Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Tuesday, December 17, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

Thursday, December 12, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 1

வட்ட வடிவமான பரந்தமுகம்; அகலமான நெற்றி; காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்தின் தழும்பு; அன்பினை விளக்கும் அழகுமிகு விழி கள்; அரும்பு மீசை; கனிவு பேசும் இதழ்கள்; குள்ளமான உருவம்; பருமனான உடல்; காலர் இல்லாமல் வட்ட வடிவ கழுத்துப்பட்டியுடன் கூடிய சில்க் ஜிப்பா;
அதன்மேல் தோளின் ஒரு பக்கத்தில் கம்பீரமாகத் தவழும் கருப்புச்சால்வை, இத்தனையும் இணைந்த எழில்மிகு உருவத்திற்கு உரியவர் தான் கொங்குச் சீமை தந்த திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் கே.ஏ.மதியழகன்.

“குறுகியதோர் உருவம்; எனிற் பரந்த உள்ளம்!
குறள்போலும் எனக்கூறின் மிகையாகாது!
அறிவினிலே வளங்கொண்டோன்; அன்பில்வளர்ந்து
அடந்தடந்து நம் உள்ளில் இடம் பிடித்தோன்!
இடக்கையில் புகைமணக்கும் வெண்சுருட்டில்
எரிதீயும் சிந்தனையில் பகைசுருங்கும்!
நடக்கையில் பின்னின்று பார்த்தால் ஆகா!
நம் வீட்டுப் பிள்ளை நடைபோலிருக்கும்
நிதியென்னில் குவையென்னில் குறைவே - அண்ணா
நெஞ்சில் மதியே! நிறைவான தம்பி”

என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் மதியழகனின் தோற்றப் பொலிவை எந்நாளும் பேசிக் கொண்டிருக்கும்.

Saturday, September 14, 2013

ஒளி மலர; இருள் அகல

பொடா சிறைவாசத்தின் போது ஒளி மலர; இருள் அகல எனும் தலைப்பில், #வைகோ எழுதிய கடிதங்களில் இருந்து அண்ணாவின் நினைவுகள்

பன்னூறு ஆண்டுகள் வளைத்துவிட்ட வைதீகத்தின் பிடியில், வர்ணாசிரமத் தின் முற்றுகையில், வட ஆரியக்கலாச்சாரத்தின் ஆதிக்கத்தில் சிக்கிக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்பராகவன்றோ அண்ணா தோன்றினார். அவரது எழுத்தும்,
பேச்சும், எண்ணமும் செயலும், உணர்வும், வாழ்வும் ‘சகாப்த நாயகனாக்கிற்று அவரை!அவரது படைப்புகளில் பரவிக் கிடக்கும் எண்ண ஓட்டத்தை,கண்மணி களே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Saturday, August 17, 2013

பேரறிஞரும் பெருந்தலைவரும்

பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும்!

“பொன்னில்லான் பொருளில்லான்
புகழின்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான்
இல்லையென்னும் ஏக்கமில்லான்

என்று பண்ணரசன் கண்ணதாசனால் பாடப் பெற்றவர் பெருந்தலைவர் காமராசர்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,விருதுநகர் நகர சபை உறுப்பினராக, நகர் மன்றத் தலைவராக, இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, ஸ்ரீவில் லிப்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழக முதலமைச்சராக,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக,திரும்பவும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,இரண் டாவதாக,மூன்றாவதாக தமிழகத்தின் முதலமைச் சராகவும், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்
பெருந்தலைவர் காமராசர்.

Thursday, August 15, 2013

விடுதலை நாள் சிந்தனைகள்

நாட்டு விடுதலைக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியா பற்றி கனவு கண்டு, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று” கூத்தாடி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் பாரதியார்!

ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.

Friday, May 10, 2013

பாகப்பிரிவினை - அறிஞர் அண்ணா

தமிழர் தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம்.

வெறும் பொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்ப தை விளக்கி வந்தோம். தமிநாடு தமிழருக்கே என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர்,வெள் ளையர், வட நாட்டார், என்பவைகளால் பாழாக்கப்படுகிறார்கள் என்பதை எடுத் துக்காட்டி இந்தநிலை மாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழ முடியும், இதற்குத் தமிழ்நாடு தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.