Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts
Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts

Wednesday, December 18, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

Monday, December 16, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

Sunday, December 1, 2013

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டுவிழா

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ பங்கேற்பு

சென்னை - எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" எனும் நூலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெப ராஜ், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் முன்ன ணியினரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Friday, April 5, 2013

“நேர்காணல்” வெளியீட்டு விழாவில் வைகோ


தீபச்செல்வனின் கவிதைகள், எழுச்சியைத் தரும்;
ஈழ விடுதலைக்கு எழுத்து ஆயுதம் ஆகும்!


“நேர்காணல்” - தீபச்செல்வன் இதழ் வெளியீட்டு விழா, 29.03.2013 அன்று சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. இதழை வெளியிட்டு, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நெஞ்சில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவதால், என் நினைவு அலைகளிலே, உணர்வுகளிலே நன்றி நிறைந்து இருக்கின்ற ஒரு சூழலில் வந்து பங்கு எடுக்கின்ற நேர்காணல் 6 நேர்காணல்
ஆவது இதழ் வெளியீட்டு விழா,தீபச்செல்வன் என்ற ஈழத்தமிழ்க் கவிஞனை, தமிழ் எழுத்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கு கின்ற, மூண்டு எழுந்த 65 மொழிப் புரட்சியின் தீரமிக்க தளகர்த்தர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, ஈடு இணை அற்ற தன்மான உணர்வு மிக்க எழுத்தாளராகப் பரிணமித்து, சுதந்திரத் தமிழ் ஈழ எண்ணங்களை, எழுத்தில் பேச்சில் வெளிப்படுத்தி வருகின்ற, நான் மிகவும் மதிக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் பா. செயப்பிரகாசம் அவர்களே,