Showing posts with label மாணவர் அணி. Show all posts
Showing posts with label மாணவர் அணி. Show all posts

Tuesday, December 17, 2013

மதிமுக மாணவர் அணி நடத்தும் நிறைவுகட்ட மாநிலப் பேச்சுப்போட்டி

#மதிமுக மாணவர் அணி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய “நாடாளுமன்றத் தில் #வைகோ ” என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட, மண்டல அளவில் வென்றவர்களுக்கு மாநில அளவிலான நிறைவுகட்ட பேச்சுப்போட்டி நடைபெறும்.

நாள்: 22.12.2013 ஞாயிறு காலை 9.30 மணி

இடம்: அரிகாந்த அரங்கம், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8


பங்கு பெறுவோர்

1. தி.பாலமுருகன் D.F.T..,III -அரசு திரைப்படக் கல்லுரி,சென்னை

2. செ.சரவண சித்தார்த் B.E., III-புனித பீட்டர்ஸ் பல்கலைக் கழகம், சென்னை

3. த.இலக்கியா M.Phil-சென்னை கிறித்துவக் கல்லூரி,தாம்பரம்

Saturday, November 16, 2013

தூத்துக்குடி மாவட்ட மாணவ– மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி



கோவில்பட்டியில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) #மதிமுக சார்பில் மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.‘‘நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி சார்பில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையம் அரு கில் உள்ள சவுபாக்கியா டவர்சில் உள்ள கூட்ட அரங்கில் போட்டி நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள், கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடனோ அல்லது கல் லூரியில் படிப்பதற்கான அடையாள அட்டையுடனோ பங்கேற்கலாம்.

Thursday, October 31, 2013

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-மதிமுக மாணவர் அணி

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-#மதிமுக மாணவர் அணி 

திருச்சியில் நடந்த மாணவர் அணி  மாநில துணைச்செயலாளர்கள் கூட்டத் தில்  ம.தி.மு.க. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநில மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் 27.10.13 அன்று நடைபெற்றது.

Saturday, October 26, 2013

மதிமுக பேச்சு போட்டி -மாவட்ட வரியாக வென்றவர்கள்

20.10.13 அன்று  தமிழகம் முழுவதும் #மதிமுக மாணவர் அணி சார்பாக மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக

கன்னியாகுமரி மாவடடம்

முதல் இடம் -லயோலா பொறியியல் கல்லூரி மாணவி ஆனி

இரண்டாம் இடம் -மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி மாணவர் டேவிட் ஜெபசிங்

மூன்றாம் இடம் -அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் முருகேசன்

Wednesday, October 23, 2013

நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் உள்ளிருப்பு போர் – மதிமுக ஆதரவு

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக சஸ் பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 3வது நாளாக பேராசிரியர்கள், மாணவர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு #மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வரலாற்றுத் துறை தலை வர் பீட்டர் பேரின்பராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெய்ஸ் தாசன் ஆகி யோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Sunday, October 20, 2013

மாநிலம் தழுவிய பேச்சு போட்டிகள் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பு

#மதிமுக மாணவர் அணி சார்பாக இன்று (20.10.13 )  தமிழகம் முழுவதும் மாண வர்களுக்கான பேச்சு போட்டிகள் முதல் கட்டமாக ,மாவட்ட அளவில் நடத்த பட்டது.ஒவ்வொரு மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் தமிழக முழு வதும் ஆயிர கணக் கான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்...

இன்றைய போட்டியில் வென்றவர்கள் அடுத்து நிகழும் மண்டல அளவிலான போட்டிகளின் பங்கேற்பார்கள்..


Thursday, October 17, 2013

மதிமுக மாணவர் அணி நடத்தும் பேச்சுப்போட்டி

மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான மூன்றுகட்டப் பேச்சுப்போட்டிமூன்றாயிரம் மாணவர்கள் பங்கேற்பு- மொத்தப் பரிசு ஏழு இலட்சம்!

தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கைகளாய் வளர்ந்து வரும் இளம் மாணவக் கண் மணிகளின் பேச்சாற்றல் திறனை வளர்க்கவும், கொள்கைப் பகைவர் கள் நிறைந்த அவையில் இனத்தின் உரிமைக்காக இருபத்தி ஐந்து ஆண்டுகள் அஞ் சாது போரிட்ட தலைவர் வைகோ அவர்களின் வாதத் திறனை உணர்ந்து உள் வாங்கி, உணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில், மறுமலர்ச்சி தி.மு.க. மாண வர் அணி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக “நாடா ளுமன்றத்தில் வைகோ” என்ற தலைப்பில் மூன்று கட்டப் பேச்சுப் போட்டி களை நடத்துகிறது.

Sunday, September 1, 2013

கூடுதல் பேருந்து -மாணவரணி

கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை

உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

Thursday, August 29, 2013

ஜனநாயக இயக்கம் மதிமுக

அண்ணா விரும்பிய ஜனநாயக இயக்கம் நமது இயக்கம்...!

போர்க்களம் செல்லுகின்ற மன்னவனுக்கு எவருக்கும் அஞ்சாத தீரமும், திண வெடுத்த தோள்களும், விரிந்த மார்பை பாதுகாக்கும் கவசமும், வலக்கையில் எதிரிகளை விளாசும் வாள் வலிவும், இடக்கையில் கேடயமும், சிரசில் மகுடம் தரித்து, பொன்னாலான அணியும், மாணிக்கம், முத்தாலான மாலைகளும் அலங்கரிக்க, மன்னவன் செருக்களம் போவதற்குரிய அணிகலன்கள் சூடப் பெற்று களம் புகுவதுதான் மாவீரர்களுக்கு அழகு என்று நம் சங்கப் பாடல்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் என்னும்
களத்துக்குச் செல்லும் நம் வைகோ என்னும் மன்னவனுக்கு ஈடற்ற இளைஞர் அணியும், மாண்புக்குரிய மாணவர் அணியும்,உறுதிமிக்க தொண்டர் அணியும், வாழ்த்துரைக்கும் மகளிர் அணியும், பாட்டுத் திறத்தாலே மன்னவன் புகழ் பாடும் இலக்கிய அணியுமென அனைத்து அணிகளும் நம் தலைவரை வரிசங் கம் ஊதி வரவேற்று தேர்தல் போருக்கு ஆயத்தப்படுத்து கின்ற பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

Tuesday, August 27, 2013

மாணவர் படையே...

மாணவர் படையே.....
தமிழின மீட்புக்கு கடமையாற்ற வாரீர்!

கலந்துரையாடல் கூட்டத்தில் தி.மு.இராஜேந்திரன் வேண்டுகோள்!

#மதிமுக,மாநில, மாவட்ட மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம் 17.08.2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் மாணவர் அணிச் செயலாளர் தி.மு. இராசேந்தின் ஆற்றிய உரையில் இருந்து...

மாநில துணைச்செயலாளர்களிடத்தில்,மாவட்ட அமைப்பாளர்களிடத்தில் தீர் மானங்கள் தரப்பட்டுள்ளன.என்றைக்கு நமக்கு ஒரு பெயரும், மதிப்பும் வரும் என்றால், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சிக்காக கடமையாற்றினால் நமது பெயர் வெளியே வரும்.

Monday, August 26, 2013

மாணவர்களே நாற்றங்கால் !

மறுமலர்ச்சியின் நாற்றங்கால் மாணவர்களே!

மாணவர் அணி கலந்துரையாடலில் #வைகோ

கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி கலந்துரையாடல்கூட்டம் 17.08. 2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் கருத்துப் பட் ட றையில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர் அணிச் செயலாளர் தம்பி இராஜேந்திரன் அவர்கள் ஒருங்கிணைத்தபடி, இந்த நிகழ்வு, இன்று காலையில் தொடங்கி,அந்தி சாயும் வரையிலும் தொடர்ந்து நடைபெற் றுக் கொண்டு இருக்கின்றது.கழக வளர்ச்சி குறித்து உங்களுடைய கருத்து களை எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

Sunday, August 25, 2013

வைகோவின் உழைப்பும் வீண் போகாது

எவருடைய உழைப்பையும் இயற்கை விரயமாக்கியதில்லை...

#வைகோ வின் உழைப்பும் வீண் போகாது!


தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நிதி
வழங்கும் விழாவும், பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று
இடங்கள் என்னும் முத்திரை பதித்த மாணவர்களைப் பாராட்டுகின்ற அரிய தோர் விழாவும் மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட மாணவர் அணி நடத்திய பாராட்டு விழா நிகழ்வானது கஜப்ரியா அரங்கத்திலும், நிதி வழங்கும் விழா அருண் தங்கும் விடுதி அரங்கத்திலும் நடந்தேறியது.

Saturday, August 17, 2013

மதிமுக மாணவர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  
மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்17.08.2013 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கழக மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.