நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல்!
தமிழக அரசுக்கு #வைகோ கண்டனம்
தமிழ் கலை உலகம் தரணிக்குத் தந்த தவப்புதல்வனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகத்திலேயே ஈடு இணையற்ற நடிகராவார். அதனால்தான் பேர றிஞர் அண்ணா அவர்கள், “ஹாலிவுட் புகழ் நடிகரான மார்லன் பிராண்டோ சிவாஜி கணேசனைப் போல நடிக்க முயற்சி செய்யலாம்” என்றார். அறிவா சான் பெரியார் அவர்களால் “சிவாஜி” என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகத் தை எங்கிருந்தாலும் வாழ்க! என வாழ்த்தினார் பேரறிஞர் அண்ணா. கலைஞ ரின் கனல் தெரிக்கும் வசனங்களுக்கு தன் சிம்மக்குரலால் உயிர் தந்தவர் செவாலியே சிவாஜி ஆவார்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் அவரது நடிப்புக்கு ஆசிய-ஆப்பிரிக்க படவிழா வில் சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்டார். மனித உணர்ச்சியின் அத்தனை கோணங்களையும் தன் கண்களிலும், முக அசைவிலும் காட்டக் கூடிய திறன் அவருக்கு நிகராக உலகில் எந்த நடிகரிடமும் நான் கண்டது இல்லை.