Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Monday, December 16, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

Sunday, October 27, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 4

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 3 யின் தொடர்ச்சி வருமாறு...

அங்கயற்கண்ணியின் தியாகம்

எவ்வளவு வீரத்தோடும் தீரத்தோடும் விடுதலைப்புலிகள் போராடினார்கள்?களத்தில் பலியான முதல் கரும்புலி கேப்டன் மில்லர். முதல் வீராங்கனை
அங்கயற்கண்ணி.

யாழ் குடா நாடு, ஏழு தீவுகளைக் கொண்டது. வேலனைத் தீவில் பிறந்தவள் அங்கயற்கண்ணி. ஒரு முக்கியமான தாக்குதலுக்காக அவள் தேர்ந்து எடுக்கப் படுகிறாள். வீட்டுக்கு வருகிறாள். அம்மாவைப் பார்க்கிறாள். தம்பிகளை நன்கு படிக்க வையுங்கள் என்கிறாள். புறப்படுகையில், அம்மா நான் காற்றோடு காற் றாக விரைந்து போய்விடுவேன் என்கிறாள். அப்போது அந்தத் தாய்க்கு அது புரியவில்லை.காங்கேசன் துறை துறைமுகத்தில்,இலங்கைக் கடற்படையின் ஒரு கட்டளைக் கப்பல் நிற்கிறது. 6300 டன் எடை. அதைத் தகர்ப்பதற்குத்தான் 50 கிலோ எடை கொண்ட அங்கயற்கண்ணி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின் றாள்.17 கடல் மைல், 35 கிலோமீட்டர் நீச்சல் அடித்துப் போனாள். சகதோழிகள் உடன் வந்து அனுப்பி வைக்கிறார்கள்.வெடிகுண்டுகளையும் சுமந்துகொண்டு
போகிறாள். அந்தக் கப்பலின் மீது மோதுகிறாள். வெடித்துச் சிதறுகிறது.பக்கத் தில் நின்று கொண்டு இருந்த இன்னொரு கப்பல் டோரா, அதுவும் வெடிக்கிறது. நெடுந்தொலைவுக்கு வெளிச்சம் தெரிகிறது. தொலைவில் கரையில் நின்று கொண்டு இருந்த தோழிகள் அதைப்பார்த்து ஆரவாரம் செய்கிறார்கள். அதே வேளையில் அங்கயற்கண்ணியை எண்ணி வேதனைப்படுகிறார்கள்.

Saturday, October 26, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 3

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 2 யின் தொடர்ச்சி வருமாறு...

கடமைகள் நிரம்ப இருக்கின்றன;ஆயத்தமாவோம்; செய்து முடிப்போம்!


ஜூலை  1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏன் வந்தது என்பதை,செம்பி யன் போன்ற தம்பிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வடமராச்சிப் போரில் பலத்த அடிவாங்கி, பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினான் சிங்களவன்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்தான். பஃபல்லோ என்ற பெயரில் ஆயுதக் கவச வண்டிகள் வாங்கிக்கொண்டு வந் தான். எதுவுமே புலிப் படைக்கு முன்னால் எடுபடவில்லை.

நான் ஈழத்தில் இருந்தபோது, திரும்பி இந்தியாவுக்குப் போக மாட்டேன் என்று
சொன்னேன். அப்போது இந்திய இராணுவத் தளபதி கல்கத்,சென்னையில் மு தல் அமைச்சர் கருணாநிதியைச் சந்திக்கிறார். அதற்குப் பிறகு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கோபால்சாமி இலங்கைக்குப் போயிருக் கிறார்.கட் சிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு அறிக்கை விடுகிறார். அந்த
அறிக்கை அங்கே வந்தது. அதை அவர்கள் தலைவர் பிரபாகரன் முன்னிலை யில் வாசித்துக் காண்பித்தார்கள்.

Wednesday, October 23, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 2

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 1 தொடர்ச்சி வருமாறு:

ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்


இந்த நூலில், எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை முன்வைத்து இருக் கி றார் புகழேந்தி தங்கராசு. அடுத்து, ஈழத்தில் நடந்த துயரங்களை விவரிக்கிறார். நான் தொடக்கத்தில் கூறியதைப்போல, அந்தப் புனிதவதியின் துயரமான வாழ் வை, உச்சிதனை முகர்ந்தால் என்ற காவியமாக ஆக்கினாரே,அவர் கேட்கிறார்: 1996 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், குமாரபுரம் என்ற இடத்தில் இருந்து, பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது மாணவி தனலெட்சுமி, தம்பியோடு சைக்கிளில் வந்து கொண்டு இருக்கின்றார். இராணுவ நடமாட்டத்தைப் பார்த் துப் பயந்துபோய், ஒரு கடைக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறார்.அதை சிங் கள இராணுவம் பார்த்து விடுகிறது. அவளைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள். மிகக் கொடூரமாக அவளைச் சின்னாபின்னப்படுத்துகிறார்கள். தங்கைகள்
இருக்கின்ற இடங்களில் பேசுகையில், நான் என்சொற்களில் மிகக் கவனமாக இருப்பேன்

Tuesday, October 22, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 1

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா 14.10.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. நூலை வெளி யிட்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை வருமாறு

தாயகக் கனவினில் சாவினைத் 
தழுவிய சந்தனப் பேழைகளே!
எங்கள் குரல் ஒலி கேட்கிறதா, குழிகளில் வாழ்பவரே
எங்கே? எங்கே? எங்கே?
இப்பக்கம் உங்கள் விழிகளைத் திறவுங்களேன்
ஒருதரம் எங்களுக்கு உங்கள் திருமுகம் காட்டிவிட்டுத்
திரும்பவும் உறங்கச் செல்லுங்களேன்

Tuesday, October 15, 2013

இயக்குனர் புகழேந்தியின் புத்தக வெளியீட்டு விழா

இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா நேற்று (14.10.13) சென்னையில் நடை பெற்றது.

இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா வில் #மதிமுக பொது செயலாளர்  #வைகோ அவர்கள் நூலை வெளியிட்டார்.

திரைப்பட நடிகரும் , திராவிட இயக்க பற்றாளருமான  சத்தியராஜ் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை அறிமுகம் செய்துவைத்து உரை யாற்றினார். நிகழ்ச்சியில் அற்புதத்தம்மாள், வெள்ளையன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் எடுக்க பட்ட படங்கள்....

Sunday, April 14, 2013

சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு வைகோ புத்தகம், உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி

மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் நேற்று  (13.04.2013 சனிக்கிழமை) மாலை சென்னை, தியாகராய நகர். கோபதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .