Showing posts with label தில்லி. Show all posts
Showing posts with label தில்லி. Show all posts

Saturday, December 14, 2013

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

Thursday, June 20, 2013

இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறி ?

ஈழத்தமிழருக்கு நீங்கள் இழைக்கின்ற துரோகம் தொடருமானால், வருங்கால இளைய தலைமுறை இப்படியே இருக்காது.-வைகோ 

ஈழத்தமிழருக்கு இந்திய அரசின் துரோகம் தொடருமானால்
இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்!

தில்லி ஆர்ப்பாட்டத்தில் வைகோ எச்சரிக்கை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில்12.8.2011 அன்று பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தில்லி நாடாளுமன்ற சாலை யில், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு, அனைத்து நாடு கள் மன்றத்தில் சிங்கள அரசுக்குத்தரும் ஆதரவுப் போக்கினை நிறுத்திக் கொள் ளவும் சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத் தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய தேசிய லோக்தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரணவீர் சிங் பிரஜாபதி ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற் றினர். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-