Showing posts with label வழக்கறிஞர் அணி. Show all posts
Showing posts with label வழக்கறிஞர் அணி. Show all posts

Tuesday, December 3, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 2

இரண்டு கட்சிகளும், இந்த மாநிலத்தை பாழ்படுத்திவிட்டன, வழக்கறிஞர்களே,
உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது!என்று சென்னையில் நடந்த வழக் கறிஞர்கள் மாநாட்டில் #வைகோ உரை ஆற்றினார்.சென்ற பாகத்தின் உரை யின் தொடர்ச்சி வருமாறு:

கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டிப் பேசினார்கள்.நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் வழக்குக்காக,
நான் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக நன் மாறன் சொன்னார்.அந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறும்போது, அதைச் சுவாசிக்கின்ற மக்கள் புற்று நோயால் மடிவார்கள்; 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்கள் பாழாகிப் போய்விடும்;கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்காக, அந்த ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

Monday, December 2, 2013

என் குரு நாதர்கள்! -வைகோ

சென்னையில் நடந்த மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ தனது குரு நாதர்களை நினைவு கூர்ந்தார் ... அவரின் உரையில் இருந்து ....

அர்ச்சுனன் அம்பைத் தொடுப்பதில் வல்லவன் என்று நான் படித்து இருக்கின் றேன். அவனுக்கு அந்தக் கலையைக் கற்றுத் தந்தவர் துரோணாச் சாரியார். அந்த மரியாதைக்காகத்தான்,மகாபாரதப் போரின் தொடக்கத்தில், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியாருக்கு முன்பு அம்புகளைத் தொடுத்து, அவர்கள்
முன்னால் தரையில் குத்திடச் செய்தான் தனஞ்செயன்.

என்னை வழக்கறிஞர் தொழிலில் பயிற்று வித்தவர் அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள். 1964 ஆம் ஆண்டு, திருவேங்கடம் என்ற ஊரில், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை ஆற்ற வந்த போது, அவருக்கு முன்பு நான் பேசினேன். ‘பேச்சை நிறுத்தாதே, தொடர்ந்து பேசு’ என்றார்.கூட்டம் முடிந்தபிறகு, என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய், சுப்பையாத் தேவர் வீட்டில் நடந்த விருந்தில் பக்கத்தில் உட்கார வைத் துச் சாப்பிடச் சொன்னார்.தம்பி நீ எந்த ஊர்? என்று கேட்டார்.மூன்று கல் தொலைவில் உள்ள கலிங்கப்பட்டி என்று சொன்னேன். ‘எப்படி வந்தாய்?’ என்று கேட்டார்.‘சைக்கிளில் வந்தேன்’ என்று சொன்னேன். சைக்கிளை வேறு
ஒருவரிடம் கொடுத்து விட்டு, தனது காரில் என்னை ஏற்றி வைத்துக்கொண்டு, அந்த நடுநிசியில் என் வீடு வரையிலும் கொண்டு வந்து என்னை இறக்கி விட் டுச் சென்றார்.


Thursday, November 28, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்றுவிடவில்லை. ஈழத்தமிழர் களுக்கு நீதி கிடைக்கும் என்று சென்னையில் நடந்த #மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட் டில் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்களின், இரண்டாவது மாநில மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் தலைமை ஏற்று இருக்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற தேவநேயப்
பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரை ஆற்றி விட்டுத் தமிழகம் திரும்பிய போது,சென்னை விமான நிலையத்தில்,பொடா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். அந்த இரவில், அங்கிருந்தே நேரடியாக மதுரைக்குக்
கொண்டு சென்று, நடுநிசியில் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று
ஆஜர்படுத்தவும், அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆணை பிறப்பித்தார்.

Saturday, November 16, 2013

மதிமுக வழக்கறிஞர் மாநாட்டு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் மாநாடு இன்று (16.11. 2013 சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் கழகச் சட்டத் துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்களும், மூத்த வழக்கறிஞர் திரு. கே.எஸ் . தினகரன் அவர்களும் இன்று மாலை சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். 

இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் எண். 1


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக!


உரிமையியல் வழக்குகளில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தமி ழக அரசு 19.01.1982-இல் அரசாணை வெளியிட்டது. ஆனால், 05.01.1994 அன்று கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழி யில் இருக்கலாம் என்று R.O.C. No. 3649/92 F  1 என்ற சுற்றறிக்கையை அப் போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிய கே.ஏ. சுவாமி வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கை காரணமாக கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு களைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வழங்கி வருகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு அனைத்துத் தீர்ப்புகளும் தமிழில் மட்டும்தான் வழங்கப்பட உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Sunday, October 13, 2013

நெல்லை ரயில்வே கோட்டம்-மதிமுக வலியுறுத்தல்

திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என #மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர், புறநகர் மதிமுக வழக்கறிஞர் அணி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டத்துறை துணைச் செயலர் அரசுஅமல்ராஜ் தலை மையில் நேற்று  (12.10.13 ) நடைபெற்றது.