நாள்:-10.02.2009
சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை
இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.
ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.