Showing posts with label தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு. Show all posts

Wednesday, December 18, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

Monday, December 16, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

Thursday, April 25, 2013

சிங்கள வீரர் சங்கக்காரா விரட்டி அடிப்பு !

இது குறித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்ந்த பாரி மைந்தன் தெரி வித்த செய்தி :-

இன்று (24.04.13) காலை இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் வோல்வோ நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருவதாக தகவல் கிடைக்க, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் நண்பர்கள் இணைந்து அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை பார்வையாளர்கள் போல 200 பேர் முற்றுகை இட்டோம்.

மாணவர்கள் கூடியிருக்கும் செய்தி அறிந்த காவல்துறை,வோல்வோ நிறுவன அதிகாரிகளிடம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகூட்டத்தில் ஊடுருவியுள்ளனர்.