Showing posts with label திவிக. Show all posts
Showing posts with label திவிக. Show all posts

Sunday, December 8, 2013

கொளத்தூர் மணி ,விடுதலை செய்யக் கோரி பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னை புரசைவாக்கத்தில் நேற்று (07.12.13 )நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் #வைகோ அவர்கள் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


Friday, December 6, 2013

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை இரத்து செய்ய வேண்டும்

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் உள்துறைஅமைச்சருக்கு #வைகோ கோரிக்கை

#மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட் டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்த போது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறை யினர் கைது செய்து,பொய் வழக்குப்போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப் புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளை யை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.

Tuesday, November 5, 2013

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை - #வைகோ  கண்டனம்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப் பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெய லலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.

Monday, November 4, 2013

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோமாவில் இருந்தாரா ?

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.

Saturday, November 2, 2013

அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது! அரசின் எதேச்சதிகார அடக்குமுறை வைகோ கண்டனம்

அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது! 
அண்ணா திமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை
#வைகோ கண்டனம்

இன்று நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலை வர் கொளத்துர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மேஜிஸ்ரேட் முன்னிலை யில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளா கவே சேலம் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைத்தீவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி, கொலைபாத ராஜபக்சேவை அடுத்த இரண்டு ஆண்டுக ளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக்கும் மன்னிக்க முடியாத அக்கி ரமத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 
மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து, தமிழர்கள் மீது படுகொலையை நடத்தியவனை குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக கீரிடம் சூட்டுகிற ஈனத்தனமான வேலையை இந்திய அரசு செய்தது.

Sunday, October 27, 2013

இலங்கை மாநாட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து ஐநா விற்கு அனுப்பும் மதிமுகவும் திவிகவும்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி ஒன்றிய #மதிமுக,திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழன் சேவை மையம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை( 26.10.13) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில்நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை எதிர்த்தும், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என்பதை வலியுறுத்தியும்,இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

Saturday, October 5, 2013

காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு -மதிமுக , திவிக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி , மன்னார்குடி ஒன்றிய மதிமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங் கப் பட்டது 

தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடை பெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டிய லில் இருந்து நீக்க வேண்டும்,தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும், போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மன்னார்குடி ஒன்றிய மதிமுக, திராவிடர் விடுதலைக் கழ கம்,தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் , மதிமுக மன்னார் குடி ஒன்றிய செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, தமிழன் சேவை மைய நிறுவனர் வாட் டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது.

Saturday, May 18, 2013

முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம்

முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம். தானா தெரு, சென்னை

புகைப்பட தொகுப்பு 


சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை

மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி.....

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

Monday, April 22, 2013

மரணதண்டனைக்கு எதிராக பஞ்சாப்பும் -தமிழகமும்

பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த, பேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிட முனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும், பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில், பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை, பேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, 

பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா,

Sunday, April 14, 2013

சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு வைகோ புத்தகம், உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி

மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் நேற்று  (13.04.2013 சனிக்கிழமை) மாலை சென்னை, தியாகராய நகர். கோபதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .