Showing posts with label 1987. Show all posts
Showing posts with label 1987. Show all posts

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


Monday, April 15, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 13

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


ஈழத்தமிழர்களின் அரசியல் இலட்சியத்தைத் தீர்மானிக்க நீங்கள் யார்?

இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களை எதிர்த்து, தலைவர் வைகோ மாநிலங்களவையில் தொடர்ச்சியாக கண்டனக்குரல் எழுப்பிய வண்ணம் இருந் தார். பிரதமர் இராஜீவ்காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வைகோ அவர்களுடன் மோதியபோது, அவர்களெல்லாம்
அக்கினிக் கணைகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
ஒற்றைக் குரலாக அப்போது எழும்பிய தலைவர் வைகோவின் விசுவரூபம்
எப்படி இருந்தது என்பதைத் தொடர்ச்சியாகக் காண்போம்.

1987, நவம்பர் 13இல் மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதம்; வைகோ வின் கேள்விக்கணைகள்:

Sunday, April 14, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 12

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே

எங்கள் இனத்திற்காக தூக்கு மேடை ஏறவும் தயார்!

இலங்கையில் இந்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய் தார். அதன்பின்னர் 1987, நவம்பர் 11 இல் நடைபெற்ற விவாதத்தில் தலைவர் வைகோ எழுப்பிய சில கேள்விகளுக்கு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய அரசால் பதில்கூற முடியாது. அதைப்போன்று நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ ஏந்திப்பிடித்த “இனமானச் சுடரை” அணையாமல் பாதுகாத்திடவும் இன்னொருவர் இது வரையில் தமிழ் இனத்திற்கு கிட்டவில்லை. தலைவர் வைகோவின் இடம் இன்னமும் காலியாகவே இருக்கின்றது.தலைவர் வைகோ வின் இந்த உரை அதனை மெய்ப்பிக்கும்.

Thursday, April 11, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 11

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

ஜெயவர்த்தனே தரும் கூலிக்கு கொலை செய்யும் இந்திய அரசு!

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ்-ஜெயவர்த்தனே கையெழுத்து இட்ட உடனேயே இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங் களுக்கு வந்து இறங்கியது.இலங்கையில் அமைதியை நிலைநாட்டப் போவதாக இந்திய அரசு படையை அனுப்பி வைத்தபோது கூடவே,கனரக ஆயுதங்களை யும், பீரங்கிகளையும் கொண்டுசென்றனர். அமைதிப்படைக்கு இத்தகைய போர் தளவாடங்கள் எதற்கு?புலிகள் இயக்கம் இந்திய அரசின் “உள்ளார்ந்த” நோக்கத் தைப் புரிந்து கொண்டுவிட்டது.விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபா கரன் ஒரு தீர்க்கதரிசி. இராணுவ வியூகம் அமைப்பதிலும், அரசியல் முன்னெ டுப்பு களிலும் அவரது தொலைநோக்குப்பார்வை தோற்றதாக சரித்திரம் இல்லை.சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியை தனது குள்ளநரித்தனத்தால் வீழ்த்தி, புலிகளுக்கும் இந்தியாவுக்கும் பகைமை யை வளர்க்க திட்டமிட்டுள்ளதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். அவர் நினைத்த
படியே பின்னர் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.

Wednesday, April 10, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 10

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

புலிகளின் ஆயுதங்களைப் பறித்த ராஜீவ்காந்தி அரசு!

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றிலும் ஒடுக்கும் விதமாக ஒரு தலைப் பட்சமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி அதனை புலி களும், தமிழீழ மக்களும் ஏற்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி அரசு மிரட்டல் விடுத்தபோது, 1987 ஆகஸ்டு 17 இல் மாநிலங்களவையில் தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

“ஆகஸ்ட் 2 ஆம் நாள் (1987) சென்னை கடற்கரையில் பேசுகையில் பிரதமர் ராஜீவ்காந்தி தெரிவித்த ஒரு கருத்து மிகவும் கண்டனத்திற்கு உரியது. “சிங்கள வர்கள் வட இந்தியாவிலிருந்து ஒரிசா, வங்காளம் போன்ற பகுதிகளிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்றும் -தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் கள்” என்றும் ராஜீவ்காந்தி பேசியுள்ளார். கடந்த ஆண்டு சிங்களவெறியன் ஒரு வன் இதே கருத்தை விஷமத்தனமாக ஆரிய-திராவிட மோதல்எனும் எண்ணம் ஏற்படும் வகையில் ஒரு கட்டுரை எழுதி, இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருந்தான். அந்தக் கருத்தினையே தான்
ராஜீவ்காந்தியும் கூறுகிறார். பிரதமருக்கு ஒன்று சொல்வேன். இலங்கையில் உள்ள தமிழர்கள் இருவகையினர். ஒரு பிரிவினர் நான் முன்பு குறிப்பிட்ட
தோட்டத் தொழிலாளர்கள் - இங்கிருந்து சென்றவர்கள்.

Tuesday, April 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 9

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

இந்திய - இலங்கை ஒப்பந்தம்...
தமிழர்களின் முதுகில் குத்திய ராஜீவ்காந்தி!

தமிழீழப் போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கி வருவதைக் கண்ட
அதிபர் ஜெயவர்த்தனே அதிர்ச்சி அடைந்தார். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக மண்ணில் புலிகளின் நிர்வாகம் மேலோங் கியது.சிங்கள இராணுவத்தின் தோல்விகள் பல போர்முனைகளில் விடுதலைப் புலிகளின் படை பலத்தை வெளிப்படுத்தின.

இந்நிலையில்தான் நயவஞ்சக நரியான ஜெயவர்த்தனே அதுவரை இராணுவத் தின் மூலம் புலிகளை அழித்துவிடலாம் என்று திட்டம் தீட்டியவன், தனது வீழ்ச்சி தன் கண்முன்னே தெரியத் தொடங்கிய உடன், இந்தியப் பிரதமர் ராஜீவ்
காந்திக்கு வலைவிரித்தான், 1987 இல் போபர்ஸ் பீரங்கி ஊழலில் சிக்கி,ராஜீவ் காந்தி அமானப்பட்ட நேரம்.