Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, March 1, 2014

கடற்கரையில் மக்கள் பெருந்திரள்-வைகோ அறிக்கை

மார்ச் 2-ஆம் தேதி மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
#வைகோ அறிக்கை

1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளி யளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத் தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  , ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடிவதங்கினர்.

Sunday, December 15, 2013

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன்.அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல் கிறார்.

இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப் பை தவறு என உணர்கிறேன் என்றுசொல்கிறார்.

இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவ ரான ஜெபமணி மோகன்ராஜ் தவறுசெய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 

Saturday, December 14, 2013

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

Sunday, December 8, 2013

கொளத்தூர் மணி ,விடுதலை செய்யக் கோரி பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னை புரசைவாக்கத்தில் நேற்று (07.12.13 )நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் #வைகோ அவர்கள் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


Wednesday, December 4, 2013

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா உரை

பொடா சட்டத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து ஏவியவர்கள் முகத்திரையை கிழித்தவர் #வைகோ!

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா பங் கேற்று உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி ஜெயலலிதா அரசு இரண்டு முறை சட்டசபை யில் தீர்மானம் நிறை வேற்றியது. முதல்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பின் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.இரண்டாம் முறை தீர்மா னம் நிறைவேற்றிய அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பை இடித்துத் தள்ளினர்.

அதே நாளில், முற்றம் இடிக்கப் படுவதை அறிந்து அங்கு வந்து எதிர்ப்புத் தெரி வித்துப் போராடிய அய்யா பழநெடுமாறன், மதிமுக மாவட்டச் செயலாளர் உத யகுமார், தேர்தல் பணித் துணைச்செயலாளர் விடுதலை வேந்தன் உள்ளிட் ட தோழர்கள் 83 பேர் கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் விளை வித் தது எனப் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, December 3, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 2

இரண்டு கட்சிகளும், இந்த மாநிலத்தை பாழ்படுத்திவிட்டன, வழக்கறிஞர்களே,
உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது!என்று சென்னையில் நடந்த வழக் கறிஞர்கள் மாநாட்டில் #வைகோ உரை ஆற்றினார்.சென்ற பாகத்தின் உரை யின் தொடர்ச்சி வருமாறு:

கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டிப் பேசினார்கள்.நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் வழக்குக்காக,
நான் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக நன் மாறன் சொன்னார்.அந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறும்போது, அதைச் சுவாசிக்கின்ற மக்கள் புற்று நோயால் மடிவார்கள்; 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்கள் பாழாகிப் போய்விடும்;கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்காக, அந்த ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

Monday, December 2, 2013

என் குரு நாதர்கள்! -வைகோ

சென்னையில் நடந்த மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ தனது குரு நாதர்களை நினைவு கூர்ந்தார் ... அவரின் உரையில் இருந்து ....

அர்ச்சுனன் அம்பைத் தொடுப்பதில் வல்லவன் என்று நான் படித்து இருக்கின் றேன். அவனுக்கு அந்தக் கலையைக் கற்றுத் தந்தவர் துரோணாச் சாரியார். அந்த மரியாதைக்காகத்தான்,மகாபாரதப் போரின் தொடக்கத்தில், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியாருக்கு முன்பு அம்புகளைத் தொடுத்து, அவர்கள்
முன்னால் தரையில் குத்திடச் செய்தான் தனஞ்செயன்.

என்னை வழக்கறிஞர் தொழிலில் பயிற்று வித்தவர் அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள். 1964 ஆம் ஆண்டு, திருவேங்கடம் என்ற ஊரில், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை ஆற்ற வந்த போது, அவருக்கு முன்பு நான் பேசினேன். ‘பேச்சை நிறுத்தாதே, தொடர்ந்து பேசு’ என்றார்.கூட்டம் முடிந்தபிறகு, என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய், சுப்பையாத் தேவர் வீட்டில் நடந்த விருந்தில் பக்கத்தில் உட்கார வைத் துச் சாப்பிடச் சொன்னார்.தம்பி நீ எந்த ஊர்? என்று கேட்டார்.மூன்று கல் தொலைவில் உள்ள கலிங்கப்பட்டி என்று சொன்னேன். ‘எப்படி வந்தாய்?’ என்று கேட்டார்.‘சைக்கிளில் வந்தேன்’ என்று சொன்னேன். சைக்கிளை வேறு
ஒருவரிடம் கொடுத்து விட்டு, தனது காரில் என்னை ஏற்றி வைத்துக்கொண்டு, அந்த நடுநிசியில் என் வீடு வரையிலும் கொண்டு வந்து என்னை இறக்கி விட் டுச் சென்றார்.


Sunday, December 1, 2013

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டுவிழா

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ பங்கேற்பு

சென்னை - எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" எனும் நூலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெப ராஜ், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் முன்ன ணியினரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Thursday, November 28, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்றுவிடவில்லை. ஈழத்தமிழர் களுக்கு நீதி கிடைக்கும் என்று சென்னையில் நடந்த #மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட் டில் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்களின், இரண்டாவது மாநில மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் தலைமை ஏற்று இருக்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற தேவநேயப்
பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரை ஆற்றி விட்டுத் தமிழகம் திரும்பிய போது,சென்னை விமான நிலையத்தில்,பொடா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். அந்த இரவில், அங்கிருந்தே நேரடியாக மதுரைக்குக்
கொண்டு சென்று, நடுநிசியில் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று
ஆஜர்படுத்தவும், அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆணை பிறப்பித்தார்.

சென்னையில் மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

#மதிமுக சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட் டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நேற்று (27.11.2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர் வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வட சென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.

Saturday, November 16, 2013

மதிமுக வழக்கறிஞர் மாநாட்டு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் மாநாடு இன்று (16.11. 2013 சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் கழகச் சட்டத் துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்களும், மூத்த வழக்கறிஞர் திரு. கே.எஸ் . தினகரன் அவர்களும் இன்று மாலை சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். 

இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் எண். 1


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக!


உரிமையியல் வழக்குகளில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தமி ழக அரசு 19.01.1982-இல் அரசாணை வெளியிட்டது. ஆனால், 05.01.1994 அன்று கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழி யில் இருக்கலாம் என்று R.O.C. No. 3649/92 F  1 என்ற சுற்றறிக்கையை அப் போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிய கே.ஏ. சுவாமி வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கை காரணமாக கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு களைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வழங்கி வருகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு அனைத்துத் தீர்ப்புகளும் தமிழில் மட்டும்தான் வழங்கப்பட உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Tuesday, November 12, 2013

சென்னை சென்ட்ரல் நடந்த ரயில் மறியல் போராட்டம் ஒரு தொகுப்பு

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மதி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செய லாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும் பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட் சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோ கரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

சென்னை சென்ட்ரல் -மதிமுக இரயில் மறியல்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் #மதிமுக துணைப் பொதுச்செய லாளர் மல்லை சத்யா,உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார்,மாவட்டச் செயலாளர் வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி - சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண் ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீத கிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

Monday, November 11, 2013

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்! தலைவர் வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்!

தலைவர் #வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு மைய பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 21.10.2013 முதல் எட்டு நாட்களாக உண்ணாநிலை அறப்போராட் டம் நடத்தி வந்தனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக தலை வர் வைகோ அவர்கள் 25.10.2013 அன்று, மத்திய செம்மொழி தமிழாய்வு மையத் தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

(செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை )

அதன் பயனாக செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் வி.கோ.பூமா, பதிவா ளர் மு.முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை (28.10.2013) திங்கள் காலை 11.30க்கு தொடங்கி 2.30 முடிவுற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட பணியாளர்களின் கோரிக்கைகளைஏற்று விரைவில் நடைமுறைப் படுத்துவதற்கு உத்தரவாதம் வழங்கி கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். அதன்பின் பணியாளர்களின் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

Wednesday, November 6, 2013

கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என 200 பேர் வைகோ முன்னிலையில் மதிமுக வில் இணைந்தனர்

கல்லூரி மாணவர்கள்  இளைஞர்கள் என 200 பேர் #மதிமுக வில் இணைந்தனர் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் பொதுச்செயலாளர் #வைகோ முன்னிலையில், சென்னையை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் பொது இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், பேராசிரியர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Friday, October 25, 2013

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது-சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனக் கோரி #மதிமுக மே 17 இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடந்தது.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது; 

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்;

தனி ஈழம் கோரிக்கை குறித்து இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; 

போர்க்குற்றம் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இன்று (25.10.13)நடந்தது.

Friday, September 27, 2013

சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்த நாள்- வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு #வைகோ மாலை அணிவித்தார்

தினத்தந்தி நிறுவனார் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருஉருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 7 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Friday, April 5, 2013

“நேர்காணல்” வெளியீட்டு விழாவில் வைகோ


தீபச்செல்வனின் கவிதைகள், எழுச்சியைத் தரும்;
ஈழ விடுதலைக்கு எழுத்து ஆயுதம் ஆகும்!


“நேர்காணல்” - தீபச்செல்வன் இதழ் வெளியீட்டு விழா, 29.03.2013 அன்று சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. இதழை வெளியிட்டு, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நெஞ்சில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவதால், என் நினைவு அலைகளிலே, உணர்வுகளிலே நன்றி நிறைந்து இருக்கின்ற ஒரு சூழலில் வந்து பங்கு எடுக்கின்ற நேர்காணல் 6 நேர்காணல்
ஆவது இதழ் வெளியீட்டு விழா,தீபச்செல்வன் என்ற ஈழத்தமிழ்க் கவிஞனை, தமிழ் எழுத்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கு கின்ற, மூண்டு எழுந்த 65 மொழிப் புரட்சியின் தீரமிக்க தளகர்த்தர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, ஈடு இணை அற்ற தன்மான உணர்வு மிக்க எழுத்தாளராகப் பரிணமித்து, சுதந்திரத் தமிழ் ஈழ எண்ணங்களை, எழுத்தில் பேச்சில் வெளிப்படுத்தி வருகின்ற, நான் மிகவும் மதிக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் பா. செயப்பிரகாசம் அவர்களே,