Showing posts with label ராமநாதபுரம். Show all posts
Showing posts with label ராமநாதபுரம். Show all posts

Sunday, November 10, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என நான் சொல்லவே இல்லை-வைகோ

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி சேரப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (09.11.13 ) நடந்த #மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் #வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட ராஜாவை அறி முகம் செய்து வைத்து கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மதிமுக எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கிற இயக்கம். வரப்போ கும் மக்களவைத் தேர்தலில் திமுக,அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவ தில்லை. எங்கள் இயக்கத்தின் கொள்கைகள், லட்சியங்கள் உள்ளவர்களோடு தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இரு பெரிய கட்சிகளிடமும் பணம் இருப்பதால் அவர்கள் தான் வெற்றி பெறுவர் என்ற எண்ணத்தை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதிமுக உடைத்துக் காட்டும்.

Sunday, November 3, 2013

உத்தமர் நென்மேனி ஜெயராமன் மறைவு -வைகோவின் இரங்கல் உரை

மக்கள் மதிப்பைப் பெற்று இயக்கத்துக்கு மாண்பு சேர்த்த உயர்ந்த பண்பாளர் உத்தமர் நென்மேனி ஜெயராமன் என்று #மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ
இரங்கல் உரையில் குற்றிட்டார். உரை வருமாறு...

எனது வாழ்க்கையின் துன்பமான தினங்களுள் இந்த நாளும் ஒன்று.இப்படிஒரு துயரம் வருமென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இந்தப் பகுதியில் செல் வமும், அனைத்துச் சமூக மக்களுடைய அளப்பரிய அன்பும், செல்வாக்கும் பெற்று இருந்த ஒரு பாரம்பரியமான குடும்பத்திலே வந்த எனது ஆருயிர்ச்
சகோதரன் நென்மேனி ஜெயராமன் உடலை, குழிக்குள் இறக்கி, மண்ணைப் போடுகின்ற இந்த நிகழ்வில், என் மனம் கலங்குகிறது. எனது உடன்பிறவாச்
சகோதரர்களுள் ஒருவராக அவர் இருந்தார்.

அவரது மூதாதையர்கள், இப்பகுதியில் மிக்க செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இங்கே உரை ஆற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா ளரும், உயர்நிலைக் குழு உறுப்பினருமாகிய என்னுடைய அன்புச் சகோதரர் சுப.தங்கவேலன் அவர்கள்,தனது மாமன் மகன் ஜெயராமனின் நிலைமையைச் சொன்னார்.

Wednesday, October 30, 2013

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 38ஆவது வருடமாக வைகோ மலர் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 38 ஆவது வருடமாக #வைகோ மலர் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 38ஆவது வருடமாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர்-புதூர் மு.பூமிநாதன், சிவகங் கை-புலவர் செவந்தியப்பன், மதுரை புறநகர் கிழக்கு-வீர தமிழ்ச்செல்வன், மதுரை புறநகர்மேற்கு-முனியாண்டி, தேனி சந்திரன், திண்டுக்கல் என்.செல்வ ராகவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி, மாநில மருத்தவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் பி.சரவணன் ஆகியோரும் கழக முன்னணியினரும் தோழர்களும் உடன் உள்ளனர்.

Tuesday, October 1, 2013

பாம்பன் மீனவர்களை விடு தலை செய்க! வைகோ அறிக்கை

இலங்கையில் சட்டவிரோத காவலில் உள்ள 35 பாம்பன் மீனவர்களை விடு தலை செய்க! #வைகோ அறிக்கை

தமிழக மீனவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் சிங்களப் பேரினவாத இராணுவத் தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 10.11.1984 அன்று இராமேஸ்வரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இது வரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு சேத மாக்கப்பட்டு, பிழைக்க வழியின்றி முடமாக்கப்பட்டுள்ளனர். வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அழித்து அவர்களை செயலற்றவர்களாக்கிவிட்டது சிங்கள இராணுவம்.

Monday, July 8, 2013

மறுமலர்ச்சி காண்போம்!

மனிதநேயம் காப்போம்; மறுமலர்ச்சி காண்போம்!

நிதி வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி!


இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், 27.06.2013 அன்று கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரம் மணக்கின்ற இராமநாதபுரம் தியாகபூமியில், சரித்திரப் புகழ் பெற்ற பல களங்களைச் சந்தித்து இருக்கின்ற இந்த முகவை மண்ணில், இராமலிங்க விலாசத்துக்கு அருகில் இருக்கின்ற இந்தத் திடலில் எத்தனையோ கூட்டங் களில், நான் உரையாற்றி இருக்கின்றேன். இன்றுபோல், மக்கள் கடல் திரண்டு இருக்கக்கூடிய ஒரு கூட்டத்தை இதற்கு முன்பு நான் இங்கே சந்தித்தது இல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பாலும் கட்டுக்கு அடங்காமல்
பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற தமிழ்ப்பெருமக்களின் நம்பிக்கைக் கு உரிய இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் திகழ்கின்றது. கட்சிகளைக் கடந்து, சாதி மத எல்லைகளைக் கடந்து நடுநிலையாளர்கள் இங்கே வந்து குவிந்து இருக்கின்றார்கள் என்றால், நாங்கள் நாணயமானவர்
களாக, அரசியல் ஒழுக்கம் உள்ளவர் களாக, இலட்சியங்களுக்குப் போராடு
கின்றவர்களாக, உங்கள் நம்பிக் கையைப் பெற்று இருக்கின்றோம்.

Saturday, June 29, 2013

மக்கள் மனதில் இமயமாக மதிமுக

ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேர்தல் நிதியளிப்புவிழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நென்மேனி ஜெயராமன் தலைமையில் நடந்தது.

விழாவில் மாவட்ட #மதிமுக. சார்பில் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் #வைகோ பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவு எடுத்த பின்னர்தான் ம.தி.மு.க. மக்கள் மனதில் இமயமாக உயர்ந்து நிற்கிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் 578 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் இலங்கை போர்க்கப்பலை நிறுத்தி மீனவர்களை விரட்டி வருகிறது. மத்திய அரசு இதை தடுக்கவில்லை. இந்திய, இலங்கை கடற்படையினர் கைகோர்த்து கொண்டாட்டம் போடுகின்றனர்.