குந்தி மேய்ந்து குடல் வளர்க்கும் கூட்டம்!
கலி பூங்குன்றனுக்கு சில கேள்விகள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையோ, அவர் இணைந்திருக்கும் டெசோவைப் பற்றியோ, அதில் இணைந்திருக்கும் மற்றவர்களைப் பற்றியோ வைகோ குறை சொல்லவில்லை. கருணாநிதி நாடகமாடுறார் என்கிறார் வைகோ.
தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் என்பதற் கொப்ப உமக்கென்னவந்தது?
ஓய்ந்த நேரத்தில் போனா உப்புப்புளி மிளகாய்க்காகு மென்றாளாம் ஒருத்தி. அதைப்போல நாம் தி.மு.கவில் இருந்தாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ சாடினால் இடைவெட்டுக் கூலி கிடைக்குமென்று
எழுதுகோலைத் தூக்கிவிட்டீரா?
8.3.2013 விடுதலையில் முன்னவர் பிராமணாள் பின்னவர்சூத்ராள் என்று தலைப்பிட்டு நீர் எழுதிய வற்றிலிருந்தே என் கேள்விகளைத் தொடுக்கிறேன். தனி ஈழமே தீர்வு என்கிற கோரிக்கைகளில் டெசோ யாருக்கும் குறைந்ததல்ல என்கிறீர்.
டெசோவைப் புதுப்பித்து தம்மை அதற்குத் தலை வராக்கிக் கொண்ட கருணாநிதி என் உயிருள்ளபோதே தமிழ் ஈழத்தைப் பார்த்துவிடுவேன். அதற்கு உயிர் கொடுக்கவும் தயார் என்றார்.
பிரச்சனை தீர டெசோவின் குறிக்கோள் தனித்தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை. கருணாநிதி பேச்சு (30.6.2012 விடுதலை)
தனித்தமிழ் ஈழம் பெற்றிட அனைவரும் ஒன்றுபடுவோம். திமுக தலைவர் டெசோ தலைவர் கலைஞர் முழக்கம் (17.5.2012 விடுதலை) தலைப்புச் செய்தி - எங்களை நாங்கள் பலியிட்டுக் கொண்டாலும் கவலையில்லை. ஈழம் பெற்று
அங்குள்ளத் தமிழர்களுக்கு, சகோதரர்களுக்கு, சகோதரி களுக்கு, தாய்மார் களுக்கு, அண்ணன் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவொம் - பேச்சு.
இவ்வளவும் பேசிய பிறகு 12.8.2012 அன்று நடந்த டெசோ மாநாட்டில் தனித் தமிழ் ஈழத்தீர்மானம் போடவில்லையே ஏன்?
மாநாட்டுத் தீர்மானம் 4 இல் இலங்கைத் தமிழர்கள் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ள இந்தியா ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று கூறப்படுகிறதே. அவர்களே முடிவு செய்து கொள்ள இங்கெதற்கு டெசோ. தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு என்று
இவர் ஏன் வீண் வசனம் பேசுகிறார். பிறகேன் தீர்மானத்தில் நழுவல்?
இந்திய வெளியுறவுத்துறை 9.8.12 அன்று ஈழம் என்ற பெயரில் மாநாடு நடத்தக் கூடாது என்று கருணாநிதிக்கு ஓலையனுப்பியது.
அதன் பிறகு அதற்கு ஒப்புதல் தந்து 11.8.12 அனுப்பிய ஓலையில், இந்தியா தூதரக உறவு கொண்டுள்ள எந்த ஒரு நாட்டின் இறையாண்மையையும்
ஒற்றுமையையும், கேள்விக்குறியாக்கும் எந்த ஓரறிவிப்பையும் செய்யக் கூடாது என்று எச்சரித்த பின்பு,
இலங்கை வெளியுறவுத்துறை 6.8.12 அன்று டெசோ மாநாட்டைக் கண்டித்த தோடு, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கையரைக் கண்காணிக்கு மென்று அறிக்கைவிட்ட பின்பு டெசோ தலைவரின் வேடம் கலைந்துவிட்டதே, புதிய வேடம் புனைந்து, புதிய வசனம் பேசினாரே
இலங்கை அமைச்சரின் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படை புனையப் பட்டவை. இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் உயர்த்தத் தான் இந்த மாநாடு. இதைப்புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலை அளிக்கிறது.
அறிக்கையே கவலை அளிக்கிறதாமே.எப்படி இந்த வசனம். இதைத்தான் நாடக மாடுகின்றார் என்று சொன்னார் வைகோ. இது நாடகமில்லை என்றால்
வேறென்ன?
புலிகளை ஆதரிப்பதைக் கைவிட வேண்டுமென்று மார்க்சிய கம்யூனிஸ்டு கேட்க வைகோ அதற்கு ஒத்துக் கொண்டதாக தினகரன் செய்தியைக் காட்டுகிறீர். “எந்தத் தரப்பிலும் ஒருவர் கருத்தை இன்னொருவர் மீது திணிக்க
மாட்டோம் என்று தானே சொல்லியுள்ளார். இதன் பொருள் புரியவில்லையா? பள்ளிப் பிள்ளைகளைக்கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.
காங்கிரசோடு திமுக கூட்டணி வைத்து இருந்தாலும், மோத வேண்டியபோது
மோதாமலில்லை என்று வக்காலத்து வாங்குகிறீரே; எந்த மகனுக்கு மந்திரி,
பேரனுக்கு மந்திரி, துணைவி மகளுக்கு மந்திரி கேட்டு மோதி மூக்குடைந்து
வந்ததுதானே நீங்கள் மோதிய மோதல் வரலாறு.
பிகாரில் ராபிரிதேவி (356 ஐப் பயன்படுத்தி) அரசைக் கலைத்ததை
ஆதரித்ததற்காக கொள்கையைக் கைகழுவ எப்போதும் தயாரானவர்தான்
வைகோ என்று குற்றம் சாட்டுகிறீர்.
அது அப்பட்டமான பொய். எந்தக் காலத்திலும் 356ஐப் பயன்படுத்துவதை வைகோ ஆதரித்ததே இல்லை.
1998 இல் தமிழக தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிய போது, அதை பகிரங்கமாக எதிர்த்த கொள்கை வீரன் வைகோ என்பதை உமது மரமண்டை மறந்துவிட்டதா?
இதே 356ஐப் பயன்படுத்தித் தம்முடைய ஆட்சியைக் கலைத்த இந்திரா காந்தியை ஆதரித்தபோது கருணாநிதியை எப்படி எழுதினீர் என்பதைப் பார்ப்போமா?
மிசாக் கொடுங்கோல் ராணி இந்திரா காந்தியும் அம்மையாரின் கொடுமைக்குப் பிறகுங்கூட ஓடோடிச் சென்று ஆதரித்தீர்களே கூட்டணி அமைத்துக்
கொண்டீர்களே.
அதற்குப் பெயரென்ன அடிவருடித்தனமா, அடிமைத்தனமா, ஆல வட்டம், சுழற்றும் தனமா என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
மிசா கொடுமைக்குப் பலியான சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் பிணத்தின் மீது நின்று கொண்டு பதவிக்காக இந்திரா காந்திக்கு மாலை போட்ட யானைப்
பசியாளர், நாற்காலி பிரியர், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற வெறியர், தமிழினத் தலைவர் என்றெல்லாங்கூட உயர்த்தினோமே.
இவ்வளவு தாழ் நிலைக்கு உரியவரை Throw out the Rascals என்ன கலிபூங்குன்றன். நினைவிருக் கிறதா நீர் எழுதியவை தான். 4.7.1994 விடுதலையைப் புரட்டிப் பாருங்கள்
இந்த மணிவாசகங்களை. கருணாநிதியும், செயலலிதாவும் தங்கள் பத்திரிகையில் வைகோவை வசைபாட எழுதியதை எல்லாம் எடுத்துப் போட்டு விடுதலைப்புலிகள் பிரச்சினையில் கூட தம்பி பிரபாகரன் பிரச்சனையில் கூட உண்மையா யில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதா.
புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். அது என் கருத்துரிமை என்று உச்ச நீதிமன்றத்தில் தருக்கமாடி வெற்றிபெற்று பொடாவை உடைத்து வெளிவந்த வரலாற்றாளர் வைகோ.
கடவுள் மறுப்பைப் பேசிய பார்ப்பன எதிர்ப்பை சொல்லிக்கொண்டு அய்யா பெரியார்க்கு என்றெனக் குவித்து வைத்துள்ள செல்வத்தைக் குந்தி மேய்ந்துக்
குடல் வளர்க்கும் கூட்டம் வைகோவை வசைபாடக் கூடாது
கட்டுரை தந்தவர் :- புலவர் க.முருகேசன் அவர்கள்
கட்டுரை வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment