Thursday, March 1, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று தடை விதித்ததற்குப் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோ பாத்தியாய அமர்வில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இன்று இடம் பெற்றிருந்தது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் தூக்குதண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களும் தூக்குத் தண்டனை வழக்குகள், கருணை மனுக்கள் குறித்த அனைத்து விபரங்களையும் மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சிங்வி அறிவித்திருந்தார். ஆனால், ஒருசில மாநிலங்களில் இருந்து மட்டுமே தகவல்கள் தரப்பட்டுள்ளன.



எனவே புல்லர் வழக்கு உட்பட மூன்று தமிழர் வழக்கையும் பின்னர் ஒரு தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சிங்வி அறிவித்தார். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜரானார். கழகப் பொதுச்செயலாளர் வைகோ, வழக்கறிஞர்கள் ஜி.தேவதாஸ், லதா கிருஷ்ணமூர்த்தி, ஜெயந்த் முத்துராஜ், பிரபு, பாரிவேந்தன் இந்த வழக்கில் ஆஜரானார்கள்.


‘தாயகம்’                                                                            தலைமைக் கழகம்
சென்னை-8                                                                     மறுமலர்ச்சி தி.மு.க.
01.03.2012

வழக்கறிஞர் திரு .ராம் ஜெத் மலானி , மதிமுக  பொதுச் செயலாளர்  வைகோ மற்றும் மதிமுக வழக்கறிஞர்கள்  

4 comments:

  1. நன்றி முத்து அவர்களே

    ReplyDelete
  2. தமிழர்களுக்கு எங்கு ஒரு இன்னல் என்றாலும் ஓடோடி சென்று காப்பாற்றுகின்ற பாங்கு அண்ணன் வைகோ-வை பார்த்து நம்ம மெய் சிலிர்க்க வைக்கிறது.

    இவன் - ச.விஜயன்

    ReplyDelete
  3. நன்றி விஜயன் அவர்களே

    ReplyDelete