Showing posts with label தஞ்சை. Show all posts
Showing posts with label தஞ்சை. Show all posts

Wednesday, November 13, 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு:தஞ்சையில் வைகோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை பார்க்க வந்த #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ,அங்குள்ள மாவீரர் மண்ட பத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். மதிமுக.,வினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Saturday, November 9, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் வைகோ

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் #வைகோ முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

புகைப்பட தொகுப்பு


தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், #வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர் களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப் பளவில் கட்டப்பட்டு உள்ளது.

அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று (08.11.13) மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.

Sunday, October 27, 2013

இலங்கை மாநாட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து ஐநா விற்கு அனுப்பும் மதிமுகவும் திவிகவும்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி ஒன்றிய #மதிமுக,திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழன் சேவை மையம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை( 26.10.13) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில்நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை எதிர்த்தும், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என்பதை வலியுறுத்தியும்,இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

Sunday, October 13, 2013

இளைஞர்கள்,மாணவர்கள் என1,500 பேர் மதிமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  மாணவர்கள் என 1500 பேர் நேற்று (12.10.13) இரவு #மதிமுக வில் #வைகோ தலைமையில் இணைந்தனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண் டு அரங்கத்தில் பல்வேறு இயக்கத்தினர்,மாணவர்கள், இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணையும் விழா நடந்தது. விழாவிற்கு துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதய குமார் வரவேற்றார். விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந் து கொண்டு பேசினார். 

Sunday, September 1, 2013

உழவன் விரைவு ரயில்

தஞ்சாவூர் - சென்னை இடையே இன்று அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயிலுக்கு, "உழவன் விரைவு ரயில்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது."தஞ்சாவூர் - சென்னை இடையே புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை போராட்டம் வெற்றி நோக்கி இன்று ரயில் அறிமுகம் செய்யப்பட்டது ..

தஞ்சை மாவட்டத்தில் திமுகவினர் வழக்கம் போல இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு இத்திட்டத்தை கொண்டுவந்தது டி.ஆர் பாலு என்று கூறி நன்றி அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர் ...

Saturday, July 13, 2013

விருதுநகர் பந்தலில்,முழுநாள் மாநாடு

தஞ்சாவூர் கூட்டத்தில் #வைகோ அறிவிப்பு

தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.7.2013 அன்று, தஞ்சாவூரில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் விழா வெகு சிறப்பு டன் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

நெடிய வரலாறு படைத்த இந்தத் தஞ்சைத் தரணியில், தஞ்சை மாவட்டம், திரு வாரூர் மாவட்டம்,நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பாக
நடைபெறுகின்ற, நாடாளுமன்றத் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கழகத்துக்கு புதியதோர் எழுச்சி தருகின்ற விதத்தில், இந்தத் தஞ்சை நகரில்,
நம்முடைய இலட்சியங்களைப் பறைசாற்றுகின்ற பதாகைகளை, பட்டயங் களை, நெடுகிலும் மிளிரச் செய்து, இந்த மண்டபத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை,தன் சக தோழர்களோடு சேர்ந்து அமைத்துத் தந்து வரவேற்று இருக்கின்றீர்கள்.