Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

Monday, March 3, 2014

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு! -வைகோ அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு!

#மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் அவர்களின் தந்தையார் டி.சாமுவேல் அவர்கள் இன்று (03.03.2014) காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார்.

Sunday, March 2, 2014

2016ல் மறுமலர்ச்சி தி.மு.க தலைமையேற்கும் அரசு -வைகோ பேட்டி

மார்ச் மாத ரௌத்திரம் இதழுக்கு #மதிமுக பொது செயலாளர் #வைகோ அளித்த சிறப்பு பேட்டி யில் மதிமுக அரசு அமையும் போது செய்யப்போகும் செயல்கள் குறித்து விளக்கி உள்ளார் ..

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரௌத்திரம் இதழுக்கு மதிமுக இணையதள நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளை சொல்லுவோம் ... 

அந்த பேட்டியிலிருந்து குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம் ... 

முழு பேட்டியை படிக்க ரௌத்திரம் இதழ் வாங்கி படிக்கவும் ...

Saturday, March 1, 2014

கடற்கரையில் மக்கள் பெருந்திரள்-வைகோ அறிக்கை

மார்ச் 2-ஆம் தேதி மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
#வைகோ அறிக்கை

1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளி யளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத் தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  , ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடிவதங்கினர்.

7 பேர் விடுதலை குறித்து ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பபு

விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் இதழ் இந்த வாரம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் ..

ஜூனியர் விகடன் இதழில் இருந்து ....

Wednesday, December 18, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 4

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

பரஞ்சோதி

நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர் கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம், ‘பரஞ் சோதி யாத்திரை’; இரண்டாவது பாகம்,‘காஞ்சி முற்றுகை’; மூன்றாம் பாகம், ‘பிட்சுவின் காதல்’; கடைசி நான்காவது பாகம்,‘சிதைந்த கனவு’.

இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான்.1 8 வயது துடிப்புள்ள வாலிபன்.அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதி யை அனுப்பி வைக்கிறார்கள்.

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

Tuesday, December 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 36

நாள்:-10.02.2009

சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை 

ஈழத்தமிழர் படுகொலை...விடுதலைப் புலிகளை அழித்துவிட காங்கிரஸ் வகுத் த சதித்திட்டம்! சென்னை கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ பகிரங்கக் குற்றச்சாட்டு!


இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.

ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

மதிமுக மாணவர் அணி நடத்தும் நிறைவுகட்ட மாநிலப் பேச்சுப்போட்டி

#மதிமுக மாணவர் அணி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய “நாடாளுமன்றத் தில் #வைகோ ” என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட, மண்டல அளவில் வென்றவர்களுக்கு மாநில அளவிலான நிறைவுகட்ட பேச்சுப்போட்டி நடைபெறும்.

நாள்: 22.12.2013 ஞாயிறு காலை 9.30 மணி

இடம்: அரிகாந்த அரங்கம், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8


பங்கு பெறுவோர்

1. தி.பாலமுருகன் D.F.T..,III -அரசு திரைப்படக் கல்லுரி,சென்னை

2. செ.சரவண சித்தார்த் B.E., III-புனித பீட்டர்ஸ் பல்கலைக் கழகம், சென்னை

3. த.இலக்கியா M.Phil-சென்னை கிறித்துவக் கல்லூரி,தாம்பரம்

Monday, December 16, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 3

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு

ஏன் எழுதினேன்?

அந்தக் கல்கி அவர்கள் சிவகாமியின் சபதத்தை ஏன் படைத்தேன் என்று சொல் கிறார். அலைகள் துள்ளி விளையாடுகின்றன. மாமல்லபுரம் கடற்கரை மண லில் அமர்ந்து இருக்கிறார். அருகில், ரசிகமணி டி.கே.சி. அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கல்கி அவர்கள், ‘விட்டகுறை வந்து தொட்டாச்சு’என்று கோபா லகிருஸ்ண பாரதியார் எழுதி இருக்கிற கவிதையை அழுத்தமாகச் சொன்னார். கல்கியின் மனத்திரையில் பல காட்சிகள் வெளிவருகிறன்றன. பல நிகழ்ச்சி கள் தெரிகின்றன. அவர் காதுகளில் சிற்பிகளின் ஓசை கேட்கிறது. கல்லிலே உளிபடுகிற காரணத்தால், அந்த உளி செதுக்குகின்ற சத்தம் கேட்கிறது. நடனக் கலை கண்ணுக்கு தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் படகுகளில் வீரர்கள் பவனி வரும் காட்சி தெரிகிறது’ என்று பழம் பெருமைக்கு உரிய தமிழ் மன்னர்கள் வாழ்ந்த நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட அந்தச் சிற்பங்கள், அவற் றை எல்லாம் பார்த்துவிட்டு, இவை எல்லாம் என் மனக்கண்ணில் தெரிகின் றன என்று வரிசையாக பாத்திரங்களைச் சொல்கிறார்.

கோவையில் வைகோ

கோவை மாநகர் 5வது பகுதி #மதிமுக செயலாளர் கோட்டை ஹக்கீம் மற்றும் புக் சாகுல் ஹமீது ஆகிய இருவீட்டார் இல்ல திருமண விழாவில் தலைவர் #வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஷாகுல்அமீது , இல்லத் திருமணவிழா கடந்த வாரம் கோவையில் நடந்தது. இவ்விழாவில் வைகோ பங்கேற்பதாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினசாமி மறைவையடுத்து, இறுதிச்சடங் கில் பங்கேற்க சென்றார். 

இந்நிலையில் கோவை வந்த வைகோ, போத்தனூரிலுள்ள ஷாகுல்அமீது இல் லத்துக்கு சென்று, மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

Sunday, December 15, 2013

கேரள அட்டப்பாடி -5 ஏக்கருக்கு அதிகமாக இடம் வைத்திருந்தவர்கள் தான் வெளியேற்றப்படுகிறார்கள்

மறைந்த #மதிமுக தணிக்கைக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதனின் திரு வுருவப்படத்தை, ஈரோட்டில் இன்று (15.12.13 )நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து #வைகோ பேசியதாவது:

ஈழத்தில் போர் முடியவில்லை. ஈழப் போராட்டம் புதிய பரிமானத்தை எட்டி யுள்ளது. என் கண் முன்பு ஈழத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். உலகில் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தலைவர்களில் பிரபாகரன் போல யாரும் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை.இந்தியா, இங்கிலாந்து, அமெ ரிக்கா,ரஷ்யா,சீனா, இஸ்ரேல்,கியூபா ஆகிய பலமானநாடுகளின் ஆயுத உதவி யுடன் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. 

இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை என தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.ஜெர்மனி, அயர்லாந்து நாடு களில் நடந்த தீர்ப்பாயங்களில் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள் ளது கூறப்பட்டுள்ளது. அடுத்த அமர்வில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பது குறித்த விவாதம் நடக்கும். இதில் நான் பங்கேற்று பேசுவேன்.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 35

நாள்:-29.4.2009

ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்திய அரசின் துரோகங்களுக்கு, கருணா நிதிதான் கூட்டுப் பங்காளி!

இரண்டாம் உலகப் போரின்போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்க நாஜி கள் திட்டமிட்டுப் படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கரு அறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக் கிறான். இந்தத் தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு,முழுக்க முழுக்க ஆயுத உதவி செய் தது இந்திய அரசுதான்.

1998ஆம் ஆண்டில், அன்றையப் பிரதமர் வாஜ்பாய அவர்கள், டெல்லியில் கூட் டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,‘இலங்கையில் தமிழ்  இனக் கொலை நடத் தும் சிங்கள அரசுக்கு, இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது இல்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதைக் கடைப்பிடித்தது.

Saturday, December 14, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 2

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

கல்கி நாவல்களின் தொடர்ச்சி

அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது, பல கேள் விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தா ளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னாரே, அந்த அடிப்படை யில்,மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப்பிராட்டியையும் அருள் மொழி வர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத் தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தையும், ‘குலோத்துங் கன் சபதம்’ என்ற நாவலையும் எழுதிய விக்கிரமன் அவர்கள், இந்த விழாவுக் குத் தலைமை தாங்குகிறார்.

‘சேது பந்தனம்’ ‘ஈழவேந்தன் சங்கிலி’ போன்ற சரித்திர நாவல்கள் எழுதிய கவு தம நீலாம்பரனுக்கு இங்கே விருது வழங்கப்பட்டது. சரித்திர நாவல்களைப் பலரும் எழுதி இருக்கிறார்கள். ‘கயல்விழி’யும், ‘வேங்கையின் மைந்தனும்’ அகிலன் தந்தார். அற்புதமான நாவல்களைப் படைத்து இருக்கக்கூடிய மணி வண்ணன் என்ற பெயரில் ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ நாவல்களை எழு திய நா. பார்த்தசாரதி அவர்கள், ‘பாண்டிமாதேவி’ , மணிபல்லவம்’ என்ற பெயர் களில் அருமையான சரித்திர நாவல்களை எழுதினார்கள்.

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

வாழும் கலை , தலைவர் பண்டிட் ரவிசங்கருடன் வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன்

#வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத் துதல்,நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல்,உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவை செய்து வருகிறது.

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்-வரவேற்கிறேன் வைகோ அறிக்கை

ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்:

பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அரணாக உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை வரவேற்கிறேன் #வைகோ அறிக்கை

டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத் தக்க பண் பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர் களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தான தீர்ப்பாகும்.

மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புரா தன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண் டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.