Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, December 18, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 4

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

பரஞ்சோதி

நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர் கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம், ‘பரஞ் சோதி யாத்திரை’; இரண்டாவது பாகம்,‘காஞ்சி முற்றுகை’; மூன்றாம் பாகம், ‘பிட்சுவின் காதல்’; கடைசி நான்காவது பாகம்,‘சிதைந்த கனவு’.

இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான்.1 8 வயது துடிப்புள்ள வாலிபன்.அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதி யை அனுப்பி வைக்கிறார்கள்.

Monday, December 16, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 3

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு

ஏன் எழுதினேன்?

அந்தக் கல்கி அவர்கள் சிவகாமியின் சபதத்தை ஏன் படைத்தேன் என்று சொல் கிறார். அலைகள் துள்ளி விளையாடுகின்றன. மாமல்லபுரம் கடற்கரை மண லில் அமர்ந்து இருக்கிறார். அருகில், ரசிகமணி டி.கே.சி. அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கல்கி அவர்கள், ‘விட்டகுறை வந்து தொட்டாச்சு’என்று கோபா லகிருஸ்ண பாரதியார் எழுதி இருக்கிற கவிதையை அழுத்தமாகச் சொன்னார். கல்கியின் மனத்திரையில் பல காட்சிகள் வெளிவருகிறன்றன. பல நிகழ்ச்சி கள் தெரிகின்றன. அவர் காதுகளில் சிற்பிகளின் ஓசை கேட்கிறது. கல்லிலே உளிபடுகிற காரணத்தால், அந்த உளி செதுக்குகின்ற சத்தம் கேட்கிறது. நடனக் கலை கண்ணுக்கு தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் படகுகளில் வீரர்கள் பவனி வரும் காட்சி தெரிகிறது’ என்று பழம் பெருமைக்கு உரிய தமிழ் மன்னர்கள் வாழ்ந்த நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட அந்தச் சிற்பங்கள், அவற் றை எல்லாம் பார்த்துவிட்டு, இவை எல்லாம் என் மனக்கண்ணில் தெரிகின் றன என்று வரிசையாக பாத்திரங்களைச் சொல்கிறார்.

Saturday, December 14, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 2

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

கல்கி நாவல்களின் தொடர்ச்சி

அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது, பல கேள் விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தா ளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னாரே, அந்த அடிப்படை யில்,மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப்பிராட்டியையும் அருள் மொழி வர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத் தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தையும், ‘குலோத்துங் கன் சபதம்’ என்ற நாவலையும் எழுதிய விக்கிரமன் அவர்கள், இந்த விழாவுக் குத் தலைமை தாங்குகிறார்.

‘சேது பந்தனம்’ ‘ஈழவேந்தன் சங்கிலி’ போன்ற சரித்திர நாவல்கள் எழுதிய கவு தம நீலாம்பரனுக்கு இங்கே விருது வழங்கப்பட்டது. சரித்திர நாவல்களைப் பலரும் எழுதி இருக்கிறார்கள். ‘கயல்விழி’யும், ‘வேங்கையின் மைந்தனும்’ அகிலன் தந்தார். அற்புதமான நாவல்களைப் படைத்து இருக்கக்கூடிய மணி வண்ணன் என்ற பெயரில் ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ நாவல்களை எழு திய நா. பார்த்தசாரதி அவர்கள், ‘பாண்டிமாதேவி’ , மணிபல்லவம்’ என்ற பெயர் களில் அருமையான சரித்திர நாவல்களை எழுதினார்கள்.

Wednesday, December 11, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 1

சிவகாமியின் சபதம்’#வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

அனைவருக்கும் வணக்கம். “விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்டகுறை வந்து தொட்டாச்சு” என்ற சொற்களால் தூண்டப்பட்டு இந்த சிவகாமியின் சப தத்தை எழுதினேன்’ என்று கூறிய கல்கி ஆசிரியர் அவர்களுக்குப் புகழ் விழா நடத்துகிறோம்; உரையாற்ற வாருங்கள்’ என்று கலைமாமணி விக்ரமன் அவர் கள் அழைத்தவுடன், கிடைத்தற்கு அரிய வாய்ப்பாகக் கருதி இசைவு அளித் தேன். இத்தகைய விழாவில் என்னை உரையாற்றுகின்ற தகுதிக்கு உடையவ னாக, உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் திற்கு, அதன் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.


நான் பெற்ற பெரும்பேறு


இலக்கிய உலகில் கல்கி அவர்களின் பெருமைகளை எடுத்துசொல்ல, தஞ்சை யில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. புகழ்மிக்க பூண்டி வாண்டையார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தஞ்சை விழாவில், ‘பொன்னியின் செல்வன்’ பற்றி உரையாற்றுகின்ற பெரும்பேறு பெற்றேன். இன்று தலைநகர் சென்னையில், ‘சிவகாமியின் சபதம்’ குறித்து உரையாற்றுக எனப் பணித்து இருக்கிறீர்கள்.

Thursday, October 17, 2013

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 2

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வரின் படைப்புகள்

140 நூல்கள் எழுதி இருக்கிறார் ம.பொ.சி.

முதல் நூல் 1944 இல் ‘கப்பலோட்டிய தமிழன்’. கடைசி நூல், ‘எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு’, 1995 ஆம் ஆண்டு எழுதியது.பதினான்கு நூல்கள் சிலப் பதிகாரத்தைப் பற்றி,பதின்மூன்று நூல்கள் திருக்குறளைப் பற்றி,வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி நான்கு நூல்கள்,பாரதியைப் பற்றி எழுதுகிறார். சாகித் ய அகாதமி பரிசு பெற்று வந்ததே, அந்த ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதினா ஒருமைப்பாடு’ ர். ஒவ்வொரு பாடலிலும் நுணுக்கமான பொருளைத் தந்து, எண்ணற்ற நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.

Tuesday, October 15, 2013

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 1

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு விழா மற் றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா 05.10.2013 சனிக்கிழமை அன்று சென் னையில் ம.பொ.சி.அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்
அரசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்

Sunday, August 18, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 6

அவன்தான் தமிழன்

இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந் தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உல கில் எங்கே இருக்கிறது? என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக் கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும்.

“முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொடு டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்துநாமே”

Thursday, August 15, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 5

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

இரவு நேரத்தில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறித் தளைகளை அறுத்துக் கொண்டு அனைத்தையும் கடித்துப் போட்டுவிட்டு ஓடுகின்றன. ஆத்திரம் அடைந்த மன்னன் வாதவூரரைச் சிறையில் பூட்டுகிறான். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன. இறைவன் மேலும் திருவிளையாடல் செய் கிறான். வைகையில் தண்ணீர் பெருக்கு எடுக்கிறது. காலங்கெட்ட காலத்தில் வைகையில் தண்ணீரா? கரை உடைத்துப் பாய்கிறதே வெள்ளம் என்று கவலைப்பட்ட மன்னன் கரையை அடைப்பதற்கு வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து பணியாற்றக் கட்டளை இடுகின்றான்.

Wednesday, July 17, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 4

ஆம். இந்தத் திருவாசகம் எப்படி வந்தது?

தமிழில், சைவ இலக்கியத்தில் பன்னிரு திரு முறைகள் உண்டு. பன்னிரு திரு முறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்த ரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தந்தவை. எட்டாவது திருமுறை மாணிக்கவாச கரின் திருவாசகம் - முதல் பகுதி திருவாசகம்; இரண்டாம் பகுதி திருக்கோவை யார்! ஒன்பதாவது திருமுறை ஒன்பது அடியார்கள் தந்த திருமுறைகள்.திரு மாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், சேதுராயர், கண்டரா தித்தர், பூந்துருத்திக் காடநம்பி,புருடோத்தம நம்பி,திருவாழிய அமுதனார், வேணாட்டு அடிகள் என்று ஒன்பது அடியார்கள் தீட்டியதுதான் ஒன்பதாம் திருமுறை. பத் தாம் திருமுறை திருமூலர் தந்த திருமந்திரம். 11-ஆம் திருமுறை காரைக்கால் அம்மையார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி இவர்கள் தந்தவை. 12-ஆம் திருமுறை சேக்கிழார் தந்த ‘பெரியபுராணம்’. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளின் அடிப்படையும் ‘நம சிவாய’ என்ற ஐந்து எழுத்துதான். இந்த ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்தை வைத்துத்தான் சிவபுராணத்தைத் தொடங்குகிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகத் தைப் பற்றி வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை இராமலிங்க அடிகளார் கூறும் போது,

Monday, July 8, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 3

ஆற்றல் எங்கிருந்து வந்தது?

நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சொன்னேன். இந்த நாட்டின் கவ னத்துக்கு வராமல் போன காரணத்தினால் சொன்னேன். ஒரு கொரியாக் காரன் சாதிக்காததை, சீனாக்காரன் சாதிக்காததை, ஜப்பான்காரன் சாதிக்கா ததை, ஓர் இந்தியன் - ஒரு தமிழன் - ஒரு தென்னாட்டுத் தமிழன் எங்கள் பண்ணைப்புரத்து இளையராஜா சாதித்து இருக்கிறார். அந்த இளையராஜாவுக்கு ஆற்றல் எங்கி ருந்து வந்தது? இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழ் இசை என்ற காரணத்தினால் தடைகளை உடைத்து எறிந் து கொண்டு, அந்தத் தென்னாட்டுத் தமிழன் இசையைப் படைத்து இருக்கின் றார். இசை எங்கே இருந்து வந்தது? சாம வேதத்தில் இருந்து வந்தது அல்ல. ‘ச ரி க ம ப த நி’ என்றார்கள். சட்சமம், ரிஷிபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் - சரிகமபதநி என்று சொன்னார்கள்.

Sunday, June 30, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 2

இன்பச் சிலிர்ப்பு!

நெருக்கடி காலத்தில் சிறைச்சாலையின் உயர்ந்த மதில் சுவர்களுக்கு உள்ளே 12 மாத காலம் நான் அடைபட்டுக் கிடந்த 1976 ஆம் ஆண்டில், காற்றின் அலை களோடு தவழ்ந்து வந்த ஒரு பாடல் என் செவிகளில் மோதியபோது, என் உடலில் இன்பச் சிலிர்ப்பும், பரவசமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதிலும், மாலையில் பறவைகள் மரங்க ளைத் தேடி ஓடுகிற வேளையிலும், அந்தத் திரை இசைப்பாடல் தொலைவில் இருந்து வர வர, இந்தப் பாடலைத் தந்தவர் யார்?இசை அமைத்தவர் யார்? கிராமத்து மணம் கமழுகின்ற இந்த இசை எங்கோ வயல் வெளிகளில் ஒலித் தத் தெம்மாங்குச் சத்தம் போல் கேட்கிறதே, அது ஒரு வித்தியாசமாகப் படு கிறதே என்று நான் திகைத்தேன். அந்தப் பாடல்தான்

Wednesday, June 26, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 1

உலகத்தில் தோன்றிய முதல் இசை-தமிழிசை
இசை சாம வேதத்திலிருந்து வந்தது அல்ல


திருவாசகம் சிம்ஃபொனி வெளியீட்டு விழா - #வைகோ இசை ஆய்வுரை

பொருநை ஆற்றின் சங்கீதம்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரம் 
நாட்டுப் புறப்பாடல்களின் பிரவேசம்  
தெற்குச் சீமையின் எங்கள் சீதனமாம் 

இளையராஜா அவர்களின்அருட்கொடையாக ஆன்மிகப் பாடல்களைப் பல் வேறு இசைக் கருவிகளோடும், பாடல் ஒலித்திடுகின்ற பல வகைக் குரலோ டும் பிணைத்து - இணைத்து இசைப்பெட்டகமாகத் ‘திருவாசகம் ஆரடோரி யோ’ என்னும் படைப்பினை வெளியிடுகின்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுச் சிறப்பித்து, கடமை காரணமாக விடை பெற்றுச் சென்று இருக்கின்ற மத்திய அமைச்சர் எனது இனிய நண்பர் மாண்புமிகு ஜெயபால் ரெட்டி அவர் களே, முத்தமிழ் நாட்டுக்கு இசையின் மூலமாகப் புகழ்முடி சூட்டிய இசை மாமன்னர்- இந்த விழாவின் நாயகர் இளையராஜா அவர்களே, கருத்து உரிமை யின் கவசமாகத் திகழ்கிற ‘இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் பெருமதிப்புக் குரிய என். ராம் அவர்களே, வெள்ளித் திரையில் ஜொலிக்கின்ற உன்னதமான நட்சத்திரம் பெருமதிப்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களே,