Showing posts with label காமன் வெல்த். Show all posts
Showing posts with label காமன் வெல்த். Show all posts

Wednesday, November 27, 2013

ஈழத்தில் இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கைப் பயணம்

சங்கொலி தலையங்கம் 

உலகத் தமிழர்களின் எதிர்ப்பை துச்சமாகக் கருதிய இந்திய அரசு, கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில்,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில்
கலந்துகொண்டார்.

மாநாட்டிற்கு தாம் செல்ல முடியாதது குறித்து ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங்,காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து இருந்தார். மன்மோகன்சிங் பிரதமர் பதவி ஏற்ற ஒன்பதரை ஆண்டு காலத்தில் நடைபெற் ற ஐந்து மாநாடுகளில் இரண்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாட்டில்
எழுந்த எதிர்ப்புதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது அப்பட் டமான பொய் என்பது உலகத்திற்குத் தெரியும். இந்தியாவின் சார்பில், வெளியு றவு அமைச்சர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜபக்சே கூறி இருப் பதில் இருந்தே இந்தியாவும்-இலங்கையும் பேசி வைத்துக்கொண்ட நாடகம் தான் ‘காமன்வெல்த் உச்சி மாநாடு’ என்பது விளங்கும். 53 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே நவம்பர் 15 தொடங்கி, 17 வரை நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மட்டுமே வந்திருந்தனர்.

Saturday, October 12, 2013

தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த்மாநாட்டில் பங்கேற்காதே!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தோழர் தியாகு வின் உயிரைக் காப்போம்எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தி யா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார் பிலும் நேற்று (11.10.13) தமிழகமெங்கும்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.