Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts
Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts

Saturday, December 14, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

Wednesday, November 20, 2013

நவம்பர் 21: உலக மீனவர் தினம்! - வைகோ அறிக்கை

நவம்பர் 21: உலக மீனவர் தினம்!

கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்தாத நாளே,அவர்களுக்குப் பொன்னாள்!

#வைகோ அறிக்கை

மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி விவாதித்து, உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராட, மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி னார்கள். அதன் மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட் டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தல் மற்றும் பாரம்பரிய மீன வர்கள், கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குன்றி மீன் பிடித் தொழில் அழிவுப்பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளே, நவம்பர் 21 ‘உலக மீனவர்கள் தினமாக’ அறிவிக்கப்பட்டது.

Saturday, November 2, 2013

சாலமன் மீன்களின் சவால்கள் நிறைந்த பயணம்!

உலக ஜீவராசிகளின் பரிணாமப் பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாக கடல் விளங்குகிறது. முதல் ஜீவராசியான ஒரு செல் உயிரினம் அமீபா. அது நீரில் தான் தோன்றியது.அதுதான் பல்கிப் பெருகி பல்வேறு பரிணாமங்களை அடைந்து மீன்களாக உருவானது. இப்பொழுது நீரில் மட்டுமே வாழ்ந்த ஜீவராசி கள் இடம் பெயர வேண்டிய பரிணாமத்தில் நீரில் வாழ்ந்து நிலத்தை சார்ந்து வாழ்கின்ற, தவளை,ஆமை, முதலை, நண்டு போன்றவை நிலத்தில் முட்டை யிட்டு பொரிக்கச் செய்து பின் நீரில் வாழ்பவைகளாக பரிணாமம் அடைகிறது. தவளைக் குஞ்சுகளை தலைப்பிரட்டை என்று அழைப்பர். அவை பார்ப்பதற்கு மீன் குஞ்சுகளைப் போன்று இருக்கும். வளர வளர உடல் பகுதியில் உள்ள
துடுப்புக்கள் கால்களாக மாறித் தவளையாக உருமாறும்.அடுத்த இடப்பெயர்வு என்பது நிலத்தில் வாழ்ந்து நீரை சார்ந்தவையாக உருவெடுக்கிறது. இப்படி யான சங்கிலித்தொடர் பரிணாமம் தான் பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் ஒன் றை ஒன்று சார்ந்து இன்றைய மனித இனம் உருவாகி முழுமை பெருகிறது. காலச்சூழற்சியில் அடுத்து என்ன நிகழும் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். நீரின்றி அமையாது உலகு என்பது நமது மூதுரை.உலகத் தின் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.

Tuesday, October 1, 2013

பாம்பன் மீனவர்களை விடு தலை செய்க! வைகோ அறிக்கை

இலங்கையில் சட்டவிரோத காவலில் உள்ள 35 பாம்பன் மீனவர்களை விடு தலை செய்க! #வைகோ அறிக்கை

தமிழக மீனவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் சிங்களப் பேரினவாத இராணுவத் தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 10.11.1984 அன்று இராமேஸ்வரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இது வரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு சேத மாக்கப்பட்டு, பிழைக்க வழியின்றி முடமாக்கப்பட்டுள்ளனர். வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அழித்து அவர்களை செயலற்றவர்களாக்கிவிட்டது சிங்கள இராணுவம்.

Wednesday, August 28, 2013

காவு கொடுக்கிறதா இந்திய அரசு?

தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படைக்குக் 
காவு கொடுக்கிறதா இந்திய அரசு? 

#வைகோ கேள்வி

இந்தியாவில் ஒரு அரசு இருக்கிறதா? துணைக்கண்டத்தின் அனைத்து மக்க ளுக்குமான அரசு இருக்கிறதா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என்பதுதான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் தினமும் உதிப்பது போலத்தான், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சுடுவதும், கொல்வதும், சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும், இலங்கைச் சிறை களில் அடைப்பதும், நாள் தவறாமல் நடக்கிறது.

Sunday, July 7, 2013

மீனவர் போராட்டத்தில் மதிமுக

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மணல் அள்ளப்படு வதைத் தடுக்க வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் தூத்துக்குடி யில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர் விடுதலை இயக்க பொதுச்செயலர் அலங்காரபரதர், மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், நிர்வாகிகள் மனோஜ்குமார், மரியசெல்வம், ஜான்சன், அமலரசு மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.

Sunday, June 16, 2013

மீனவர் ஒற்றுமை ஓங்கட்டும், உரிமைகளை வெல்லட்டும்!

என்னுடைய அருமைச் சகோதரர்களே,

ஒருமுறை கன்னியாகுமரியில் சொன்னேன்:பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்ற 19 மீனவர்களை மீட்டுக்கொண்டு வராவிட்டால், இந்த 
மாவட்டத்துக்கு உள்ளே கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதுபோல, உங்களைப் பாதுகாப்பதற்கு, உங்களுக்குத் தோள் கொடுப்பதற்கு 
என்றைக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
-வைகோ 

தமிழ்நாடு மீனவர் பேரவையின் வெள்ளி விழா 7.5.2011 அன்று சென்னை இம்பி ரீயல் ஓட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் இருந்து....

அலைகடலும் ஓய்ந்து இருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?

Thursday, June 6, 2013

தமிழக மீனவர்கள் உயிர் என்ன கிள்ளுக் கீரையா ?

தமிழகத்து இளைஞன்,கரிகாலன் வழி வந்தவன்,இராஜராஜன் வழி வந்த வன், பராந் தகன் வழி வந்தவன், இராஜேந்திரன் வழி வந்தவன், வருண குலத்தான் வழி வந்தவன், உன் நாட்டின் மீது படையெடுத்து வென்ற இனத்துக்காரன், உன்னைத் தேடி வந்து உதைக்கிற காலம் வரும்.-வைகோ (6.2.2011 )

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து,நாகப்பட்டினத்தில் கழ கத்தின் சார்பில் 6.2.2011 அன்று நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

உப்புக்கடல் சூழ்ந்த இந்த உருண்டை உலகத்தில்,ஒரு தீபகற்பமாகக் கருதப்படு கின்ற இந்தியத் துணைக்கண்டத்தில், 1076 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடற் கரையைக் கொண்டு இருக்கின்ற தாய்த்தமிழகத்தில், இந்த அலைபாயும் கட லோ ரத்தில்தான் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. கொற்கைத் துறைமுகம் இருந்தது. நாகையிலும் துறைமுகம் இருந்தது.

Wednesday, March 7, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 7 & 8

தீர்மானம் எண் 7

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
கச்சத்தீவு மீட்பே தீர்வு…

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நடத்துகின்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தமிழக மீனவர்கள் பலியாவதும், காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதும், கொடிய சித்திரவதைக்கு ஆளாவதும், உயிர் உடைமைகளை இழப்பதும் வாடிக்கையாகி விட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, இந்திய அரசும், கடலோரக் காவல்படையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகையும்
பெற்றுத் தரவும் இல்லை; உரிய முறையில் எச்சரிக்கவும் இல்லை.