Showing posts with label 1991. Show all posts
Showing posts with label 1991. Show all posts

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


Saturday, October 19, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 33

மே தினம் பொது விடுமுறை அறிவிப்பு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுப்பு வைகோவின் சரித்திரச் சாதனை!

நாடாளுமன்றத்தில்24 ஆண்டுக்காலம் பணி ஆற்றிய தலைவர் #வைகோ வின்
வரலாற்றுச் சாதனைகளில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, தொழிலாளர் வர்க்கத் தின் உரிமைகளை நிலை நாட்டிட ஓங்கிக் குரல் எழுப்பியது மட்டுமின்றி, அவற்றைச் சாதித்துக் காட்டியதும்தான். உலகம் முழுவதும் இன்றும் எழுச்சி யோடு கொண்டாடப் படும் மே தினத்திற்கு இந்திய அரசு விடுமுறை அளித்து அங்கீகரிக்கச் செய்த பெருமை தலைவர் வைகோவுக்கு உண்டு. 1990 ஆம் ஆண்டு மே தினத்தின் நூறாவது ஆண்டின் நிறைவை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடிய நேரத்தில், தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை வழங் கக்கோரி தலைவர் வைகோ வைத்த கோரிக்கையை,அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு அதற்கான உத்திரவைப் பிறப்பித்தார்.

Sunday, September 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 32

காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்

சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!


கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.

ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.

Tuesday, July 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 30

குடியரசுத் தலைவர் மாளிகை காங்கிரஸ் சதி ஆலோசனை சபையா?

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி,பாரதிய ஜனதா கட்சியினால் கவிழ்க்கப்பட்டப் பிறகு,டெல்லி ஆட்சி பீடத்தில் நடைபெற்றவை ஜனநாயகத் தை கேலிக் கூத்தாக்கிவிட்டன.

இந்திய நாட்டு சரித்திரத்தில் இல்லாத வகையில், மத்தியில் 54 நாடாளுமன்ற
உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, சந்திரசேகர் -காங்கிரஸ் கட்சியின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தார்.ராஜீவ்காந்தியின் ஜனநாயக விரோத நடவடிக்கை கள் அனைத்தும் குடியரசுத்தலைவர் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன்ஆதரவு டன் நடைபெற்றது.

Wednesday, May 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 27

பாபர் அந்நியர் என்றால் கைபர், போலன் கணவாய் வழியே வந்த நீங்கள் யார்?

பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்தவர் என்று விமர்சிப்பவர்களை நோக்கி நான்
கேட்பதெல்லாம் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு சிந்து நதி தீரத்திற்குள் நுழைந்த கூட்டம் தானே உங்கள் கூட்டம். -வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

1991ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அமெரிக்காவின் ஆக் கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக முழங்கி ய தலைவர் வைகோ அவர்கள், இந்தியா யார் பக்கம் நிற்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பியது தொடர்பாக 1991, பிப்ரவரியில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தலைவர் வைகோ ஆற்றிய உரை..

Monday, May 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 24

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்றாத ‘நொண்டி வாத்து’ 
இந்தியக் கடற்படை எதற்காக?

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து வருவதை வேடிக்கை பார்த்து வரும் டில்லி காங்கிரஸ் அரசு, தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுவதையும், கொடூரமான முறையில் சித்ர வதை செய்து கோரமாகக் கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்து வரு கிறது.

தமிழக மீனவர்கள்,கடலில் மீன்பிடிக்கச்செல்லும் போது, நமது கடல் எல்லைக் கே வந்து அத்துமீறி மீனவர்களைக் கொல்வதும், படகுகளைத் தாக்கி அழிப்ப தும், மீன்பிடி வலைகளை அறுப்பதும் சிங்களக் கடற்படையினரின் அன்றாடத் தொழில் ஆகிவிட்டது.இந்திய மீனவர்களைக் காப்பாற்ற, நமது கடற்பிரதேசத் தில் உள்ள இந்தியக்கப்பற்படை ஒருமுறை கூட முயற்சித்தது இல்லை.கடந்த 25 ஆண்டுகாலமாக இதே அவலநிலை தான் தொடருகிறது.