ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்:
பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அரணாக உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை வரவேற்கிறேன் #வைகோ அறிக்கை
டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத் தக்க பண் பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர் களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தான தீர்ப்பாகும்.
மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புரா தன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண் டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
