Showing posts with label சங்கொலி. Show all posts
Showing posts with label சங்கொலி. Show all posts

Sunday, December 15, 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு அணைந்தது!

சங்கொலி தலையங்கம்

“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காகவே என் னை அர்ப்பணித்து இருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போ ராடி இருக்கிறேன்.கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய,எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகப்பூர்வமான,சுதந்திரமான சமூகம் என்ற இலட் சியத் தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக் கா கத்தான்.”

தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டபோது, 1964 ஏப்ரல் 23 ஆம் நாள் மேற்கண்டவாறு முழங்கினார் நெல்சன் மண்டேலா.

Monday, December 9, 2013

சிதம்பரத்தின் பகல் கனவு பலிக்காது!

சங்கொலி தலையங்கம் 

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு சிங்கள கொலைவெறியன் ராஜ பக் சேவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தது மட்டுமின்றி,ராஜபக்சே நடத்திய இனப்படு கொலை குற்றங்களிலிருந்து அவரைக் காப்பாற்றவும்,இந்த நிமிடம் வரை செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை மாற்றிவிட லாம் என்று பகல் கனவு காணு கிறது.

அதனால்தான் நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கருத்தரங்கம் நடத்தி, அதில்.‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை யும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசி இருக்கின் றார்.இந்நிகழ்வில், உரையாற்றிய ப.சிதம்பரம் அப்பட்டமான முறையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

Monday, December 2, 2013

மூன்று தமிழரை விடுதலை செய்க!

சங்கொலி தலையங்கம் 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பேர றிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களும் அநியாயமாகத் தண் டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். இந்த வழக்கில் அப்பாவி களான மூன்று பேரும் 22 ஆண்டு களாகக் கொட்டடியில் பூட்டப்பட் டும் கிடக்கின்றார்கள்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேண்டு மென்றே இவர் கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்று இதுவரை கூறப்பட்டு வந்தது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம் இப்போது வெளியாகி இருக்கின்றது.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள “உயிர்வலி”
என்ற ஆவணப்படம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடி களை அம்பலப்படுத்தி உள்ளது.மேலும் அரசியல் சக்திகளால் வழக்கு விசார ணை நடத்திய அதிகாரிகள் இயக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிச் சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையின் போது சி.பி.ஐ. எஸ்.பி.பணியில் இருந்த அவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணை வழங்கப் பட்டு இருந்தது. இது குறித்து, “உயிர்வலி” ஆவணப்படத்தில் தியாகராஜன் அப் போது நடந்தவற்றை ஒப்புதல் வாக்கு மூலமாகப் பதிவு செய்து இருக்கிறார்.

Wednesday, November 27, 2013

ஈழத்தில் இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கைப் பயணம்

சங்கொலி தலையங்கம் 

உலகத் தமிழர்களின் எதிர்ப்பை துச்சமாகக் கருதிய இந்திய அரசு, கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில்,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில்
கலந்துகொண்டார்.

மாநாட்டிற்கு தாம் செல்ல முடியாதது குறித்து ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங்,காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து இருந்தார். மன்மோகன்சிங் பிரதமர் பதவி ஏற்ற ஒன்பதரை ஆண்டு காலத்தில் நடைபெற் ற ஐந்து மாநாடுகளில் இரண்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாட்டில்
எழுந்த எதிர்ப்புதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது அப்பட் டமான பொய் என்பது உலகத்திற்குத் தெரியும். இந்தியாவின் சார்பில், வெளியு றவு அமைச்சர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜபக்சே கூறி இருப் பதில் இருந்தே இந்தியாவும்-இலங்கையும் பேசி வைத்துக்கொண்ட நாடகம் தான் ‘காமன்வெல்த் உச்சி மாநாடு’ என்பது விளங்கும். 53 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே நவம்பர் 15 தொடங்கி, 17 வரை நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மட்டுமே வந்திருந்தனர்.

Sunday, November 24, 2013

வரலாற்று உண்மைகளை மறைப்பது ஏன் ?

“அறிவு பூர்வமான வெறுப்பு மிகவும் மோசமானது”

திராவிடர் கழகம்-தி.மு.கழகம் இரண்டு மட்டுமே திராவிட இயக்கக் கட்சிகளா கும் என்கிற அரிய கண்டுபிடிப்பை அண்ணன் எல்.ஜி. அவர்கள் வெளியிட் டிருக்கிறார்கள்.

“இன்று எத்தனையோ கட்சிகள் திராவிட என்ற சொல்லை தங்கள் கட்சிகளோ டு இணைத்துக் கொண்டிருக்கின்றன.என்னைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு கட்சிகள் தான் திராவிட இயக்கக் கட்சிகள் என்று ஏற்றுக் கொள்வேன். ஒன்று திராவிடர் கழகம்,மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகம்.குறிப்பாக அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக்கொள்ள வில்லை.” - குடும்ப நாளேடு முரசொலி (7.11.2013)

தி.க.; தி.மு.க.வை ஏற்றுக்கொள்வது, சரி.அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் மிகச் சரியானதே.

Thursday, November 21, 2013

மாதிரிப் பள்ளிகள் எனும் மாயை

சங்கொலி தலையங்கம்

உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நாட்டின் அனைத்து சமூக, அரசியல்
மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீரழிவை கொண்டுவந்தது போலவே, கல் வித்துறையிலும் புகுந்து சிதைத்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவையும் இன்றியமையாதன ஆகும். ஆனால், இவை இன்று அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் கைகளுக்கு போய் விட்டன. அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அடிப்படை உரிமைகள் குறித்து பேசு கிறது. இதில் சட்டப் பிரிவு 21ஏ என்பது அரசியல் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2002 ஆம் ஆண்டில், கல்வியும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.

இதன்படி,நாட்டிலுள்ள 6வயது முதல் 14வயது வரை உள்ள குழந்தைகள் அனை வருக்கும் அடிப்படைக் கல்வி புகட்டுவது என்பது சட்டப்பூர்வமாக்கப் பட்டது. பின்னர் 2009 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2010 ஏப்ரல் 1 ஆம் நாள் நடை முறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம், (Right to Education Act-RTE)  குழந்தை களின் கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு சில வழிகாட்டுதல் களை அளித்தது. இதன் மூலம் தனியார் மய கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்ட துடன், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.

Sunday, November 10, 2013

வஞ்சினம் உரைப்போம்!

சங்கொலி தலையங்கம் 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் சேனல்-4 தொலைக்காட்சி இன்னும் என்னென் ன காணொளி காட்சிப் படங்களை ஒளிபரப்பி தமிழர் இதயத்தில் எரியீட்டியை
பாய்ச்சுமோ என்று கண்ணீர் விடுகிறது தமிழ் இனம். சேனல்-4 தொலைக் காட் சி நவம்பர் 1 ஆம் நாள் ஒளிபரப்பிய காணொளி காட்சியைப் பார்த்தவர்கள் எல் லாம் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். தமிழ்ச் சமுதாயத்திற்கு இத்தகைய துயரம் இனி நேரக்கூடாது. நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தொன்மை மிக்க தமிழ்க்குலத்தின் தாரகை ‘ஷோபா’ எனும் இசைப்பிரியா, சிங்கள காடை யர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ர வதை செய்யப்பட்டு, படுகொலையாகிக் கிடக்கும் காட்சிகள் தமிழர் நெஞ்சில்
மட்டுமல்ல, அதைப் பார்க்கும் மனித சமூகத்தைச் சேர்ந்த அனைவர் நெஞ்சி லும் எரிமலை வெடிக்கும்.

Monday, November 4, 2013

வெங்காய அரசியல்!

சங்கொலி தலையங்கம் 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் கூட மக் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக
வெங்காயத்தின் விலை ஆகாயத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதான்
கவலைப்படச் செய்திருக்கிறது. இந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும்
இன்றியமையாத பொருள் ‘வெங்காயம்’.நாடு முழுவதும் இதிலே ‘மட்டும்’ஒரு மைப்பாடு இருக்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய அரசு கூறுவது, வெங் காயம் உற்பத்தி குறைவு என்பதுதான்.வெங்காய உற்பத்தியில்முன்னணி மாநி லங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும்
தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேவையான அளவுக்குஉற்பத்தி செய் யப்படவில்லை; என்று அரசு கூறுவதைப் பார்த்தால் மேலோட்டமாக சரியான
காரணம் போன்று தெரியும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

Monday, October 28, 2013

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

சங்கொலி தலையங்கம் .

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளில்(?)சிகரம் தொட்ட ஊழல்கள் இரண்டு. ஒன்று அலைக்கற்றை ஊழல். மற்றொன்று நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல். நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு முன்பே மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG)நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்பலப்படுத்தினார்.

உச்சநீதிமன்றம் 2013, மார்ச் 12 இல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கள் நடந்துள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி, மத்திய புலனாய் வுத்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பற்றிய விசாரணை குறித்த விபரங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதாக சிபிஐ இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தபோது, உச்சநீதிமன்றம் சிபிஐக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தது.விசாரணை தொடர்பான எந்தத் தகவல்களையும் மத்திய அரசிற்கு அளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

Monday, October 21, 2013

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்

சங்கொலி தலையங்கம் 

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்....தமிழின துரோகம் தொடருகிறது!

இந்தோனேசியா நாட்டின் பாலி நகரில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பொருளா தார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அதன் 21 உறுப்பு நாடுகளின்
தலைவர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுற்ற இம்மாநாட்டில்
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 7 ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி யில், ஜனநாயக சுதந்திரம் கேள்விக் குறியாகிவிட்டது. அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுகின்றனர்.தலைமை நீதிபதியையே குற்றம் சுமத்தி பதவியிலிருந் து நீக்கிவிட்டனர். மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படவில் லை” என்று குற்றம் சாட்டினார்.

Sunday, October 6, 2013

மக்களின் ஆவேச அலை காங்கிரஸின் கடைசி நாட்கள்!

மக்களின் ஆவேச அலை காங்கிரஸின் கடைசி நாட்கள்!

சங்கொலி தலையங்கம் 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லில்லிதாமஸ் என்னும் மூத்த பெண் வழக்கறிஞ ரும், லோக்பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா என் பவரும் 2005 ஆம் ஆண்டில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்கள். “இந்திய அரசியல் குற்றமயமாகி வருகிறது; நாடாளுமன்றத்திலும் சட்டமன் றத்திலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண் டே வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் பொதுநல வழக் கின் சாரம்சம். இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

Sunday, September 29, 2013

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்: அமெரிக்காவுக்கு அடிபணியும் மன் மோகன்சிங் அரசு 

சங்கொலி தலையங்கம் 

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந் தியாவை அமெரிக்க நாட்டின் அடிமை தேசமாக மாற்றிவிட்டது.கடந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான டெல்லி ஆட்சியில், இந்தியா, அமெ ரிக்காவைச் சார்ந்த நாடாக, அமெரிக்காவின் கண் அசைவுக்கு ஏற்ப இயங்கும் கையாலாகாத நாடாக ஆகிவிட்டது. உலகில் பெரும்பாலான நாடுகள் அணு உலைகள் அமைப்பதையும் அணுமின் உற்பத்தியையும் கைவிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கொள்ளை லாபத்திற்கு இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் இன்னும் சில வளர்ந்த நாடுகளும் வழங்கும் அணுஉலைகளை இந்தியாவில் அமைத்து அணுமின் உற் பத்தியைப் பெருக்குவது என்று மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி உடன்பாட்டை 2005 ஆம் ஆண்டு உருவாக்கியது.

Monday, September 23, 2013

முசாபர்நகர் மதக்கலவரம்

சங்கொலி தலையங்கம் 

“1947 பிரிவினையின்போது, எங்களை (முஸ்லிம்களை) ஜவஹர்லால் நேரு வும்,காங்கிரஸ் கட்சியினரும் பிரிந்து செல்லாதீர்கள், இங்கேயே இருங்கள் என்று கூறி ஏன் தடுத்தனர்? இப்போது பாருங்கள், சொந்த நாட்டிலேயே நாங் கள் அந்நியர்கள்ஆக்கப்பட்டுள்ளோம்.” மதக்கலவரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள முகாமைப் பார்வையிட செப்டம்பர் 16 ஆம் தேதி பிர தமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா ஆகியோர் சென் றிருந்தபோது, சம்ஷத் செளத்ரி என்ற முஸ்லிம் பெரியவர் பிரதமரிடம் மேற் கண்டவாறு குமுறினார்.

Sunday, September 8, 2013

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?

சங்கொலி தலையங்கம் 

டெல்லியில் ஆட்சிபுரிகின்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக்கூட்டணி அரசு, தமிழ் இனத்திற்கு எதிரான அரசு - தமிழ்நாட்டிற்கு விரோத மான அரசு என்பதை,மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து இருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

“கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது.ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா-இலங்கைக் கடற்பகுதியில், சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது, கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு இந்தியா மற் றும் இலங்கை அரசுகளுக்கிடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஒப் பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப் பந்தங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் ஜெய லலிதா குறிப்பிட்டிருந்தார்.

Monday, September 2, 2013

உ.பா.ச அவசரத்தில்..

சங்கொலி தலையங்கம் 

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Sunday, August 25, 2013

கடலுக்கு இறைத்த (காவிரி) நீர்!

சங்கொலி தலையங்கம் 

தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பேரபாயம், நீர் பற்றாக்குறையாக
இருக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. தமிழ்நாட்டில்
மழையின் மூலம் கிடைக்கும் நீர் குறைந்து வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகத்தில் ஆண்டு தோறும் மழை சராசரியாக 925 மி.மீ. பொழிகிறது. தென்மேற்கு பருவ மழை 307.60 மி.மீ. வடகிழக்குப் பருவ மழை 438.70 மில்லி மீட்டர் பொழிகிறது.

குளிர்காலத்தில் பொழியும் மழை நீரின் அளவு 42.20 மில்லி மீட்டர்; கோடை
காலத்தில் 136. 50 மில்லி மீட்டராக மொத்தம் 925 மில்லி மீட்டர் மழைநீரை
தமிழகம் பெறுகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால்,
தமிழ்நாட்டிற்கு தென் மேற்கு பருவக் காற்றால் பொழியும் பருவ மழையின் பயன் கிடைப்பது இல்லை. வடகிழக்குப் பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை உருவாக்கிப் பொழியும் மழை, கனமழையாக கொட்டிவிடுகிறது.

Sunday, August 18, 2013

ஜனநாயகம் வென்றது!

சங்கொலி தலையங்கம் 

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையிலி ருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத் தில் வெற்றிக் கணக்கை தொடங்கி இருக்கின்றது. ஆம்! ஆளும் கட்சியினரின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் புறங்கண்டு கன்னியா குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், குருந்தன்கோடு ஒன்றியக் கழகச் செயலாளருமான வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் ஆகஸ்டு 8 ஆம் தேதி, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி ஏற்றார்.

Monday, August 12, 2013

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் ?

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் வழி;

சென்னை எழும்பூர் அரசு ஆவணக் காப்பக இயக்குநரின் அரிய யோசனை!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுமா?

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே அமைந்து உள்ள சிவப்புக் கட்டடம், தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அரசு ஆவணங்களைப் பாதுகாப்பதற்காகக் கட் டப்பட்டது. இராபர்ட் கிளைவ் காலத்திய அரசு நடவடிக்கைகள் தொடங்கி, இன்று வரையிலான மிக முக்கியமான கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

Sunday, August 11, 2013

முல்லைப் பெரியாறு வழக்கில்

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

சங்கொலி தலையங்கம் 
‘தினத்தந்தி’ நாளிதழில் வெளிவரும் கன்னித்தீவு-சிந்துபாத் கதைகூட முடிந்து விடும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் முடியாது போல் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண் டும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளாலும், கேரள மாநில அரசு
எடுத்து வைக்கும் புதிய புதிய ஏற்க முடியாத காரணங்களாலும் தமிழ்நாட்டின்
உரிமையை நிலைநாட்ட முடியாமல், காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

Wednesday, August 7, 2013

சமூக நீதிப்போர் இன்னும் முடியவில்லை!

சங்கொலி தலையங்கம்

உச்ச நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி சரித்திரம் படைத்த தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும்.மருத்துவப் படிப்புகளுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்திட வேண்டும் என்ற மத்திய அரசின் விடாப்பிடியான உத்தரவை உச்ச நீதிமன்றம் தகர்த்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மாண் பமை நீதிபதி அல்டமாஸ் கபீர் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் அளித்த வர லாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பு இது. அவர் தலைமையில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வந்தது.