Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Saturday, November 9, 2013

எதனாலே இந்த இழிநிலை! கருணாநிதிக்கு ஒரு பகிரங்க மடல்

தி.மு.க. தலைவர் மதிப்புக்குரிய கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.மிகுந்த வருத்தத்துடன் இந்த பகிரங்க மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஐந்துமுறை முதலமைச் சர் பதவியை அலங்கரித்தவர்; திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் கரம் பற்றி, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடைபோட்டு 90 வயதிலும் துடிப்பாக
இயங்குகிற தலைவர் நீங்கள் மட்டுமே.இனமானப் பேராசிரியர் உங்களைவிட
வயதில் மூத்தவர். அவரும் நீங்களும் மட்டுமே பழைய தலைவர்கள் வரிசை யில் பாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லம் உங் கள் வசிப்பிடம் மட்டுமல்ல, இந்திய அரசியலில் டெல்லி அதிகார பீடத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயலகமாகவும் கோ பாலபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பழம் தின்று கொட்டை போட்ட தலை வரான தங்களின் இல்லம் எத்தனையோ சதி ஆலோசனை சபையான முற்ற மாகவும் திகழ்ந்து இருக்கிறது.

Sunday, June 9, 2013

கருணாநிதியின் நெஞ்சுக்கு அநீதி!

கலைஞர் கருணாநிதிக்கு 90 வயது; நாமும் வாழ்த்துகளைக்கூறுவோம். அவரு டைய பிறந்தநாளையொட்டி தி.மு.க.சார்பில் 90 நாட்கள் விழாக்களாம்; அறிவா லய நிலைய வித்வான்களின் கச்சேரி; தமிழ் கொண்டு ஆராதிக்கிறோம் என்று கருணாநிதி அடிப்பொடிகள் ஏற்பாடு செய்துள்ள கவிஞர்களின் ‘கவிமாலை’ என்று கருணாநிதி பிறந்தநாள் விழாக்களை வழக்கம் போல அமர்க்களப் படுத் துகின்றனர்.

ஜூன் மூன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாள் செய்தி என்ன என்று செய்தியா ளர்கள் கேட்டதாகவும், மாலையில் ஒய்.எம்.சி.ஏ திடல் கூட்டத்திற்கு வந்து கேளுங்கள் பதில் கூறுகிறேன் என்று கருணாநிதி கூறினாராம்.அவரே தனது பேச்சில் இதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

Thursday, May 16, 2013

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது!

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின்துரோகத்தைவிட, ராஜபக்சே யின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒரு போதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.- வைகோ (20.11.2009)

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழி வும்,இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன் னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித் ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான்.கரிகாலன் சிங்களவர் களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

Tuesday, April 2, 2013

புலிகளை வைகோ ஆதரிக்க வில்லையாம் ??

புலிகளை வைகோ ஆதரிக்கவில்லை என புத்தகம் போடுகிறார் சுப.வீ ,அதற்கு பேப்பர் கட்டிங் எடுத்து கொடுக்கிறார் கருணாநிதி .

சுப. வீ மீது எங்களுக்கு தனிப்பட விருப்பு வெறுப்பு இல்லை , திராவிட கொள்கையில் பற்று கொண்டவராக சுப.வீ அவர்களை பார்க்கிறோம் , ஆனால் பாவம் அவரின் சகவாச தோஷம் அவரையும் ஆட்டிவிக்கிறது.

13.10.1993 யில் தினமணி நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டதாம் வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என.

Wednesday, March 27, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 2

1996 ஆம் ஆண்டு 

1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.

1996 மார்ச் 5 ஆம் நாள், வைகோ தலைமையில், தூத்துக்குடியில், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. 

1996 மார்ச் 12 ஆம் நாள், தூத்துக்குடியில் கடை அடைப்பும், கருப்புக்கொடிப் போராட்டமும் நடைபெற்றபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகம், முக்கியப்
பங்கு ஏற்றது.