Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Monday, December 16, 2013

கோவையில் வைகோ

கோவை மாநகர் 5வது பகுதி #மதிமுக செயலாளர் கோட்டை ஹக்கீம் மற்றும் புக் சாகுல் ஹமீது ஆகிய இருவீட்டார் இல்ல திருமண விழாவில் தலைவர் #வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஷாகுல்அமீது , இல்லத் திருமணவிழா கடந்த வாரம் கோவையில் நடந்தது. இவ்விழாவில் வைகோ பங்கேற்பதாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினசாமி மறைவையடுத்து, இறுதிச்சடங் கில் பங்கேற்க சென்றார். 

இந்நிலையில் கோவை வந்த வைகோ, போத்தனூரிலுள்ள ஷாகுல்அமீது இல் லத்துக்கு சென்று, மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Sunday, December 15, 2013

கோவைக்கு மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்க

கோவைக்கு அறிவிக்கப்பட்ட மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனறு தமிழக அரசுக்கு #மதிமுக சார்பாக  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-

கோவை மாநகரம் 21 லட்சம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்கிறது. கோவைக்கு அடுத்த இடத்தில் உள்ள கொச்சியில் கூட மெட்ரோ ரெயில் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.மேலும் பல நக ரங்களில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையிலும் மெட் ரோ ரெயில் திட்டதை தொடங்க வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அரசை வலி யுறுத்தி வருகிறோம்.

Thursday, December 5, 2013

இலவச கட்டாய கல்வி, மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடா ?

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு #மதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

ம.தி.மு.க மாநில இளைஞர்அணி செயலாளர் வே.ஈஸ்வரன் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2013–ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் சேர்க்கை விதிகளுக்கு புறம் பாக உள்ளது. ஆகவே இதை மறு ஆய்வு செய்து முறையான சேர்க்கை எண் ணிக்கையை மறு அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் மறு ஆய்வு செய்த மாணவர்களின் சேர்க்கைக்கு மட்டும்தான் கட்டாய கல்வி உரிமை சட்ட நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

Monday, November 11, 2013

கோவை மெட்ரோ ரயில் ,தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -மதிமுக இளைஞர் அணி

மத்திய அரசால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -#மதிமுக இளைஞர் அணி கோரிக்கை 

கோவை மாநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட் டம் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர் ஆனந்தகுமார் வரவேற்றார்.

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

Thursday, November 7, 2013

கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதிமுக வாகனப் பிரசாரம்:கைது

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதைக் கண்டித்து வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட #மதிமுக - வினரை போலீஸார் நேற்று (06.10.13) கைது செய்தனர்.

கோவை, குறிச்சி நகர மதிமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனப் பிரசாரத்தை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் தொடங்கி வைத்தார்.

Tuesday, November 5, 2013

மதுக்கரை- வாளையாறு சாலைப் பணியை நிறைவேற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

மதுக்கரை-வாளையாறு இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணி யை நிறைவேற்ற மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என #மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள் ளார்.

இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கப்பள்ளி-வாளை யாறு வரையிலான தேசிய நெடுஞ்சாலை-47-ஐ அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதில் மதுக்கரை - வாளையாறு வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள் ளது.

Monday, November 4, 2013

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழுவை மிரட்டும் ஆளும் தரப்பு

ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிகேட்டும் மக்களையும் கட்சிகளுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் ஆளும் தரப்பு ..

கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில்,தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகள், போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணையில் கொட்டப்படுகிறது. இதனால், போத்தனூர், கோண வாய்க்கால்பாளையம்,மகாலிங்கபுரம்,வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 

குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கழிவு களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும்,  எவ்வித பயனுமில்லை. அதே நேரத்தில், தற் போதைய ஆளும் கட் சியினர்,முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது, இப்பிரச் னையில், தீவிரம் காட்டி னர். தற்போது, பதவிகளுக்கு வந்தபின், கண்டுகொள் வதில்லை.பிற கட்சிகளும் மவுனமாகிவிட்டனர்.

Monday, October 28, 2013

வணிக வளாகங்களாகும் பள்ளி மைதானங்கள்-போராட்டகளத்தில் மதிமுக

கோவையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மைதானங்களில் வணிக வளா கங்கள் கட்டவும், வேறு பிற தனியார் பயன்பாட்டுக்காகவும் பயன் படுத்தப்படு வதற்கும், #மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்பதை சிந்திப்பதை விடுத்து, பள்ளிகளையும், பள்ளி மைதானங்களும் கல்விசாரா நிகழ்ச்சிகளுக்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Thursday, October 10, 2013

கோவை மெட்ரோ ரயில் -முதல்வருக்கு மதிமுக மனு

கோவை மெட்ரோ' திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக "கோவைக்கு வரும் "மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுடன் மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரி கள், அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்'  #மதிமுக இளைஞரணி வலியுறுத்தல்.

முதல்வருக்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அனுப்பி யுள்ள மனு:

டில்லி மெட்ரோ திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய ஸ்ரீதரன், கோவைக்கு வரும் 25ம் தேதி வரவுள்ளார். 

Wednesday, October 9, 2013

கோவை தேசிய நெடுஞ்சாலை, மத்திய,மாநில அரசுகள் ?

மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து

மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக #மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் நெடு ஞ்சாலைத்துறை அமைச்சருக்கு எழுதிய கடித விவரம்:

Monday, September 30, 2013

நடைபயணம் நிறைவு ,அடுத்து மத்திய அமைசர்களுக்கு கருப்புக்கொடி

கோவை மாவட்டம் வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி, #மதிமுக  சார்பில் நடைபயணம் நேற்று (29.09.13 )நடந்தது.

வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் (NH 47), கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, பாதியில் நிற்கிறது. ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் இருப்பதால், வாகனங்கள் கவிழ வாய்ப்புள்ளது. உடனடியாக பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக இளை ஞர் அணி  சார்பில், நடைபயணம் வாளையார் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங் கியது. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். 

Saturday, September 28, 2013

மதிமுக இளைஞர் அணி நடைபயணம்

கோவை மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி மதிமுக இளைஞர் அணி சார்பில் நாளை நடைபயணம் நடக்கிறது.

கோவை மாவட்டம் முழுவதும் சாலை போக்குவரத்து, ரயில்போக்குவரத்து, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப் பு வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மதிமுக சார்பில் பிரசார நடைபயணம் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது. 

வாளையார் பகுதியில் இருந்து துவங் கும் இப்பிரசாரம், முக்கிய பகுதிகள் வழி யாக சென்று மதுக்கரையை அடைகிறது.மொத்தம் 15 கி.மீ தூரம் இந்த நடைபய ணம் நடக்கிறது.மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங் கு கிறார். மதுக்கரை ஒன்றிய செயலாளர் வெள்ளிங்கிரி, மாணிக்கவாசகம், ஜோதிபாசு, பேன்சி மணி, கண்ணன் ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர். 

Wednesday, September 25, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

Monday, September 9, 2013

கோவை மாவட்ட இளைஞரணி

கோவை மாவட்ட #மதிமுக இளைஞரணிக் கூட்டம் அமைப்பாளர் ஸ்ரீதர் தலை மையில் நேற்று (௦08.09.13)  நடந்தது. மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ் வரன், மாவட்ட பொறுப்பாளர் ஆ.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதோடு அதிலிருந்து இலங்கை யை நீக்கவும் இந்தியா வலியுறுத்த வேண்டும். 

Thursday, August 22, 2013

மெட்ராஸ் கபே -கோவை

கோவையில் "மெட்ராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என #மதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் வெளியிட்ட அறிக்கை:

Friday, August 16, 2013

பட்டினிப்போர் நடத்தியவர்களைக் கைது செய்வதா?

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, 
பட்டினிப்போர் நடத்தியவர்களைக் கைது செய்வதா?

#வைகோ கண்டனம்

கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக் கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப் பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த னர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச் சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும், சுற்றுசூழல் விதிகளுக்குப் புறம் பாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

Monday, August 5, 2013

கோவை நிதி அளிப்புக் கூட்டத்தில் வைகோ

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க,
நாடாளுமன்றத்தில் கழகத்தின் குரலை வலுப்பெறச் செய்யுங்கள்;
மக்களை அணுகுவோம்; மாற்றத்தை ஏற்படுத்துவோம் !

கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 22.07. 13 அன்று கோவையில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு,கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில்  இருந்து....

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இந்தக் கொங்கு மண்டலம் ஒரு ஜிப்ரால்டர் கோட்டை என்று நான் கடந்த காலங்களில் கூறி வந்ததை
நிலைநாட்டுகின்ற விதத்தில், ‘கொடையால் சிறந்தது கொங்குச் சீமை’ என மாநாடுகளில் உரை ஆற்றியதை உறுதி செய்கின்ற விதத்தில், கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதியாக, 91 இலட்சம் ரூபாயை அள்ளித் தந்து இருக்கின்றீர்கள்.

Thursday, July 11, 2013

தமிழகம் என்ன குப்பை மேடா ?

கேரளாவில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகளை அங்கி ருந்து லாரிகளில் இரவுநேரத்தில் ஏற்றி வந்து கோவையின் புறநகர் பகுதியில் கொட்டுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட் களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சி விமான நிலைய கழிவுகளை ஏற்றி வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்ட முயன்ற லாரி ஒன்று பிடிபட்டது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் ரோடு–கோண வாய்க்கால்பாளையம், செட்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் கடந்த இரு தினத்திற்கு முன்  இரவு ஒரு லாரியில் கொண்டு வந்து ஒரு டன் மருத்துவ கழிவுகளை கொட்டியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் கிடைத் ததும் மதிமுக  மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, July 2, 2013

கோவை மதிமுக மாணவரணி நிகழ்ச்சி

கோவை மாவட்ட மதிமுக மாணவரணியின் சார்பாக கோவை கல்வி மாவட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல்,இரண்டு,மற்றும் மூன்றாம் இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் மற்றும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்