Showing posts with label மதியழகன். Show all posts
Showing posts with label மதியழகன். Show all posts

Tuesday, December 17, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

Thursday, December 12, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 1

வட்ட வடிவமான பரந்தமுகம்; அகலமான நெற்றி; காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்தின் தழும்பு; அன்பினை விளக்கும் அழகுமிகு விழி கள்; அரும்பு மீசை; கனிவு பேசும் இதழ்கள்; குள்ளமான உருவம்; பருமனான உடல்; காலர் இல்லாமல் வட்ட வடிவ கழுத்துப்பட்டியுடன் கூடிய சில்க் ஜிப்பா;
அதன்மேல் தோளின் ஒரு பக்கத்தில் கம்பீரமாகத் தவழும் கருப்புச்சால்வை, இத்தனையும் இணைந்த எழில்மிகு உருவத்திற்கு உரியவர் தான் கொங்குச் சீமை தந்த திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் கே.ஏ.மதியழகன்.

“குறுகியதோர் உருவம்; எனிற் பரந்த உள்ளம்!
குறள்போலும் எனக்கூறின் மிகையாகாது!
அறிவினிலே வளங்கொண்டோன்; அன்பில்வளர்ந்து
அடந்தடந்து நம் உள்ளில் இடம் பிடித்தோன்!
இடக்கையில் புகைமணக்கும் வெண்சுருட்டில்
எரிதீயும் சிந்தனையில் பகைசுருங்கும்!
நடக்கையில் பின்னின்று பார்த்தால் ஆகா!
நம் வீட்டுப் பிள்ளை நடைபோலிருக்கும்
நிதியென்னில் குவையென்னில் குறைவே - அண்ணா
நெஞ்சில் மதியே! நிறைவான தம்பி”

என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் மதியழகனின் தோற்றப் பொலிவை எந்நாளும் பேசிக் கொண்டிருக்கும்.