனர்.அதற்கடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 4 நாள் சுற் றுப் பயணமாக மொத்தம் 100 இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின் றனர்.

அதன் முதல் நாளான நேற்று (23.10.13) அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டி குறிச்சியில் தொடங்கிய பயணம் சின்னசெட்டிக் குறிச்சி, வாழ்வாங்கி, பெரிய நாயகிபுரம், ராமலிங்காபுரம், போடம்பட்டி, தும்மக்குண்டு, சின்னதும்மக் குண் டு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண் டார்.

Thursday, October 10, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மறுமலர்ச்சிப் பயணம்

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு மக்கள் தலைவர் #வைகோ அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக (09.10.2013) கோவில்பட்டி ஒன்றியத்தின் புகைப்படங்கள்


மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் எந்த கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்தில் ம.தி.மு.க மாவட் டச் செயலர் ஜோயல் தலைமையில், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை அன்னை தெரசா நகரில் நேற்று (09.10.13) புதன்கிழமை தொடங்கிய வைகோ அங்கு பேசியதாவது: 

Wednesday, October 9, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் #வைகோ இரண்டாம் கட்டமாக மறுமலர்ச்சி பயணம்

நேற்று (08.10.13) தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற் கொண்டிருக் கிறார்கள். உடன் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் உள்ளார். இப்பயணத்தில் கழக முன்னணினரும், தோழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பயண காட்சிகள்


Tuesday, October 8, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 2

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று (07.10.13 )மாலை கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் யூனியன் பகுதி யில் சுற்றுப்பயணம் செய்தார். குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பய ணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசியதாவது:- 

578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங் கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் (இலங்கை அதிபர் ராஜபக்சே) கையால் பதவி ஏற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 1

தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தலைவர் #வைகோ அவர்கள் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பிரச்சார பயணத்தை புகைப்படங்கள்.


Sunday, October 6, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது கட்டமாக #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ மறுமலர்ச்சி பயணத்தை நாளை (07.10.13) தொடங்குகிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விவ சாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அண்ணாவின் கனவை நன வாக்குவதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடவும், தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், மதுவை அடியோடு ஒழிப்பதற்காகவும் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு உள்ளார்.

Saturday, October 5, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-வைகோ உரை

மாற்றத்தைத் தருகின்ற வலிமையோடு,மக்களைச்சந்திக்கின்றது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தமிழ்நாட்டு வாக்காளர்களே,நேர்மையான அரசியலை ஊக்கு விக்க, ஆதரவு தாரீர்!

மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து மக்கள் தலைவர் #வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் - செய்துங்கநல்லூரில் 30.09.13 அன்று,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தைத் தொடங்கினார்.நிகழ்ச்சியின்போது அவர் ஆற்றிய உரையில் இருந்து.....

Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி பயணம் ,ஈரோடு மாவட்டம்-பகுதி 2

மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளுடன் மட்டும் தான் மதிமுக கூட்டணி வைக்கும் என்று #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் மறுமலர்ச்சி பயணத்தை சோலாரில் இன்று தொடங்கிய வைகோ பேசியதாவது:

மறுமலர்ச்சி பயணம் ,ஈரோடு மாவட்டம்

தற்போது, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில்,இன்று ( 03.10.2013 ) வியாழக் கிழமை #மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் #வைகோ அவர்கள் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாருமான அ.கணேசமூர்த்தி அவர்களும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சி அமைப்பு: ஆர்.பி.சண்முகம், மொடக்குறிச்சி ஒன்றியக் கழகச் செய லாளர்.

மறுமலர்ச்சி பயணம் ,திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றிய-நகர பகுதிகளில் 04.10.2013 வெள்ளிக் கிழமை ,#மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் #வைகோ அவர்கள் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடன் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினரும், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாருமான அ.கணேச மூர்த்தி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் ஆகியோரும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-2 வது நாள்-பாகம் 2

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். 01.10.13 அன்று   ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வ.உ.சி. திடல், அமலிநகர், ஆலந்தலை ஆகிய இடங்களில் பேசினார். 

பிரசாரத்தில் வைகோ பேசியது:–

ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பச்சிளங் குழந் தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது இலங்கை அரசு. அதேபோல் சிங்கள ராணுவம் 578 தமிழக மீனவர் களை இதுவரை கொன்று குவித்துள்ளது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங் கிரஸ் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக வேடிக் கை பார்க்கிறது.

Tuesday, October 1, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-2 வது நாள்

இரண்டாம் நாள் மறுமலர்ச்சி சுற்றுப்பயண புகைப்படங்கள்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களை சந்திக்கும் மறு மலர்ச்சி சுற்றுப்பயணம் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி ஆழ்வார் திரு நகரி ,திருச்செந்தூர் வழியாக ஆலந்தளையில் நிறைவு பெறுகிறது 

வைகோ அவர்களின் பாட்டனார் கோபால்சாமி நாயக்கர் கட்டிய பாலத்தை பார்வை இடும் போது அருகில் மாவட்ட செயலாளர்கள் ஜோயல் ,ப.சரவணன் எஸ் .பெருமாள் ,பாமக மாநில துணை செயலாளர் வீணரசு, மாநில மாண வாரணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் இணையதள ஒருக்கிங்ணைப் பாளர் மின்னல் முகமது அலி