Monday, March 26, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்தியாவின் மனிதாபிமானக் கொடி அரைக்கம்பத்தில் பறப்பது ஏன் ?

இலங்கையில் சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே அரசு தமிழர்களை நர வேட்டையாடிய நேரத்தில் மாநிலங்களவையில் பதின்மூன்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்து தலைவர் வைகோ எடுத்துரைத்த நெகிழ்ச்சி மிக்க கருத்துகள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் இதயத்தில் ஈரம் கசியச் செய்தது .1984 ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் வைகோ கொண்டு வந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து 1984 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மாநிலங்கள் அவையில் உரை ஆற்றினார்.அப்பொழுது இந்திராகாந்தி தெரிவித்த கருத்து.அதுவரை இந்திய அரசு கடைபிடித்து வந்த ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறை யில் மாற்றம் உருவாகியிருப்பதை உலகத்திற்கு உணர்த்தியது .



"இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் ,இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள்" பிரதமர் இந்திராகாந்தி அறுதி யிட்டுக் கூறினார் . அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை, அப்படியே தலைவர் வைகோ பின்னாளில் பொதுக் கூட்டங்களிலும் நேர்காணல்களிலும்
எடுத்தியம்பினார்.

தமிழ் ஈழத்தை உருவாக்கிக் கொடுங்கள் 

வருத்தம் தோய்ந்த உள்ளத்துடன் வைகோ ஈழ மக்கள் துயரங்களை நாடாளுமன்றத்தில் பேசியபோது ,அதை உற்று கவனித்த பிரதமர் இந்திர காந்தி அம்மையார் அவர்கள்.

" I share his concerns. Tamils are the original inhabitants of the North & East of the island "

" வைகோவின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.இலங்கையின் வடக்கு கிழக்கு பூமியில் வாழும் தமிழ் மக்கள் அந்த மண்ணின் பூர்வகுடிமக்கள்" என்று குறிப்பிட்டார்.


தமது கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அன்னை இந்திரகாந்தி இவ்வாறு பதிலளித்துப் பேசியதைக் கேட்டவுடன் நமது தலைவர் வைகோ மிகுந்த நெகிழ்ச்சியுற்றார். நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்ட பிரதமரை சந்திக்க வைகோ. விரைந்து சென்றார் .

நாடாளுமன்ற முற்றத்தில் வைகோ தம்மை நோக்கி வருவதைக் கண்ட பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் வைகோவை தமது அருகில் அழைத்தார். அப்போது " இலங்கைத் தீவின் தமிழர்கள் பூர்வகுடிமக்கள் " என்று கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார் வைகோ .

" Madam, we are grateful to you for your kind observatiohn. You can create Tamil Eelam as you Created Bangladesh "

" ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் தங்களின் நிலைப்பாட்டிற்கு நான் நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகிறேன், தாங்கள் பங்களாதேசத்தை உருவாக்கித் தந்ததைப் போல தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுங்கள். தமிழர்கள் நாங்கள் காலம் காலமாக தங்களுக்கு கடமைப்பட்டிருப்போம் " என்று வைகோ கூறியதைக் கேட்ட அம்மையார், " How can it be? Tamils are scattered in other parts like plantation Tamils and in the South. They will get killed if any military action is taken." 

" அது எவ்வாறு இயலும் ? இலங்கையில் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர் களாக மலையகத்திலும், தெற்கு பகுதிகளிலும் வாழ்கிறார்களே, இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையில் இறங்கினால் அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்களே ? " என்று பதில் கூறினார்.

உடனே தலைவர் வைகோ அவர்கள் 

" Madam, You could have a blueprint. You could evolve a strategy of creating Tamil Eelam and as well as protecting Tamil workers. The strategy can be worked out." 

" தமிழ் ஈழத்தை உருவாக்குத் தருவதற்கு உரிய திட்டத்தைத் தங்களால் உருவாக்க முடியும். மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடத் தேவை யான வியூகத்தையும் அமைக்க முடியும். அத்தைகைய வியூகத்தைத் தாங்கள் நினைத்தால் நடைமுறைப்படுத்த முடியும் ." என்று பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, மத்திய அமைச்சர்கள் சிலர் பிரதமர் அருகில் வர, வைகோ பேச்சை நிறுத்தினார்.

உடனே இந்திரா காந்தி அவர்கள் வைகோ அவர்களிடம் ,

" You have to co-operate with me, instead of getting excited over the issue."

" இந்தப் பிரச்சனையில் உணர்ச்சிமயமாக ஆவதை விட எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பின்னர் கவனிப்போம்." என்று தெரிவித்து விட்டு விடைபெற்றார்
                                                                                                        
                                                                                                                தொடரும் ........................
நன்றி

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment